மலைகளின் அரசியான ஊட்டியில் வருடந்தோறும் கோடை சீசன் வந்துவிட்டாலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் மொய்த்துவிடும் .
முக்கியமாக அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது.

இந்த பூங்காவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் முத்தாய்பாக ஊட்டி நகரின் மைய பகுதியான எல்கில் குன்றில் அமைந்துள்ள விஜயநகர தேயிலை தோட்டத்தை மிக பெரிய ரோஜா கார்டனாக உருவாக்கினார்கள் தோட்டக்கலை துறையினர்.

அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா வின் அழகிய கனவு தான் ஊட்டி ரோஜா பூங்கா!.
அப்போதைய தோட்டக்கலை உதவி இயக்குனர்களான முருகன் மற்றும் மணி ஆகியோரின் நேரடி பார்வையில் உருவாகின அற்புதமான பொக்கிஷம் தான் ஊட்டி ரோஸ் கார்டன்.
ஆசியாவிலே மிகப்பெரிய ரோஜா கார்டன் பத்து ஏக்கர் டெரஸ் கார்டன் 6000 ரக ரோஜாக்கள் இங்கு நடப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் நேரடி பார்வை ஆலோசனையில் உருவாகப்பட்டது இந்த அழகிய ரோஜா பூங்கா.
இங்குள்ள நிலா மாடம் கட்டப்பட்டதே ஜெ ஊட்டி வரும்பொழுது இங்கு வந்து அமர்ந்து ரோஜாக்களை ரசிக்க இருந்தாராம் ஆனால் ஜெ வின் கனவு நினைவாகவில்லை .
1995 ஆம் வருடம் மே 20 ஆம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா பொட்டானிக்கல் கார்டனின் நூற்றாண்டு விழாவை துவக்கி வைத்து ரோஜா கார்டனை திறந்து வைத்தார் என்பது மறக்கமுடியாத ஒன்று.
தற்போது 21 வது ரோஜா கண்காட்சி துவங்கியது.

வழக்கமாக மே 10 ஆம் தேதி ரோஜா கண்காட்சி துவங்கும் இந்த வருடம் தேர்தல் திருவிழா முதல்வர் விஜயின் பதவி பிரமாணம் என்று தள்ளிப்போனது.

ஒரு வழியாக மே 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்வியா தண்ணீரு மற்றும் நீலகிரி எஸ் பி நிஷா 21 வது ரோஜா கண்காட்சியை துவக்கி வைத்தனர்
உடன் நகர மன்ற தலைவி வாணீஸ்வரி கழக கண்மணிகள் துணை இல்லாமல் கலந்து கொண்டார்.
கரைவேட்டிகள் இல்லாத கண்காட்சியாக அமைந்தது.
ஊட்டி புதிய எம் எல் ஏ போஜராஜன் ரோஜா கண்காட்சி துவக்க விழாவில் மிஸ்சிங்!.
ஏன் என்று விசாரிக்க எம் எல் ஏ வுக்கு அழைப்பிதழ் அனுப்ப மறந்து விட்டார்களாம் மாவட்ட நிர்வாகமும் தோட்டக்கலை துறையும்.
சுற்றுலா பயணிகளின் கூட்டம் அவ்வளவாக இல்லை.
இந்தவருடம் பறவைகள் ஸ்பெஷல் ரோஸ் ஷோ!

பெங்களூரு ,கிருஷ்ணகிரியில் இருந்து இறக்குமதி செய்த 2 லட்சம் ரோஜா மலர்களால் அன்னப்பறவை, இருவாச்சி, கூண்டில் இருந்து எட்டி பார்க்கும் மரக்கிளி, மரக்ககொத்தி, கழுகு என்று பிரமாண்ட பறவைகள் கண்களை கவர்ந்தன.

வழக்கமாக டிசம்பர் மாதத்தில்
கவாத்து செய்து ட்ரீட்மென்ட் செய்து ஏப்ரல் மாதத்தில் பூக்கும் ரோஜாக்கள் மே மாதத்தில் பூத்து குலுங்கும் ஆனால் இந்த வருடம் ரோஜாக்கள் பூத்து குலுங்கவில்லை அவப்பொழுது கன மழை பெய்ததின் விளைவாக இருக்கலாம்.

ரோஜாக்கள் காய்ந்தும் உதிர்ந்தும் காட்சியளிக்கிறது.
நாம் ரோஜா கண்காட்சிக்கு ஒரு விசிட் அடித்தோம்
சுற்றுலா பயணிகளின் வருகை ஸ்லோ மோஷனில் இருக்கிறது காரணம் இ பாஸ் என்று கூறுகிறார்கள்.

சென்னை செங்கல்பட்டில் இருந்து வந்திருந்து விநாயகா நாட்டியாஞ்சலி மாணவிகளின் அழகிய நடனம் நிலா மாடத்தில் அரங்கேறி பார்வையாளர்கள் அமர்ந்து பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.
ஐந்து நாள் நடைபெறும் ரோஜா கண்காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் .

Leave a comment
Upload