தொடர்கள்
கொடுரம்
சநாதன தர்மம் ஒழிக்கப்படவேண்டுமா? - கிருஷ்

20260416072100429.jpeg

2023ல் திராவிடக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் அன்றைய துணை முதல்வர் சநாதன தர்மத்தை டெங்கு, மலேரியா கொசுக்கு சமன் படுத்திப் பேசி, எப்படி அவற்றை நாம் ஒழிக்கணுமோ அதே போன்று சநாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும். அது தான் திமுகவின் லட்சியம், குறிக்கோள் என்றும் சூளுரைத்தார்.

இதில் முரண்நகை என்னவெனில், அந்த மாநாட்டில் ஹிந்து அரநிலயத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கு கொண்டு பேசினார்.

20260416072205181.jpeg

நேற்று புதியதாக அமைக்கப்பட்டிள்ள சட்டசபையில், திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், எங்களது தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு(தான்) ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். திராவிட மாடல் தொடரும். சநாதானத்தை வேறருப்போம் என்று கூறுகிறார்.

மாநிலத்தின் மக்கள் தொகையில் 87 சதவீத மக்கள் இந்து சமயத்தைப் பின் பற்றுபவர்கள்.

பெரும்பான்மையினர் பின்பற்றும் மதம் அது. அதைப் பற்றி அவதூறு சொல்வது, ஏன்? எந்த மதத்தைப் இங்கு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். 2023ல் பேசிய வெறுப்புப் பேச்சுக்கென் நாடு தழுவிய அளவில் உதயநிதி மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

இருந்தும், இப்போது ஒரு பெரும்பான்மை மதம் அவதூறாய்ப் பேசப்படுக்கிறது. இன்றும் அரசு தரப்பில் விஜய் கண்டனம் கூறவும் இல்லை.

20260413224031441.jpg

போகட்டும், அந்த வெறுப்புப் பேச்சை அவைக்குறிப்பிலிருந்தாவது நீக்கியிருக்க வேண்டும், அதுவும் செய்யப்படவில்லை. இதை விடுத்து, ஆளும் கட்சி தலைவரும், எதிர் கட்சி தலைவரும், நம்மில் யார் அதிக வாக்கு பெற்றது என்ற விவாதத்தில் இற்ங்கியுள்ளனர். இது வருந்தத்தக்க விஷயம்.

சநாதன மதத்தைச் சார்ந்த மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.