தொடர்கள்
கவிதை
அன்னையர் தினம்...!! கோவை பாலா

2026041608161292.jpg

தாய் இல்லாமல்
நான் இல்லை...!

சத்தியம் தான் அது...!

உன்உயிர்
அணுக்களைக்
கருவாக்கி
இவ்வுலகில்
எனைத்தந்தாய்..!

மண்பயிர்
வளர்த்திடும்
மழைபோல
பாசமழையில்
எனைவளர்த்தாய்...!

அத்தனை
பிள்ளைகள்
ஈன்றெடுத்து,
அன்பெனும்
குடும்பமாய்
அரவணைத்தாய்...!

உனக்கென்று நீ
எதை வைத்தாய்?
எங்களுக்கு
தாரா நீதான்
எதை வைத்தாய்...!

நீ உண்ண
உன் கை
தொடும்
தட்டில் தோசை...
நானுடன்
வருவேன்
நீயறிவாய்
என் கால் ஓசை....!

அள்ளிக்
கொடுப்பாயே
ஒருவாய்...!
மனதில்
இன்றும் நீயே
வருவாய்...!

உள்ளூர்முதல்
உலகச்செய்தியை
பேசிடுவாய் நீ...!
உள்ளொன்று
வைத்து புறம்
பேசமாட்டாய் நீ...!

நம்வீட்டுப்
பொருள் தரம்
பேசிடுவாய் நீ...!
அதுஏனோ
நம்வீட்டுப்
பொருளாதாரம்
பேசவேயில்லை நீ...!

பேசியிருந்தால்....?

ஒருவேளை
குடும்பநிலை
மாறியிருக்கும்....!
உன்னிலையும்
மாறியிருக்கும்...!

வேண்டாம் என
பேசாதிருந்தாயோ...?
வேண்டுமென்றே
பேசாதிருந்தாயா...?
புரியாத புதிர்தான்...!

நீ இன்பம் துன்பமதை
சொன்னதில்லை...!
சுகம் துக்கமதை
பகிர்ந்ததில்லை....!

மெளனமாய் நீ
மறைந்து
போனாய்...!
மனதிலே நீ
நிறைந்து
போனாய்....!

எத்தனை அன்னையர்
இப்படி இவ்வுலகில்...!
அத்தனை பேருக்கும்
அப்படியே தாள்களில்,

சமர்ப்பணம் செய்வோம்
அன்னையர் தினத்தில்...!!