நயன்தாரா

முதலமைச்சர் விஜய்க்கு "வாழ்த்துக்கள் விஜய் சார் ..இந்த சரித்திரம் படைத்து விட்டீர்கள். இது அடுத்த நிகழப்போகும் அதிசயங்களின் ஆரம்பம் மட்டுமே என்று நயன்தாரா வாழ்த்தில்ஆயிரம் அர்த்தம் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசி கொள்கிறார்கள்.
பூஜா ஹெக்டே

மூன்றாவது முறையாக அல்லு அர்ஜுனாவுக்கு ஜோடியாகிறார் பூஜா ஹெக்டே.
ஐஸ்வர்யா ராஜேஷ்

வடசென்னை இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கும் போது இரண்டு முழு நிமிடங்கள் தடையின்றி கெட்ட வார்த்தை பேசும் படி என்னிடம் வெற்றி மாறன் கூறினார். எனக்கு மிகவும் கடினமாக இருந்தாலும் அவர் என்னிடம் சொன்ன அந்த கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு தயக்கம் இன்றி பேசினேன் "என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மீனாட்சி சவுத்ரி

தெலுங்கு பட இயக்குனர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக மீனாட்சி சவுத்திரி நடிக்கிறார்.
மமிதா பைஜு

விஷ்ணு விஷால் ஜோடியாக மமிதா பைஜு ஒரு படத்தில் நடிக்கிறார்.
ரம்யா ரங்கநாதன்

அன்பே டயானா என்ற படத்தில் ரம்யா ரங்கநாதன் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கிறார். இதற்காக பெரம்பூரில் உள்ள ஆங்கிலோ இந்தியர்களுடன் கலந்துரையாடி அவர்கள் உடல் மொழியை கற்று வருகிறார்.
திரிஷா

ரஜினி படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல்.
அசின்

கணவர் ராகுல் சர்மாவின் தொழில் தொடர்பான சில பொறுப்புகளில் ஈடுபட்டு வரும் அசின் அதன் மூலம் பத்தாயிரம் கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார்.
சிம்ரன்

எனக்கு பலமுறை பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது அங்கு நடிகைகளுக்கு மரியாதை என்பதே கிடையாது. அதனால் அவர்களுடன் என்னால் ஒன்றிப் போக முடியவில்லை என்கிறார் நடிகை சிம்ரன்

Leave a comment
Upload