
பூர்ணாமான நடிகர் குணசித்திர நடிகர் பூர்ணம் விஸ்வநாதனை அறியாதவர் யாருமில்லை. ஆல் இந்தியா ரேடியோவில் பணி. சுதந்திரம் அடைந்தது என்பதை தன்குரல் மூலமாக தெரியப்படுத்தியவர்.
நாடகம் மூலமாக திரைத்துறையில் நுழைந்தவர். சுஜாதாவின் நாடகங்களில் நடித்தவர். ஒரு நாடகத்தில் ஒருகாட்சி இவரின் கைக்கடிகாரம் திருடிய திருடனிடம், இந்த கடிகாரம் சரியாக ஒடாது அடிக்கடி கையை அசை என்பார்.
ஆசை திரைப்படம். முதலில் பிரகாஷ்ராஜை ஆதரித்து, அஜீத்தை மட்டமாக பேசும்போதும் சரி தன் மகளுக்கு மாப்பிள்ளையாக நடித்த பிரகாஷ்ராஜ் தான் வில்லன் என்ற காரணம் என்ற விஷயம் தெரிய வர அப்போ பார்க்கணும் அவரின் முகபாவங்களை.
பாலச்சந்தர் இயக்கத்தில் வறுமையின் நிறம்சிவப்பபில் அசத்தியவர். அதேபோல தில்லுமுல்லுவில் டாக்டராக அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் என்பதை ஏற்ற இறக்கத்துடன் சொல்வதை பார்க்க வேண்டுமே.
மகாநதி வேறுமாதிரியான நடிப்பு. சில நேரங்கள்ல மறைந்த குணசித்திர நடிகர் எஸ்.வி. ரங்காராவ் ஞாபகத்திற்கு வரும்.
திருமலைதென்குமரியில் அர்ச்சகர் வேடம்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

1980ல் நடந்த ஒரு நாடக நிகழ்வில் வாங்கிய ஆட்டோகிராப் இது.

Leave a comment
Upload