தொடர்கள்
கவர் ஸ்டோரி
தங்கம் வாங்க வேண்டாம் - விகடகவியார்

20260416075214727.jpeg

பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்ற பிரதமர் வேண்டுகோள் இப்போது பேசும் பொருளாகி விட்டது.

பிரதமரின் வேண்டுகோள் வெளியான ஒரு மணி நேரத்தில் முக்கிய நகை நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு.

குறிப்பாக கல்யாண் ஜூவல்லர்ஸ் டைட்டன் தங்கமயில் ஜுவல்லரி போன்றவை பெருமளவு பாதிக்கப்பட்டது. தங்கம் விலை உயர்வு என்ற கண்ணாமூச்சி ஆட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது.

சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது கட்டுப்படியானதாக இல்லை. சவரன் ஒரு லட்சத்தை தொட்ட தங்கத்தின் விலை இப்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்று ஆகிவிட்டது திடீரென சவரனுக்கு 400 ரூபாய் குறையும் என்று அறிவிப்பு வெளியாகி நாம் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் போது சில மணி நேரத்தில் 800 ரூபாய் உயர்வு என்ற அறிவிப்பு வருகிறது.

இது என்ன விளையாட்டு என்பது நகை வியாபாரிகளுக்கு மட்டுமே தெரிந்தது இப்போது திடீர் நடவடிக்கையாக தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு புதன்கிழமை இரு மடங்கு அதிகமாக உயர்த்தி இருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்வதை குறைக்க நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கை என்கிறார்கள்

ஆனால் இது எதிர் விளைவையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் நகை விற்பனையாளர்கள்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர வாய்ப்பு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவது நடப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்.

சுருக்கமாக தங்கத்தின் விலை மற்றும் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளின் நாணய மதிப்பு பலவீனமடைகிறது (ஏனெனில் டாலர் வெளியேறுகிறது). அதே சமயம், தங்கத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் நாணய மதிப்பு வலுவடைகிறது.

நடுத்தர மக்களின் தங்கம் வாங்கும் திறன் மெல்ல குறைந்து வருகிறது ஒரு சவரன் அரை சவரன் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஒரு கிராம் 2 கிராம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தங்கம் வெள்ளி விலை உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு எரிவாயு உருளை கட்டுப்பாடு எல்லாவற்றிற்கும் காரணம் ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் தான்.

அதன் தாக்கத்தை எல்லா நாடுகளும் சந்திக்கின்றன. அதைத்தான் வெளிப்படையாக பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார்.

ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிகமாக கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கான தேவை உள்ளது தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்கிறது. நம்முடைய வர்த்தக பற்றாக்குறை ரூபாய் மதிப்பு குறைவது இதற்கெல்லாம் இவையும் ஒரு காரணம்.

பிரதமர் தங்கம் வாங்க வேண்டாம் என்று சொன்னார். அதையும் மீறி தங்கம் வாங்குபவர்களை கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதி வரியை அதிகரித்து இருக்கிறார்.

இறக்குமதி வரி அதிகரிப்பதால் அதன் பாதிப்பு பெரிய அளவு வாங்கும் சாமானியனை தான் தாக்கும். நகை விற்பனையாளர் இறக்குமதி வரியையும் சாமானியர்த் தலையில் தான் கட்ட வேண்டும் .பொருளாதார நிபுணர்கள் வேறு சில யோசனை சொல்கிறார்கள்.

மோடி மட்டும் சொல்லவில்லை. முன்னர் இந்திரா காந்தி சொன்னார்.

2013ல் ப சிதம்பரமும் இதையே தான் சொன்னார்.

ரியல் எஸ்டேட்டில் தங்கத்துக்கு பதில் நீங்கள் முதலீடு செய்யுங்கள். ரியல் எஸ்டேட் நிறுவனமும் மாதத் தவணையில் மனைகள் விற்பனை செய்கிறது. உங்கள் செலவை குறைத்து சேமிப்பை அதிகரித்து நல்ல ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் உங்கள் சக்திக்கு ஏற்ப உங்களுக்கு மனை தேவையோ தேவையில்லையோ வாங்கி போடுங்கள்.

20260416075409790.jpg

போர் முடியும் வரை தங்கம் வாங்காமல் இருப்பது தான் ஒரே வழி போலிருக்கிறது.

2026041123130456.jpeg

20260416095531280.jpeg

(அவரும் சொன்னாரு, இவரும் சொல்றாரு... யாரு கேக்கப் போறது)

ஏ.ஐ.வரைந்த படம்.