
சினிமா நடிகர்களில் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதாவிற்கு அடுத்து மூன்றாவதாக தமிழக முதல்வராக C. ஜோசப் விஜய் .
கரை வேட்டி கட்டவில்லை , தோளில் அங்கவஸ்திரம் போடவில்லை கறுப்பு வெள்ளை பேண்ட் சூட் போட்டுகொண்டு ட்ரிம்மாக முதல்வராக விஜய பொறுப்பேற்றுக்கொண்டார்.
விஜய் கட்சி 108 எம்.எல்.ஏக்களை வைத்து கொண்டு எப்படி ப்ளோர் டெஸ்டில் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு , 144 ஓட்டுக்கள் எம்.எல்.ஏக்கள் அளித்து விஜய் முதல்வராக ஆதரித்தனர்.
கேரளாவில் நடக்கும் காங்கிரஸ் கட்சியில் அடுத்த முதல்வர் யார் என்ற குடுமிபிடி சண்டையை மறந்து எதிர்கட்சி தலைவர் ராகுல் விஜய் பதவியேற்பில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்.


முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் மகிழ்ச்சியாக இருந்தார் நடிகை த்ரிஷா.

விழாவின் ஹைலைட் நம்ம த்ரிஷா தான், விஜய் பதவி பிராமணம் எடுக்கும் போது அவரது கண்கள் கலங்கி உணர்ச்சி வசப்பட்டார்.

த்ரிஷாவை விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆரத்தழவி கொண்டார்.

தமிழகம் முழுவதும் திராவிட இயக்கம் கோலாச்சிய முதல்வர் பதவியை எந்தவித பின்புலமும் இல்லாமல் யாருடன் கூட்டணி இல்லாமல் விஜய் என்ற ஒற்றை சொல்லில் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார் C.ஜோசப் விஜய்.

எதிர்கட்சியினர் அனைவரின் வீட்டிற்கும் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுவந்தார் முதல்வர் ஜோசப் விஜய் , இது தமிழகத்திற்கு புதியது.

நாகரிக அரசியலை நச்சுன்னு கொண்டு வந்து அசத்தினார் விஜய்.
த.வெ.க கட்சியை ஆரம்பித்து இரண்டே வருடங்களில் தமிழக முதல்வரானவர் விஜய் .
முதல்வர் பணி என்பது முள்கீரிடம்…அது அவருக்கு பூமாலையாக மாறுமா என்பது இனி தான் தெரியும்.

சாதனை திரை நாயகன், இன்று சரித்திரத்தில் தமிழக முதல்வராக வலம் வருகிறார் C.ஜோசப் விஜய்.

Leave a comment
Upload