
[பி. பி. சௌத்ரி, காந்திநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்]
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கூட்டுக் நாடாளுமன்றக் குழு (JPC), மக்களவை, சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் சுமார் 7 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்க முடியும் என்று கூறுகிறது.
இது மட்டுமா?
இது நிர்வாகத் திறனை மேம்படுத்தும்,
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை 1.6 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்
என்றும் JPC தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினருமான பி. பி. சௌத்ரி, காந்திநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ வைத்தால் என்ன என்ற ஒரு ஐடியாவை மோதி முன்னெடுத்து அதை ஆராய முற்பட்டார்.
இந்த முன்மொழிவை ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை பிரதமர் நரேந்திர மோடி அமைத்திருந்தார்.
இம்முன்மொழிவு JPC-யின் பரிசீலனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அக்குழு தனது அறிக்கையைத் தயாரிப்பதில் சுமார் 186 நாட்களைச் செலவிட்டது.
அதன் அறிக்கைப்படி, மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து நடத்துமாறும்; அதனைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த முன் மொழிவு சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு (129-வது திருத்த) மசோதா, 2024’ மற்றும் ‘யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2024’ ஆகியவை தொடர்பான கூட்டுக் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள், இந்த வாரத்தில் மூன்று நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
பி. பி. சௌத்ரி தலைமையில் வந்திருந்த JPC உறுப்பினர்கள், காந்திநகரில் உள்ள ‘கிஃப்ட் சிட்டி கிளப்’பில் (Gift City Club), தலைமைச் செயலாளர் எம். கே. தாஸ், காவல்துறைத் தலைவர் (DGP) டாக்டர் கே. எல். என். ராவ் மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டனர்.
JPC-யில் அதன் தலைவரைத் தவிர, மக்களவையைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் என மொத்தம் 39 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பின்ன என்னங்க! எப்ப பாரு? இந்தியா பூராவும் வருடம் முழுவதும் ஏதோ தேர்தல் நடந்து கொண்டே இருகிறது. இதனால் தேர்தல் தேதி அறிவித்த தேதி முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு ஆட்சி அஃப் மோடுக்கு போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. மீதி நேரத்தில் மக்களுக்காக இயங்கிகிறதா என்று சொல்வதற்கில்லை.
மேலும் அனாவசியமாக இலவசங்கள் எல்லாம் அள்ளி வீசப்படுகிறது.
பெற்ற ஐந்தாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற கட்சி அடுத்த ஐந்தாண்டுகள் வரை ஆட்சி நிர்வாகத்தில் முழு மனதுடன் ஈடுபடலாமில்லையா?
இது சட்டமானால், பாஜாகவிற்குத் தான் செம அடியாக இருக்கும். ஏனெனில், அந்த கட்சி ஆளும் இந்திய மாநிலங்களில் தற்போது தான் தேர்தல் நடந்து முடிந்துள்ளன.
எனினும் இந்த ரிஸ்கை எடுக்க மோதி விழைகிறார் தான். இதன் மூலம் லோக்கல் தலைவர்களின் பலம் பரீட்ச்சிக்கப்படும். கட்சிகளுக்கு இது வயிற்றில் புளி கரைக்கின்றதென்னமோ நிஜம் தான்.

Leave a comment
Upload