
சோழர்கள், உலகில் பல நாடுகளை வென்று ஆட்சி நடத்தியதால் பல நாடுகளில் செப்பேடுகள் பரவி கிடக்கின்றன .
இந்த செப்பேடுகளை மீட்டு மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை ரொம்ப காலமாக இருந்தது.
செப்பேடுகள் நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த செப்பேடுகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
செப்பேடுகளை ஆனைமங்கலச் செப்பேடுகள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் விஜய நாட்டு மன்னனான மாறா விஜய துங்கவர்மன் தன் தந்தையின் பெயரில் நாகையில் கட்டிய சூடாமணி பன்ம புத்த விகாரத்திற்காக ஆனைமங்கலத்தை சுற்றியுள்ள 26 கிராமங்களை தானமாகக் கொடுத்தது குறித்து ராஜேந்திர சோழன் 21 செப்பேடுகளில் தாமிர சாசனம் செய்தார்.
இதில் 5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும்,
16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன.
சமஸ்கிருதத்தில் உள்ள பகுதி சோழ மன்னர்களின் பரம்பரையையும்...
தமிழில் உள்ள பகுதிகள் சோழ வம்சத்தையும் குறிப்பிடுகின்றன.
21 செப்பேடுகளும் சோழர்களின் புலி சின்னம்,இரண்டு விளக்குகள், மீன் வடிவங்கள், சமஸ்கிருத உரை பொறிக்கப்பட்ட முத்திரை வளையத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
ராஜேந்திர சோழனின் பேரான முதலாம் குலோத்துங்க சோழனால் புத்த விகாரத்துக்கு அளிக்கப்பட்ட தானத்தை அவர் காலத்தில் உறுதி செய்யவும், மேலும் விரிவாக்கிய தானத்தை அளிக்கவும் மூன்று ஏடுகளைக் கொண்ட இரண்டாவது தொகுதியை கொண்டதாக அமைந்துள்ளது.
இந்த இரு செப்பேடுகள் தொகுதிகளை ப்ளோரன்சியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரின் வம்சத்தினர் பாதுகாத்து வந்துள்ளனர்.
லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியத்தில் ஒப்படைத்தனர்.
இந்த இரு செப்பேடுகளும் சோழர்களின் முழுமையான வரலாற்று கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் ஆதாரம், இதை மீட்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.
பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வரப்பட உள்ளதாக மே 14-ஆம் தேதி பிரதமர் தனது வலைதளத்தில் பதிவு செய்து அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்திருந்தார்.
நீண்ட ஆண்டுகளாக இந்த செப்பேடுகளை கொண்டுவர பலர் முயற்சி செய்தாலும்.....
நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடியினால் இது சாத்தியமாகி இருக்கிறது என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியம்.
டச்சு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியா வந்த நெதர்லாந்து நாட்டினர் பழவேற்காடு ,சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சோழமண்டல கடற்கரை உள்ள இடங்களில் சுமார் 200 ஆண்டுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார்கள். அப்போதுதான் இந்த செப்பேடுகள் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
மோடி முயற்சி செய்து செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்து விட்டார்.
தமிழக அரசியல்வாதிகள் பிரதமரை பாராட்ட மனமில்லை.

Leave a comment
Upload