
நாளை 3 மே. அறிவு ஜீவி, ஜன ரஞ்சக எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாள்.
ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்கிற பெயரில் அறிமுகமான சுஜாதா என்கிற ரங்கராஜனை 1950, 1960களில் பிறந்த அனைவரும் அறிவர்
இதில் நான் மட்டும் விதிலிலக்கா என்ன?
கொலையுதிர்காலம் படிக்க ஆரம்பித்தது முதல் சுஜாதாவின் ரசிகன் நான். தொடர்ந்து வெளியான நில்லுங்கள் ராஜாவே, திணமணிகதிரின் மாத நாவலாக வெளியான "அப்ஸரா " அதாவது அருணா, பிரேமா, ஸரவஸ்திபாய், ராமய்யா என்பதின் முதல் எழுத்து சேர்த்த தலைப்பில் வெளியான நாவல். தவிர 6964என்கிற தலைப்பில் வெளியான சிறுகதைத்தொகுப்பு, சுஜாதாவின் எழுத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டவர்களில் நானும் ஒருவன்
காகித சங்கிலி நாவலில் கதாநாயகன் மரணம். ஆனால் அந்த கதைபடமாக்கப்பட்ட போது சினிமாவில் உயிர்பிழைப்பான். அடுத்ததாக ஆனந்த விகடனில், கனவுத்தொழிற்சாலை நாவல் அற்புதமான நாவல், ஹீரோயின் பூண்டு சாப்பிட்டு வரா, நெருங்க முடியாத நிலை என ஹீரோ அங்கலாய்ப்பான். இதுமட்டும் 24ரூபாய் தீவு, சாவி இதழின் ஒரு வார ஆசிரியராக பரிமளித்தது. கணையாழியின் கடைசிபக்கங்களில் ஆரம்பித்து எந்திரன் படம் வரை சுஜாதாவின் வாழ்க்கை தொடர்ந்தது
கமல்,ரஜினி நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தை முதல் நாள்முதல் ஷோ அப்போதைய பிளாசாவில் பார்த்து விட்டு அதேநாளில் சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஜாதாவைநேரில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கியது மறக்க முடியாத ஒன்று.


Leave a comment
Upload