தொடர்கள்
அழகு
அழகு : தாய் மண்ணுக்கு வாருங்கள் என அழைப்பது - பால்கி

20260401114603854.jpg

அழகு - தாய் மண்ணுக்கு வாருங்கள் என அழைப்பது

ஆமாம்.

தானே முப்பத்தேழு ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் கொடி கட்டிப் பறந்து விட்டு தாயகம் திரும்பி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜோஹோ என்ற வெற்றி கம்பெனியை நமது தமிழகத்தில் கிராமப் பகுதியில் நிறுவி அதிலிருந்து இந்தியா முழுவதும் பரந்து விரியச் செய்திருக்கிறார். சமுதாயத்தில் கிராமத்திலுள்ளவரும் முன்னேறலாம் என்ற நம்பிக்கையை விதைத்து வருகிறார் அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அவர்கள்.

சமீபத்தில், அவர் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு, பாரத மாதாவிக்கு உங்கள் திறமை தேவை, வாருங்கள் இந்தியாவிற்கு என்று அறைகூவல் செய்திருக்கிறார். தற்போது அங்கு நிலவும் ஸ்திரமற்ற நிலை, நமது நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்படும் இழி நிலை, இந்தியர்கள் தான் அமெரிக்கர்களது வேலை வாய்ப்புகளைப் பறிக்கிறார்கள் என்ற எதிர்மறை ஓட்டங்களுக்கிடையே அங்கு வாழ்வது அவசியமா என்றும் வினவிகிறார்.

இங்கு வாருங்கள், தாயகம் திரும்புங்கள். தன்மானத்தோடு வாழலாம் என்று கூறுகிறார்.

20260401114720993.jpg

அழகான அறைகூவல் தான். பாராட்டப்பட வேண்டியது.

இதற்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை. சமூக ஊடகங்களில் இவருக்கு ஏதோ தனிப்பட்ட பிரச்சினை அதனால் எல்லோரையும் வரச் சொல்கிறார் என்றும் வறுத்தெடுக்கிறார்கள்.