தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260317222937685.jpg

Heading : காக்கி சட்டையை கிழித்தெறிந்த நீதி -கண்ணாழ்வார்

Comment : விகடகவியின் இந்த வார அட்டப்படம் தேவாவின்கருத்து படம் அருமை,

Rama Venkatesan , Trichy

Heading : காக்கி சட்டையை கிழித்தெறிந்த நீதி -கண்ணாழ்வார்

Comment : அட்டை படத்தின் முன் பாதியை நீதித்துறை கிழித்துக் கொண்டது... பின் பாதி இடைவேளை...ஒரு நல்ல கார்ட்டூன்.... அமூல் விளம்பரம் எப்படி அந்த அந்த காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் வருமோ அதுபோல இந்த கார்ட்டூன் சரியான நேரத்தில் வந்துள்ளது....மிக நல்ல சிந்தனை/கற்பனை.... உண்மையிலே அந்த நேரத்தில் அமேரிக்கா விற்கு அந்த இடைவேளை மிக மிக அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது..... அதில் அமேரிக்கா அதிபரை சின்ன பையன் போல சித்தரித்தது (பழம் விட்டுப் போம்...) "தேவா" வை ரொம்பவே பாராட்ட வேண்டும்... இதில் லாபம் அடிக்க பார்த்தது பாகீஸ்தான்...(வடை பஜ்ஜி சேல்ஸ் பையன்). எனக்கு தெரிந்து ஒன்றும் சேல்ஸ் ஆகவில்லை.... வருத்தம் என்னவென்றால் இதன் பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்கிறது..😔

Sriram S , Chennai

Heading : நாளை முதல் குடிக்க மாட்டேன் - கி ரமணி

Comment : வர்ணனையையும் முடிவையும் நன்றாக ரசிக்கமுடிகிறது வாழ்த்துக்கள்

Sreenivasan k, Chennai

Heading : சித்ரா பெளர்ணமி - சரளா

Comment : Beautifully written, as always! I enjoyed and reminisced over every part of it 💕. Keep up the good work!

Kani, Washington DC

Heading : சித்ரா பெளர்ணமி - சரளா

Comment : I thoroughly enjoyed this article .

Anitha , United States

Heading : சித்ரா பெளர்ணமி - சரளா

Comment : Brought back my childhood memories. Nice flow of all nostalgic feeling

Jayanthi , Chennai

Heading : மஹாராஷ்ட்ராவின் துணை முதல்வர் வெற்றி - பால்கி

Comment : அவருடைய மரணம் காரணம்.... மர்மம் தீர்ந்ததா தெரியவில்லை.... இந்த பதவி அந்த காயத்திற்கு ஒரு நல்ல மருந்தாகும் என‌ நம்புவோம்....

Sriram S , Chennai

Heading : ஆளை வூடுங்க ஜுட்- கண்ணாழ்வார்.

Comment : அமேரிக்கா ஈரானின் ஆயுத பலத்தை ரொம்பவே குறைவாக எடை போட்டது தெளிவாக தெரிகிறது.... 20வருடங்களாக அமேரிக்காவின் படையெடுப்பு எப்படி இருக்கும் என ஆராய்ந்து, தெளிவாக யோசித்து கொரில்லா யுத்தம் (மறைந்திருந்து தாக்குதல்) போல் தளவாடங்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் பதுக்கி ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு நல்ல (மறக்கமுடியாத) பாடம் கற்றுக் கொடுத்துள்ளது... யாரும் எதிர்பாராதது ஹோல்ம்ஸ் ஜலசந்தி டோல்கேட் ஆக மாறகூடும் என்பது.... இது நடந்தால் உலகநாடுகள் எல்லாம் பாதிக்கப்படும்.... இதனால் ரஷ்யா vs யுக்ரேன் யுத்தம் மறந்தே போய் விட்டது

Sriram S, Chennai

Heading : மும்பை, மடுங்கா சங்கர மடம் கும்பாபிஷேகம் : நேரடி ரிப்போர்ட் – பால்கி

Comment : ரொம்ப நல்ல (விரிவான) வர்ணனை 👌 கும்பாபிஷேகம் தினகர் ஷர்மா ஜி குழுவால் நடைபெற்றது என்பது இன்னும் சந்தோஷம் 🙏

Sriram S , Chennai

Heading :மனம் கவரும் நீதி தேவதை ரேவதி!- என்.பத்ரி

Comment : இவரது நீதிக்கு குரல் கொடுத்த (சக ஊழியர்களுக்கு எதிராக) பாங்கினை பாராட்டி விருது வழங்கிட வேண்டும்... அதைவிட இவருக்கு பாதுகாப்பு கட்டாயம் கொடுக்க வேண்டும்....

Sriram S , Chennai

Heading : காக்கி சட்டையை கிழித்தெறிந்த நீதி -கண்ணாழ்வார்

Comment : காக்கி சட்டையை போட்டு கொண்டு, இரண்டு (நிரபராதிகள் என்று தெரிந்தும்) கொலை செய்த 9 அரக்கர்களை .... கிழித்தெறிந்த நீதிபதி.... இரட்டை தூக்கு ஒரு நல்ல முன் உதாரணம் 👏

Sriram S, Chennai

Heading : வலையங்கம் இதைத்தான் பெண்கள் விரும்புவார்கள்

Comment : முற்றிலும் உண்மை.... மதுவிலக்கு மிக அத்தியாவசியமான ஒன்று... அதை மையப்படுத்தி பேசி வந்த அண்ணாமலை இப்போ கூட்டணி அரசி(யலி)ல் உள்ளார்.... நடக்குமா?!?

Sriram S, Chennai

Heading : நிலவுக்கு சென்றுள்ள முதல் பெண் வீராங்கணை!- கண்ணாழ்வார்

Comment : அருமையான அறிவியல் தகவல்களை தந்த விகடகவியருக்கு நன்றி

கண்மணி , சென்னை

Heading : மும்பை, மடுங்கா சங்கர மடம் கும்பாபிஷேகம் : நேரடி ரிப்போர்ட் – பால்கி

Comment : அருமையான பதிவு, பால்கி சார் தரும் தகவல்கள் கும்பாபிஷேகம் ஆவாகன முறைகள் பற்றி தெரியாத மக்களுக்கும் புரியும் வகையில் இருக்கும்,நன்றி பால்கி சார்

Ujjivanam , Chennai

Heading : சித்ரா பெளர்ணமி - சரளா

Comment : Nostalgic article. Well written.

MANOJ , Chennai

Heading : டிஜிட்டல் சிறை - நைத்ருவன்

Comment : யதார்த்தமான கதை. இப்படித்தான் இன்றைய வாலிபர்களின் உலகம் போய் கொண்டிருக்கிறது. அலைபேசிதான் உலகம் என்றாகி விட்டது. மற்றவைகளை மறந்துதான் போயாக வேண்டும். இன்றைய உலகிற்கு தேவையான கதை. எழுத்தாளருக்கு வாழ்த்துகள்

அனந்த் ரவி, சென்னை

Heading : சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

Comment : எங்க இருக்கீங்க பிரதீப்...? இந்த AI யுகத்துல நீங்க இல்லாமலேயே உங்க வாய்ஸ்ல டப்பிங்கை முடிச்சுடலாம்னு தெரியாதோ...? எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : கனம் - பா.அய்யாசாமி

Comment : கதை மிக சிறப்பு யாரையும் ஏமாற்ற கூடாது என்பதற்கான கதை அர்மை..

விமலாநாகேஷ், சென்னை