
கற்பூரம் கரையலாம் , கட்சி கரையலாமா ? கட்சியை விட்டு விலகும் முன்னாள் அமைச்சர் செம்மலை கேள்வி.
நல்ல கேள்வி ,பதில் சொல்ல வேண்டியவர் தான் யார் என்று தெரியவில்லை !!
அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு திமுக முன்னாள் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அறிவிப்பு.
அடுத்த தேர்தலுக்கு தான் வருவார் போல தெரியுது !!
திமுக குறித்து பொய்களை பரப்பினால் உண்மையை உடைப்போம் மு க ஸ்டாலின்.
நெசமாவா ?
நான் முதலமைச்சர் என்ற கருத்தை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டேன் திருமாவளவன்.
தலைவரே அவர்களே விளையாட்டா தான் சொன்னாங்க !!
டெல்டா மாவட்டம் எப்போதும் திமுக பக்கம் தான் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
இன்னுமா நம்பறீங்க ?
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ராகுல் காந்தி கனவு காண்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு.
நீங்க சட்டமன்றத்தில் ஜெயிச்சு அமைச்சராக கனவு கண்டீங்களே அதே மாதிரி தானே ?
எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என ஜோதிடம் கூற முடியாது திண்டுக்கல் சீனிவாசன்.
ஆமா கரெக்டு தான் ஜோதிடர் பதவியே காலி ஆயிடுச்சு !!
திராவிட மாடல் ஆட்சி தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் மு.க ஸ்டாலின்.
இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க !!
தமிழக கடன் குறித்து தொழில் துறை அமைச்சர் அவதூறு பரப்புவது விஷமத்தனமானது தங்கம் தென்னரசு கண்டனம்.
மேடம் உண்மையை சொல்லி இருக்காங்களோ !
ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்க திமுக.
நீங்க விடாத ரீலா ?
விஜய் மீது எனக்கு பொறாமை கிடையாது ரஜினிகாந்த்.
அப்படியா ?
கேரளத்தில் ராகுல் காந்திக்கு எதிராக சுவரொட்டிகள்.
இது எந்த கோஷ்டி வேலைன்னு தெரியலையே ?
பிரதமர் மோடியை 22-ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்.
பாசிச பாயாசம் சாப்பிடுவார் "
ஆதாருடன் வருபவருக்கு மட்டுமே மது விற்பனை.
ஏதோ இதுக்காவது ஆதார் பயன்படுகிறதே ?
அதிமுக அம்மா மக்கள் முன்னேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் டிடிவி தினகரன் அறிவிப்பு.
மொத்தத்தில் பாவம் சிபிஐ
மத்திய கல்வி அமைச்சரை ஏன் நீக்கவில்லை ராகுல் காந்தி கேள்வி
நீங்க சொல்லிட்டீங்க இல்ல கண்டிப்பா நீக்க மாட்டாங்க ?

Leave a comment
Upload