தொடர்கள்
கவர் ஸ்டோரி
தங்கம் வாங்கலாமா கூடாதா ?? - கோல்ட் டுடே சதீஷ் - ராம்

20260416093808174.jpeg

மோடி தங்கம் வாங்க வேண்டாம் ஒரு வருடத்திற்கு என்று சொல்லியிருக்கிறாரே என்று நண்பர் சதீஷ் கோல்ட் டுடே தங்க கடை வைத்திருப்பவரை ஒரு பிசியான வியாபார நேரத்தில் சந்தித்து கேட்டேன்.

அவர் சொன்ன சுவாரஸ்யமான விஷயங்கள்.

இந்தியர்கள் தங்கம் வாங்காதே என்று சொன்னால் கேட்க மாட்டார்கள்.

ஏனெனில் அது இந்தியர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு. செண்டிமெண்ட். நம் ரத்தத்தில் சிந்தனையில் ஊறிப் போன விஷயம்.

காலங்காலமாக நம் முன்னோர்கள் தங்கம் வாங்குவதை நம் உணர்வாகவே ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

ஏன் தங்கம் வாங்காதேன்னு பிரதமர் சொல்றாருன்னா ஒவ்வொரு துளி தங்கமும் இறக்குமதி செய்யப்படுபவை. அது ஃபாரின் எக்ஸ்சேஞ்சை நேரடியா பாதிக்கும். அதான்.

இன்னிக்கு டாலருக்கு எதிரா ரூபாய் 96 கிட்ட போயிருச்சு ஏன்னா இதான் காரணம்.

எப்பெல்லாம் எண்ணெய் விலை ஏறுதோ அப்ப தங்கும் குறையும். ரெண்டுமே இண்டைரக்ட்லி புரொபோஷனல்.

"சரி இப்ப வாங்கலாமா கூடாதா" என்ற கேள்விக்கு

இந்தியால தான் இந்த சிக்கல். ஹாங்காங் மாதிரி அல்லது வெளிநாட்டுல வாங்கலாம். நகையா வாங்கறதுக்கு பதிலா காயினா வாங்கலாம்.

இன்னிக்கு தங்கம் விலை குறைஞ்சிருக்கு. இருந்தாலும் ஒரு முதலீடா தங்கம் வாங்கறது என்னிக்குமே ஏமாத்தாது.

சதீஷ் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தங்கம் வைர வியாபாரத்தில் இருப்பவர். அனுபவசாலி. அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும் !!!