
2026 ஹார்முஸ் நெருக்கடி: பேராசிரியர் . யோ. நித்தியானந்தம் உடனான நேர்காணல்
1. அறிமுகம் மற்றும் பின்னணி
பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள், உலகையே அதிர வைத்தன. இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நட்புநாடுகளைத் தாக்கியதுடன், உலக வர்த்தகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியையும் (Strait of Hormuz) முற்றுகையிட்டது. இந்தப் பாதை வழியாகத்தான் உலகிற்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி (LNG) எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படுகிறது. சமீபகாலமாக ஈரான் துறைமுகங்களுக்கு கப்பல்கள் வருவதைஅமெரிக்கா தடுத்துள்ள நிலையில், இந்த 'மூன்றாவது வளைகுடா போரின்' முக்கியக் களமாக ஹார்முஸ் ஜலசந்திமாறியுள்ளது.
பெங்களூருவில் உள்ள தக்ஷஷிலா நிறுவனத்தின் புவிசார் ஆராய்ச்சித் திட்டத் தலைவரான பேராசிரியர் யோ. நித்தியானந்தம், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கப்பல் கண்காணிப்புத் தரவுகளைக் கொண்டு இந்த நெருக்கடியைத் தீவிரமாகக்கண்காணித்து வருகிறார். இது குறித்து அவர் முன்வைக்கும் முக்கியமான கருத்து இதுதான்:
"இப்போது இந்தப் பாதையைப் பயன்படுத்துவது என்பது நீங்கள் தெஹ்ரானுடன் (ஈரான் அரசு) எப்படிப்பட்ட உறவில்இருக்கிறீர்கள், அவர்கள் சொல்லும் புதிய பாதையில் செல்ல நீங்கள் தயாரா, மற்றும் இந்தச் சூழலுக்கு ஏற்ப நீங்கள்ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறீர்களா என்பதைப் பொறுத்தே அமையும்..."

கேள்வி : ஹார்முஸ் ஜலசந்தி என்பது 'திறந்திருக்கும் அல்லது மூடப்பட்டிருக்கும்' என்ற இரண்டு நிலைகளை (Binary model) மட்டுமே கொண்டது என்ற எண்ணம் பல தசாப்தங்களாக இருந்தது. ஆனால் 2026 நெருக்கடி இந்தச் சிந்தனையைஎப்படி மாற்றியுள்ளது?
பதில் : இதுவரைக்கும் நாம என்ன நினைச்சுட்டு இருந்தோம்னா, ஒன்னு ஜலசந்தி முழுசா திறந்திருக்கும், இல்லன்னா ஈரான் தன் ராணுவத்தைப் பயன்படுத்தி அதை முழுசா மூடிடும்னு நினைச்சோம். ஆனா, இந்த 2026 நெருக்கடிஅந்த பழைய கணக்கை தலைகீழா மாத்திருச்சு. ஜலசந்தியை முழுசா மூடாமலேயே, அமெரிக்கக் கடற்படையை நேருக்குநேர் மோதித் தோற்கடிக்காமலேயே, அந்தப் பாதையைத் தன் கட்டுப்பாட்டுல கொண்டு வர முடியும்னு ஈரான் நிரூபிச்சிருக்கு.
இதைத்தான் நாம "நிர்வகிக்கப்படும் நிச்சயமற்ற நிலை" (Managed Uncertainty) அப்படின்னு சொல்றோம். ஈரான் என்னசெஞ்சதுன்னா, "தேர்ந்தெடுக்கப்பட்ட இடையூறு" (Selective disruption) என்ற முறையை கையாண்டது. அதாவது, கடல்கண்ணிவெடிகள், ட்ரோன்கள், ஏ.ஐ.எஸ் (AIS - கப்பல்களின் இருப்பிடத்தைக் காட்டும் தானியங்கி அமைப்பு) கருவிகளைமுடக்குவது, அப்புறம் ஜி.என்.எஸ்.எஸ் ஸ்பூஃபிங் (GNSS spoofing - செயற்கைக்கோள் சமிக்ஞைகளைத் திசைதிருப்பிதவறான இருப்பிடத்தைக் காட்டுதல்) போன்ற நுட்பமான விஷயங்களைச் செஞ்சு கடல்ல ஒரு குழப்பத்தை உருவாக்குனாங்க.
தொழில்நுட்ப ரீதியா பார்த்தா அந்தப் பாதை திறந்தேதான் இருந்தது. ஆனா, அங்க பாதுகாப்பு இல்லைங்கிற பயத்துனாலகப்பல் போக்குவரத்து 95 சதவீதம் வரை குறைஞ்சுடுச்சு. இது ஆசிய நாடுகளைத்தான் ரொம்பவே பாதிச்சிருக்கு. சொல்லப்போனால், இந்த நெருக்கடிக்கு முன்னாடி தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெயும், வருஷத்துக்கு 11,200 கோடி கன மீட்டர் எல்.என்.ஜி எரிவாயுவும் இந்தப் பாதை வழியாத்தான் போய்க்கிட்டு இருந்தது. இதுல இந்தியா தன்னோடகச்சா எண்ணெய் தேவைக்கு 45-50 சதவீதமும், எல்.என்.ஜி தேவைக்கு 52 சதவீதமும் இந்த ஜலசந்தியையே நம்பி இருக்கு. அதனால, இது வெறும் ராணுவப் பிரச்சனை மட்டும் இல்ல, ஆசிய நாடுகளோட எரிசக்தி பாதுகாப்புக்கு வந்த பெரிய சவால்.

கேள்வி : ஈரான் ஜலசந்தியை மூடுவதற்குப் பதிலாக, அதன் "செயல்பாட்டு முறையை" மாற்ற முயற்சி செய்கிறது என்றுகூறியுள்ளீர்கள். இதை இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா?
பதில் : ஈரான் ரொம்பத் தந்திரமா செயல்படுது. எல்லா கப்பல்களையும் நிறுத்தாம, அந்தப் பாதையைத் தான் சொல்றநிபந்தனைகளுக்குக் கீழ கொண்டு வரப் பார்க்குது. இதற்காக ஈரான் பயன்படுத்திய சில முக்கியமான கருவிகள் மற்றும்உத்திகள் இங்கே:
- சட்டப்பூர்வ கட்டுப்பாடு: ஈரான் தன் நாட்டுச் சட்டங்களையே மாத்தி, ஜலசந்தியைப் பயன்படுத்துறதுக்கு ஒரு"டோல்கேட்" (Tollgate) சிஸ்டத்தை முறைப்படி கொண்டு வந்துச்சு.
- பயணக் கட்டணம்: லாரக் (Larak) மற்றும் கெஷ்ம் (Qeshm) தீவுகளுக்கு இடைப்பட்ட ஈரானியப் பகுதி வழியாகப்பல்கள் போறதுக்கு, ஒரு கப்பலுக்கு சுமார் 20 லட்சம் டாலர் (2 Million USD) வரை கட்டணம் வசூலிக்க முயற்சிசெஞ்சாங்க.
- ஓமன் மீதான அழுத்தம்: ஆரம்பத்துல இது ஈரான் மற்றும் ஓமன் நாடுகளோட கூட்டுத் திட்டம்னு ஈரான் சொல்லுச்சு. ஆனா ஓமன் இதை மறுத்துடுச்சு. இருந்தாலும், நடுநிலையான பாதையான ஓமன் கடல் பகுதி வழியாப் போனகப்பல்கள் மேலயும் ஈரான் தாக்குதல் நடத்தி அழுத்தம் கொடுத்துச்சு.
இதனால என்ன ஆச்சுன்னா, "பாதுகாப்பான பாதையே கிடையாது" அப்படிங்கிற ஒரு சூழல் உருவானது. ஈரான் ஜலசந்தியைமூடல, ஆனா அங்க யார் போகணும், எந்த நிபந்தனைப்படி போகணும்ங்கிறதை ஈரான் முடிவு செய்ய ஆரம்பிச்சது.

கேள்வி : செயற்கைக்கோள் படங்கள் (SAR) மற்றும் ஏ.ஐ.எஸ் (AIS) தரவுகள் மூலம் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும்தென் கொரியா ஆகிய நாடுகள் இந்த நெருக்கடியை எப்படிச் சமாளித்தன என்பது பற்றி என்ன தெரிய வருகிறது?
பதில் (A): இந்தத் தரவுகளைப் பார்க்கும்போது ஒரு விஷயம் ரொம்பத் தெளிவாத் தெரிஞ்சது. கடல்ல ரெண்டு விதமானநிலைகள் இருந்தது - ஒன்று "கண்ணுக்குத் தெரிந்த கடல்" (Visible sea), இன்னொன்னு "உண்மையான கடல்" (Actual sea). சுமார் 340 கப்பல்கள் அங்க இருந்தும், 16 சதவீத கப்பல்கள் மட்டும்தான் தங்களோட ஏ.ஐ.எஸ் இருப்பிடத்தைக்காட்டுனாங்க. மத்தவங்க எல்லாம் 'இருட்டில்' (Dark mode) இயங்குனாங்க.
முக்கியமான விஷயம் என்னன்னா, ஜி.என்.எஸ்.எஸ் ஸ்பூஃபிங் மூலமா கப்பல்களோட இருப்பிடத்தை ஈரான் குழப்புனதுதான். கடல்ல போய்க்கிட்டு இருக்குற ஒரு கப்பல், திடீர்னு ஏதோ ஒரு நாட்டுக்குள்ள இருக்கிற ஏர்போர்ட்லயோ இல்லதரைப்பகுதியிலயோ இருக்குற மாதிரி சிக்னல் காட்டும். இதைத் தெரிஞ்சுக்கத்தான் நாம எஸ்.ஏ.ஆர் (SAR - மேகமூட்டம்அல்லது இருட்டிலும் ஊடுருவிப் பார்க்கும் சக்திவாய்ந்த ரேடார்) தரவுகளைப் பயன்படுத்தினோம். இதைப் பயன்படுத்திநாடுகள் எப்படிச் செயல்பட்டாங்கன்னு பார்ப்போம்:
- இந்தியா (India): இந்தியக் கடற்படை 'ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா' (Operation Urja Suraksha) மூலமாகப்பல்களுக்குப் பாதுகாப்பு கொடுத்துச்சு. இதுல சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, இந்தியாவோட சிறிய ரக'கிளாஸ்-பி' (Class B) கப்பல்கள் ஓமன் கடற்கரைக்கு மிக அருகில் உள்ள ஆழமற்ற பகுதிகள் வழியாத் தப்பிச்சுப்போச்சு. பெரிய கப்பல்களால அந்தப் பாதையில போக முடியாதுங்கிறது இந்தியாவுக்கு ஒரு தற்காலிகச் சாதகமாஇருந்தது.
- சீனா (China): ஈரானோட நெருக்கமா இருந்தும் கூட, சீனாவோட பெரிய நிறுவனமான கோஸ்கோ (COSCO) கப்பல்கள் அங்க போகப் பயந்தாங்க. ஆனா சீனா என்ன செஞ்சதுன்னா, அடையாளம் தெரியாத "இருட்டு கப்பல்படைகளை" (Dark fleets) வச்சு ரகசியமா எரிபொருளைக் கொண்டு வந்தது.
- ஜப்பான் (Japan): ஜப்பான் ரொம்ப நிதானமா காய்களை நகர்த்துச்சு. ஏப்ரல் கடைசியில 'ஐடெமிட்சு மாரு' (Idemitsu Maru) என்கிற கப்பலை ஒரு சோதனை முயற்சியாக அனுப்பி வெற்றி கண்டாங்க. அதாவது, ஈரானோட பேச்சுவார்த்தைநடத்தி ஒரு "ஒப்பந்தத்தின் அடிப்படையில்" பயணிக்க முடியும்னு ஜப்பான் நிரூபிச்சது.
- தென் கொரியா (South Korea): தென் கொரியாவுக்கு இந்தியா இல்ல ஜப்பான் மாதிரி ஒரு பேச்சுவார்த்தை நடத்தும்சூழல் அமையல. இதனால அவங்களோட 'எச்.எம்.எம் நாமு' (HMM Namu) கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.
கேள்வி : வி.எல்.சி.சி (VLCC) ரக கப்பல்களைப் பயன்படுத்தும் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏன் இதில் ஆபத்துஅதிகம்?
பதில் : வி.எல்.சி.சி (VLCC - மிக அதிக அளவு கச்சா எண்ணெயைச் சுமந்து செல்லும் ராட்சதக் கப்பல்கள்) ரக கப்பல்கள்மிகப்பெரியவை. இதனால என்ன ஆகுதுன்னா, இதுக்கு கடல்ல அதிக ஆழம் (Deep draught) தேவை. ஹார்முஸ் ஜலசந்தியிலஇந்த மாதிரிப் பெரிய கப்பல்கள் போறதுக்குச் சில குறிப்பிட்ட குறுகிய பாதைகள் மட்டும்தான் இருக்கு.
அந்தப் பாதைகள் எதுன்னு ஈரானுக்கு நல்லாவே தெரியும். அதனால, ஒரு நாட்டு மேல அழுத்தம் கொடுக்கணும்னா அந்தப்பாதையில வர வி.எல்.சி.சி கப்பல்களை ஈஸியா குறிவைக்கலாம். இந்தியா தன்னோட கச்சா எண்ணெய் இறக்குமதியில 40-45 சதவீதத்தை இந்த மாதிரிப் பெரிய கப்பல்கள் மூலம்தான் கொண்டு வருது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா சவுதி அரேபியாவோட கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தைப் பயன்படுத்தி யான்பு(Yanbu) துறைமுகம் வழியா எண்ணெய் கொண்டு வர முயற்சி செஞ்சது. அப்புறம் ஓமன் நாட்டுல இருக்குற சலாலா (Salalah), சோஹர் (Sohar) மற்றும் துக்கம் (Duqm) போன்ற துறைமுகங்களையும் பயன்படுத்துனாங்க. ஆனா உண்மை என்னன்னா, ஹார்முஸ் ஜலசந்தி வழியா வர்ற அந்த மாபெரும் அளவு எண்ணெய் தேவைக்கு இவை முழுமையான மாற்று கிடையாது.
கேள்வி : ஜலசந்திக்கு வெளியில இருக்குற சாபஹார் மற்றும் குவாடர் துறைமுகங்களின் பங்கு இந்த நெருக்கடியில்எப்படி இருந்தது?
பதில் : சாபஹார் மற்றும் குவாடர் ரெண்டுமே ஜலசந்திக்கு வெளியிலதான் இருக்கு. அதனால இவை ஜலசந்திக்கு நேரடிமாற்று இல்லைன்னாலும், கப்பல்கள் அங்கே அதிக அளவு காத்துக்கிடக்க வேண்டிய சூழல் உருவானது. ஒட்டுமொத்த ஓமன்வளைகுடாவே கப்பல்களால நிரம்பி வழிஞ்சது.
இந்தியக் கடற்படை சாபஹார் பக்கத்துல ரோந்துப் பணிகளை அதிகப்படுத்துனாங்க. அதே மாதிரி பாகிஸ்தான்கடற்படையும் தன் நாட்டு வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பா கராச்சி (Karachi) நோக்கி அழைத்துச் செல்ல எஸ்கார்ட்கொடுத்தாங்க.
இதிலிருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா, ஹார்முஸ் ஜலசந்தி இன்னைக்கும் தொழில்நுட்ப ரீதியாதிறந்தேதான் இருக்கு. ஆனா, முன்னாடி மாதிரி இது ஒரு பொதுவான சர்வதேசப் பாதையா இல்லை. அங்கே நுழையணும்னாஈரானோட நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுதான் ஆகணும்ங்கிற சூழலை ஈரான் உருவாக்கிடுச்சு. இது ஆசிய நாடுகளோடபொருளாதாரத்துல ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தப்போகுது.
மேலும் சற்று விரிவாக ஒரு சின்ன பேட்டி.....இங்கே...

Leave a comment
Upload