தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260415192637987.jpeg

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைக்க முடிவு தமிழக அரசு அறிவிப்பு
காலையில பணத்தை வங்கியில் போட்டீங்களே?!


வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 பேர் கைது
தேர்தல் நியாயமா நடந்தது என்று அதிகாரிகள் எல்லாம் சொன்னாங்க அதானா இது? !


தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவிப்பு
கட்சிப் பதவியை ராஜினாமா செய்வாரோ? !


நயினார் நாகேந்திரன் பதவிக்கு சிக்கல் !
சிக்கல்ன்ன அவரும் மந்திரியோ ஆளுநராகவோ ஆகப் போறாருன்னு அர்த்தம்! !


சசிகலா டிடிவி தினகரன் கட்சியில் சேர்க்க வேண்டும் எஸ் பி வேலுமணி
எப்படி இவருக்கு திடீர்னு இந்த ஞானோதயம் இப்ப வந்தது?


ஆறு அமைச்சர்கள் பத்து வாரியத் தலைவர்கள் பதவி தருவதாக தமிழக வெற்றி கழகம் பேரம் எடப்பாடி பழனிச்சாமி
இது என்ன பெருசு உங்களுக்கு முதல்வர் பதவியே தரதா பேரம் பேசினார்களே? !!!


திமுக முதுகில் காங்கிரஸ் குத்தியது என சொல்வது பொருத்தமற்றது கார்த்திக் சிதம்பரம்
ஆமா நெஞ்சுல தானே குத்தினாங்க? !


தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு அழைப்பு கிரீஷ் சோடங்கர் தகவல்
நன்றி கடன்! ?


தெரியாம ஓட்டு போட்டுட்டம் என்று மக்கள் புலம்புறாங்க திமுக தலைவர் ஸ்டாலின்
உங்களுக்கு தானே? !


கேரளா புதிய முதல்வர் வீ.டி. சதீசன்
இப்பதான் ராகுல் காந்தி நிம்மதியா தூங்க போவாரு? !!!


திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு நன்றி
எதுக்கு விஜய்க்கு ஆதரவா ஓட்டு போட்டதுக்கா? !!


மேற்குவங்க பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்
பாஜக ஆட்சிக்கு வந்துட்டாங்களாம்!!

வழக்கறிஞர் உடை அணிந்து வாதாடினார் மம்தா பானர்ஜி
ஆமா இப்ப ஒன்னும் வேலை இல்ல இல்ல? !