தொடர்கள்
பொது
“ஊட்டி கோடை சீசன் லைவ் ரவுண்டு அப்” - ஸ்வேதா அப்புதாஸ்

கோடை காலம் வந்துவிட்டாலே கீழ் பிரதேசத்தில் சுட்டெரிக்கும் வெயில் வாட்ட துவங்க மலை பிரதேசத்தை நோக்கி மக்கள் படையெடுகிறார்கள்.

20260414100544802.jpeg
பிரிட்டிஷ் காலத்தில் வெயிலின் தாக்கத்தால் தாங்க முடியாமல் குளு குளு சீதோஷணத்தை தேடி மலையேறி வந்து கண்டுபிடித்த மலை பிரதேசம் தான் ஊட்டி!.
ஆங்காங்கு இருந்து பழங்குடியினர்கள் அவ்வப்பொழுது எட்டி பார்த்துக்கொண்டிருந்த சமையத்தில் தான் ஜான் சலிவன் நவீன ஊட்டியை கண்டுபிடித்தார்.
கோவை கலெக்டரான ஜான் சலிவன் தன் அதிகாரத்தை பயன் படுத்தி உருவாக்கின அனைத்துவிஷயங்களும் இன்று உலக பிரசித்தி பெற்றவை.

2026041410065238.jpeg
விடுமுறை என்றாலே ஊட்டிக்கு ஒரு விசிட் அடித்து விடவேண்டும் என்பதில் கவனமாக இருகிறார்கள் சுற்றுலா பயணிகள்.
இந்தியா மட்டுமல்லாமல் உலக சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருக்கும் அழகிய மலை பிரதேசம்.
உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் ஒரு சுல்தான் பத்தேரி மற்றும் மிசோரம் போல பளிச் சுத்தமாக இருக்கிறதா என்றால் அது தான் இல்லை என்று முகம் சுளிக்க வைக்கிறது.
அழகாக படு சுத்தமாக இருந்த ஊட்டி இப்பொழுது படு மோசம் என்று தான் சொல்லவேண்டும்.
பிளாஸ்டிக் ப்ரீ மட்டும் அதிரடி நடவடிக்கை எடுத்தால் போதுமா ?எங்கு பார்த்தாலும் குப்பை கூளம் தான்.

20260414100843189.jpeg
ஊட்டி படகு இல்லம் சாலை வழியாக சென்றால் மிகவும் அழுக்கான ஊட்டியை பார்க்கலாம்.
ஊட்டியின் லேண்ட் மார்க் சேரிங் க்ராஸ் அங்கு நடுநாயகமாக வீற்றிருக்கும் அழகிய நீரூற்று தான் ஆதாம் நீருற்று (Adam fountain) இங்கிலாந்தில் கூட இப்படியொரு நீருற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட நீருற்றை காவல்துறை மற்றும் அரசியல் கட்சிகள் ஆக்ரமித்து அழகை சீர்குலைத்துள்ளன.
I❤️Ooty என்ற அழுக்கான பிளாஸ்டிக் பாட்டில்களான போர்டு வேற திருஷ்டி பரிகாரம்.

20260414100925618.jpeg
ஊட்டி முழுவதும் சுத்தம் பேணிக்காப்பதாக தெரியவில்லை நகராட்சியால் முடிவதில்லை போலும்?.
தேர்தல் பிசி என்ற குரல் கேட்கிறது.
அதே சமயம் மற்ற ஒரு குரல் ஆசிரியர்களை தானே வற்புறுத்தி மிரட்டி தேர்தல் பணி செய்ய வைத்தீர்கள் என்று.
நகரை நகராட்சி கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியது மிக அவசியம்.
நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சற்று தப்பி குளு குளு ஊட்டி பக்கம் வந்த சீசன் விசிட்டர்களை மீட் செய்து பேசினோம்…
ஊட்டி பொட்டானிகல் கார்டனில் கூலாக குடும்பத்துடன் விசிட் செய்த மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கிலி என்ற ஊரில் இருந்து வந்துள்ள மோனிகா குடும்பத்தை சந்தித்தோம்

20260414101132206.jpeg
“ ஊட்டி அருமையாக கூலாக இருக்கிறது மக்கள் அன்பானவர்கள் குளிர் இருக்கிறது அதே சமயம் கொடூர வெயிலில் இருந்து இங்கு வந்தது இதமாக இருக்கிறது…
அதே சமயம் டிராபிக் குழப்பம் அதிகம் சாலைகள் எங்கு செல்கின்றன என்று தெரிவதில்லை அதை சரி செய்யவேண்டும் பொட்டானிக்கல் கார்டன் சூப்பர் என்கிறார்.


கேரளா திருவனந்தபுரத்தில் இருந்து வந்த காயத்திரி கிருஷ்ணா கூறுகிறார்,

20260414101302797.jpeg
“ஊட்டி அழகிய ஊர் முதல் முறையாக வந்து பிரமித்து நிற்கிறேன் தமிழ்நாடு ஹோட்டலில் தான் எங்க குடும்பம் தங்கியுள்ளோம் நன்றாக இருக்கிறது.
நகரினுள் தான் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் மிக குறைவு “ என்கிறார்


ஒடிசாவில் இருந்து வந்த திலீப் குமார் பாரிக் குடும்பத்தை சந்தித்தோம்,

20260414101448137.jpeg
“ ஊட்டிக்கு வந்தவுடன் இதமான சீதோஷ்ண நிலை வெயிலின் தாக்கத்தில் இருந்து இங்கு வந்தவுடனே டென்ஷன் பிரீயாகி விடுவதை உணரமுடிகிறது.
ரோஸ் கார்டன், தொடப்பெட்டா சாக்கலேட் பேக்டரிகள் என்று அனைத்தும் சூப்பர்.


ஒரு விஷயம் எங்க குடும்பம் இயற்கை பிரியர்கள் தொடப்பெட்டா சிகரம் சென்ற எங்களுக்கு ஏகபெட்ட ஷாக் அங்குள்ள உணவு கடைகளால்


சுத்தம் பறிபோய் பாலிதீன் பேப்பர் ஐஸ் க்ரீம் பக்கெட்டுகள் மற்றும் பிளேட்டுகள் குவிந்து கிடப்பது மிக மோசம் இயற்கை பாதிக்க படுகிறது இதை கவனிக்க வேண்டும் “ என்கின்றனர்.

தஞ்சாவூரில் இருந்து விசிட் செய்துள்ள கார்த்திகேயன் குடும்பத்தினர்,

20260414102021669.jpeg

“ ஊட்டி ரொம்ப நல்லா இருக்கு அதே சமயம் ரோடு வசதி சரி இல்லை பல இடங்களில் சாலை வசதி சரிசெய்யவேண்டும் .
ஒன் வே டிராபிக் பிரச்சனைக்கு வழி ஏற்படுத்துகிறது டபுள் வே வேண்டும்.
புட் குட் எல்லா மாநில உணவுகள் கிடைப்பது சூப்பர்.
கார்டன்கள் அருமை.

பரோடாவில் இருந்து வந்த ஹெட்வி ஷீத்தல் கூறும்போது,
“ ஊட்டி எங்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு அழகான ஊர் வெரைட்டி சாக்லேட்கள் கிடைக்கிறது. இந்த மாடர்ன் ஸ்டோர் சூப்பர் கடை இங்கு வேலை செய்பவர்கள் அருமையானவர்கள்” என்கிறார்கள்.

20260414102152480.jpeg
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளு குளு க்ளைமேட் இயற்கை அழகு பூங்காக்கள் நீலகிரி மலை ரயில் என்று பார்த்தவுடன் பிரமித்து போய்விடுகிறார்கள்.
சுற்றுலா பயணிகளுக்கு என்று டாய்லெட் வசதி ஊட்டியில் இல்லை அதே சமயம் நகராட்சி புதிய தூய்மை இந்தியா திட்டம் சமுதாயக்கழிப்பிடம் கட்டப்பட்டு ஷோ பிஸ் ஆக காட்சியளிக்கிறது.

20260414102255547.jpeg
சுற்றுலா பயணிகள் கழிப்பிடத்தை தேடி அலைவதை பார்க்கமுடிகிறது.
இதை பற்றி யாருக்கும் கவலையில்லை.
இது ஒருபக்கம் இருக்க தோடர் பழங்குடியின மக்களின் எருமைகளின் கூட்டம் ஊட்டி நகரை ஆக்ரமித்து வலம் வருவதும் அதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஆபத்தான அச்சுறுத்தல் தொடர்வதை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை.

20260414102451783.jpeg
மற்ற ஒரு விஷயம் வழக்கமாக ஏரி சாலையில் காட்டெருமை விசிட் சகஜம் இரவில் சிறுத்தை விசிட்டும் உண்டு காட்டேஜுகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் இரவில் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
தற்போது ஊட்டி நகரில் ஒரு காட்டு யானை விசிட் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!.

சுற்றுலா பயணிகளை ஊட்டி கவர்ந்திருந்தாலும் எங்கு பார்த்தாலும் குப்பை கழிவுநீர் எருமைகளின் சாணம் நாற்றம், போக்குவரத்து நெரிசல் வாகன பார்க்கிங் திண்டாட்டம் தொடர மலைகளின் அரசியின் கோடை சீசன் தென் மேற்கு பருவமழையின்துவக்கத்துடன் பறந்து முடிவடைந்து விடும்.