தொடர்கள்
ஆன்மீகம்
மும்பை, மடுங்கா சங்கர மடம் கும்பாபிஷேகம்  : நேரடி ரிப்போர்ட் – பால்கி

20260311085213821.jpeg

அசையா தோரிடம் அமர்ந்து மோனமாய்ச்

சின்முத்திரையினால் செப்பிய ஞானம்

போதாதென்று புவிழீல் மீண்டும்

காகடி வைத்தான் கண்ணுதல் இறைவன்

ஆதி சங்கரர் அவதரித் திட்டார்

2026031108523470.jpeg

அப்படி அவதரித்த ஆதிசங்கரருக்கென மும்பை மாநகரத்தில் மடுங்கா என்னும் பகுதியில் தற்போதைய ஸ்ரீசங்கர மடம்.

தெய்வீக உத்திரவு

1939ல் இந்த மடத்திற்கான வித்திடப்பட்டது.

ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பை தெய்வீக குரல் (அசரீரீ) சொல்லியது.

தெய்வீக தம்பதியர்களான ஆர்யாம்பா - சிவகுரு தம்பதியற்கு தெய்வீக கனவில் தமக்கு ஆதி சங்கரர் பிறப்பும்அறிவிக்கப்பட்டது.

அது போலவே இந்த சங்கர மடமும் ஒரு தெய்வீக கனவின் பலிப்பு தான்.

முதல் மஹா கும்பாபிஷேகம் த்வாரகா சாரதா பீட ஸ்ரீஅபினவ சச்சிதானந்த தீர்த்த சங்கராச்சார்யாரின் திருக்கரங்களால் நடந்தேறியது.

மஹாகும்பாபிஷேகம், 2014ல் காஞ்சி மடத்தை ஆதி சங்கரரின் வழி வந்த 69 ஆவது சங்கராச்சாரியராக அலங்கரித்த ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் மே 30 அன்று ஆரம்பித்து ஆறு கால யாகங்கள் வளர்க்கப்பட்டு ஜூன் 2ஆம் தேதி அன்று நடைபெற்றது.

இந்த மஹாகும்பாபிஷேகம் ஏப்ரல் 6, 2026 அன்று தற்போது காஞ்சி சங்கரமடத்தின் 70 ஆவது பீடாதிபதியாக இருக்கும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி அஷ்டபந்தன ஜீரணோத்தாரண மஹா கும்பாபிஷேக விசேஷங்கள் ஆரபித்தன.

3ஆம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை நடந்து தொடர்ந்து அடுத்த 4ஆம் 5ஆம் தேதிகளில் தினமும் காலை மாலை என இரு கால யாக சாலை பூஜைகள் நடந்தேறின.

யாகசாலை படங்கள்

20260311085256349.jpeg

கடைசி கால, ஆறாம் கால யாகசாலை பூஜை, 6ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பூர்ணாஹுதியுடன் முடிவடைய, மந்திர உருவேற்றப்பட்ட கலசங்கள் விமானத்திற்கும், ஷண்மதங்களைப் பிரதிபலிக்கும் தேவதைகளுக்கும் ஆதிசங்கர மூலவருக்கும் வேத விற்பன்னர்களால் சிரசில் தரித்து எடுத்து செல்லப்பட்டன.

[யாகசாலை நிகழ்வுகளின் இறுதி கால பூஜையின் போது சங்கராச்சாரியாரின் அனுகிரக உரை]

20260311090115375.jpeg

சங்கராச்சாரியாரும் விமானத்தினருகே நின்று கிரக சந்நிதியின் விமானத்திற்கும் வேத முழக்கங்களுக்கிடையே அவரது திருக்கரங்களால் புனித நீரை தாரையாக ஊற்றினார்.

கற்பூர தீபாராதனை காண்பித்தார்.

ஆலயத்தினருகில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர கோஷங்களை எழுப்பிவண்ணம் ஆனந்தித்தனர்.

சங்கராச்சாரியார் ஷண்மத தேவதைகளின் சந்நிதிகளுக்கு கலச நீரூற்றி கற்பூர தீபாராதனை காண்பித்தார். அதே போன்று மூலஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ஆதி சங்கரருக்கும் அவரதுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் சிறு குன்றின் மீது அமர்ந்திருக்கும் சிவலிங்க வடிவத்திற்கும் கலச நீரூற்றி கற்பூர தீபாராதனையும் செய்தார்.

20260311090031349.jpeg

நிகழ்வின் முடிவாக சங்கராச்சாரியார் அனுகிரக உரை செய்துவிட்டு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்.

மடம் வந்த வரலாறு

1939ல் வேலை தேடி மும்பையின் வந்த சுப்ரமணிய சாஸ்த்ரிகளுக்கு ஆதி சங்கரர் அவரது கனவில் அடிக்கடி வந்து வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் முதலியன கற்பிக்கும் ஒரு பாட சாலையை உருவாக்கு என்ற விருப்பத்தைத் தெரிவித்து வந்திருக்கிறார்.

இந்த கனவு விஷயத்தை காஞ்சி மஹா பெரியவாவிடம் தெரிவிக்கையில் அவரும் அத்வைதத்தை விவரிக்கும் வேத பாட சாலையை ஒரு ரூம் உள்ள வீட்டில் ஆரம்பித்திருக்கின்றார்.

பின்னர் காஞ்சி மற்றும் சிருங்கேரி சகர மடங்களைன் ஆதரவும் பெருகியது.

1954ல் இன்றைய ஆலயம் இருக்கும் இடம் வாங்கப்பட்டது. 1959ல் இந்த ஆலயத்திற்கு, இன்றும் கம்பீரமாக திகழும், பளிங்கினால் ஆன ஆதி சங்கரர் சிலை ஒரு பக்தரால் அளிக்கப்பட்டது.

​1977ல் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் முன்னிலையில் பூமி பூஜை செய்யப்பட்டது.

காஞ்சி மஹாஸ்வாமிகள் காஞ்சியில் இருந்த படியே இந்த நிலத்தின் பிளானைப் பார்த்து முதலில் கிணறு வெட்டச் சொல்ல அதன் படியே நடக்க அந்த கிணறுதான் இந்த ஆலயத்திற்கு இன்றும் வற்றாத நீரூற்று .

1978ல் மகாபெரியவரின் அறிவுரையின் பேரில், ஏழு மூலைகள் கொண்ட வடிவத்தில் ஒரு கோயிலும், அழகிய ராஜகோபுரமும் கட்டப்பட்டன.

மத்தியில் ஆதி சங்கரரும் குன்றின் மேல் சிவலிங்கமும் அமைக்கப்பெற, அதைச் சுற்றி ஆதி சங்கரர் நிர்மாணித்த ஆறு மதங்களுக்கான தேவதைகளான, ஸ்ரீகணபதி, ஸ்ரீசக்தி, ஸ்ரீசூரியன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோரின் சந்நிதிகள் அமைக்கப்பெற்றன.

மஹாபெரியவாளின் அறிவுரையின் பேரில் ஏழு மூலைகள் கொண்ட வடிவத்தில் ஒரு கோயிலும் அழகிய ராஜகோபுரமும் கட்டப்பட்டன, அது தான் இன்று சங்கர மடமாக உருவெடுத்து பெரிய ஆலமரமாகி நிற்கிறது.

இந்த மடத்தில் வேதம், வேதாந்தங்கள், சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகின்றன. வேத விற்பன்னர்களின் உரைகள், உபன்யாசங்கள் நடபெறுகின்றன.

யாக சாலை பற்றிய குறிப்பு

இந்த யாகசாலை காலங்களில், யாகசாலை கலசங்களில் ஆலயத்தின் சந்நிதி தேவதைகள் மற்றும் அவர்களின் வாகனங்களின் சக்திகளை வேத விற்பன்னர்கள் ஓதும் மந்திரங்களினால் நிரப்பப்படுகிறது.

கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள புனிதத் திருவுருவச் சிலைகள், முதலில் தானியங்களால் ஆன பசையில் (தானியாதி வாசம்) வைக்கப்படுகின்றன.

பனநீரில் (ஜலாதி வாசம்) மூழ்க வைக்கப்படுகின்றன.

.அதனைத் தொடர்ந்து 'பஞ்சகவ்ய சுத்தி' செய்யப்படுகிறது.

இத்தகைய சடங்குகள் முடிந்த பிறகே, அச்சிலைகள் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்குத் தகுதி பெறுகின்றன. இதற்குப் பிறகு, அச்சிலைகள் படுக்கை நிலையில் (சயன வாசம்) வைக்கப்படுகின்றன. இறுதியாக, தெய்வங்களின் கண்களைத் திறக்கும் சடங்கான 'நேத்ரோன்மீலனம்' செய்யப்படுகிறது. அச்சிலைகளுக்கு அடியில், ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய தனித்துவமான புதிய தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் மற்றும் யந்திரங்கள் ஆகியவை வைக்கப்படுகின்றன.

கும்பாபிஷேகத்தின் இறுதி நாளே அதன் பிரம்மாண்டமான நிறைவு விழாவாக அமைகிறது; இந்நாளில், பிம்பம், கும்பம் மற்றும் ஸ்பரிசம் சார்ந்த ஆஹுதிகள் (படையல்கள்) அந்தந்த கலசங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அக் கலசங்களிலுள்ள புனித நீர் விமானங்கள் மற்றும் விக்ரகங்களின் மீது அபிஷேகம் செய்யப்படுகிறது.

மண்டலாபிஷேகம் முடியும் வரை அடுத்த 40 நாட்களுக்கு தினசரி ருத்ராபிஷேகங்களுடன் இந்த கொண்டாட்டம் தொடர்கிறது.

இந்த மும்பை மாநகரத்திற்கு திக்விஜயம் செய்தபோது மாநகரம் முழுதும் இருக்கும் தென்னிந்தியர்கள் வசிக்கும் இடங்களில் இருக்கும் கோயில்களில் சங்கராச்சாரியார் சென்று அவர்களுக்கும் அருளுரை வழங்கினார்.

பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்சிற்கும் சென்று தர்மம் செய் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

20260311090144431.jpeg