தொடர்கள்
விளையாட்டு
ஐ பி எல் சீசன் 19 (2026): வாரம் 8 – பால்கி

20260422222253596.jpg

22 மே 2026

இன்று தொடரின் 67ஆவது மேட்ச் நடக்கிறது. ஆடுபவர்கள் முதலிட பெங்களூருவுக்கும் மூன்றாமிட ஹைதராபாத்துக்கும் இடையே நடக்கிறது.

முதலிரண்டு ரேங்க் வாங்கும் அணிகளுக்கு அரை இறுதி ஆடி வென்றவர் நேரே இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி விடும். கூடுதல் செய்தியாவது, இந்த முதலிரண்டு ரேங்க் வாங்கும் அணிகளுக்கிடையான போட்டியில் தோற்கும் அணிக்கு இன்னுமொரு அரை இறுதி போட்டி ஆட வாய்ப்பு கிடைக்கிறது.

எப்படியெனில், மூன்றாம் நாலாம் ரேங்க் வாங்கின அணிகளுக்கிடையே ஆடப்படும் போட்டியை எலிமினேட்டர், அதாவது நாக் அவுட் போட்டியாகும். தோற்கும் அணிக்கு அந்த போட்டியோடு தொடர் முடிந்தது என்று அர்த்தம்.

இது இப்படியிருக்க, அந்த நாக் அவுட்டில் வெற்றி பெற்றவர் இனி தான் அரை இறுதி போட்டி ஆடப்போகிறார். ஆம், முதல் போட்டியில் தோற்றவருடன் ஆடுவது தான் அந்த அரை இறுதி போட்டி.

இதில் வெல்பவர் முதல் போட்டியில் வென்றவரோடு ஆடுவது தான் இறுதி போட்டி.

கடைசி போட்டியிலும் வெற்றி பெறாமல் போனதால் சென்னை அணி தொடரின் ப்ளே-ஆஃப் மேட்ச்சுகளில் ஆடும் தகுதியை இழந்த மூன்றாம் அணியானது. மற்ற இருவர் பத்தாமிட லக்னௌவும், ஒன்பதாவதாக வந்த மும்பையும் தான். என்ன ஒரு சாக்கு சொல்லிக்கொள்ளலாம் என்றால், மும்பையும் லக்னௌவும் 4 போட்டிதான் ஜெயிச்சது எனலாம். இன்றளவில் அவர்களுக்கு இன்னொரு தலா ஒரு மேட்ச் உள்ளது. ஆனால், அனைத்து 14 மேட்சுகளும் ஆடி 6 மேட்ச்சுகள் ஜெயித்தோம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஆனா பாருங்க, தோணி இந்த தொடர்ல இதோ வர்ராரு இதோ வர்ராருனு சொல்லியிருந்தும் வராமலேயே போயிட்டார். கடைசி மேட்ச்சில் ஆடுவார் என ஒரு பேச்சிருந்தது.

20260422223220511.jpg

20260422223334501.jpg

முதல் மூன்றிடங்களை முறையே பெங்களூரு, குஜராத் மற்றும், ஹைதராபாத் பூர்த்தியாக்கிவிட்டதன. கடைசி அந்த நாலாவது இடத்திற்கு, ராஜஸ்தான் தனக்கென இருக்கும் அந்த கடைசி மேட்ச்சில் மும்பையை வெற்றி கொண்டு விட்டால், பஞ்சாப் தனது கடைசி மேட்சில் தோற்றுவிட்டால் அந்த அணி தான் நால் இடத்திற்கு முன்னேறும். அவர்கள் அதில் தோல்வி கண்டால் சுவாரசியம் அதிகமாகும். கொல்கட்டா, டெல்லி இவைகளுக்கிடையே இருக்கும் தத்தமது கடைசி போட்டியில் வெல்லணும், அந்த நிலை ராஜஸ்தான் அணியுடன் நெட் ரன் ரேட் கணிப்பில் நிர்ணயிப்பதில் போய் முடியும்.

அடுத்த வாரம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கொடுக்கும்.

இளம் புயல் வைபவ் சூரியவண்ஷி இது வரை மூன்று ஆட்ட நாயகன் அவார்டுகளை பெற்றிருக்கிறார். அவரது அணிக்கு இன்னும் ஒரு மேட்ச் இருக்கிறது. அதில் அவரது ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதில் வெற்றி பெற்றால் அவரது அணி எந்த நெட் ரன் ரேட் கணிப்பு கணக்குகளில் சிக்காமல் நேரே நாலாமிடத்திற்கு சென்று விடலாம்.

சமீபத்தில், லக்னௌவுடன் ஆடிய ஆட்டத்தில் 38 பந்துகள் ஆடி, 10 சிக்சர்கள், 7 பௌண்டரிகள் அடங்கிய 93 ரன்கள் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து தான். பயமென்ற அறிகுறி இங்கிச்சேனும் இருக்கணுமே. ஊஹூம்.

பஞ்சாப் அணி தோல்வி என்றால் என்ன என்று முதல் ஆறு ஆட்டங்களில் ஜெய்த்து, ஒரு ஆட்டத்தில் மழையினால் ஒரு பாயிண்ட் பெற்று முதல் இடத்தில் இருந்தது. அப்புறம் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை? அடுத்த ஆறு மேட்சுகளிலும் தோல்வி தான். இவர்களுக்கு ஒரு மேட்ச் இன்னும் பாக்கி அதில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான், அதற்கிருக்கும் கடைசி போட்டியில் தோற்றால் இவர்களுக்குத்தான் நாலாமிடம் பிடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

638 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வாங்கியிருப்பவர் குஜராத் அணியைச் சேர்ந்த சாய் சுதர்ஷன்.

2026042222260035.jpg

24 விக்கெட்டுகள் எடுத்து பர்ப்பிள் கேப் வாங்கியிருப்பவர் பெங்குளூரின் புவனேஷ்வர் குமார்.

138 டாட் பந்துகள் போட்டு அசத்துபவர் குஜராத்தின் முகமத் சிராஜ்.

அதிகமாக சிக்சர்களை அடித்தவர் வரிசையில் டீனேஜ் வைபவ் சூரியவண்ஷி 53 சிக்சர்களை அடித்துள்ளார்.

அடுத்த வாரம் சந்திப்போம்.