தொடர்கள்
விளையாட்டு
ஐ பி எல் சீசன் 19 (2026): வாரம் 7 – பால்கி


20260415225927248.jpg

15 மே 2026

முதல் ஏழு மேட்சுகளில் தோல்வியே காணாத பஞ்சாப் அணி அடுத்தடுத்து ஆடிய ஆறு மேட்சுகளில் தோல்வியையேத் தழுவி முதல் ரேங்கிலிருந்து இன்றைய தேதியில் நாலாம் இடத்திற்கு வந்து விட்டது.

இன்று இந்த தொடரின் 59 ஆவது மேட்ச் சென்னைக்கும் முன்னமே தொடரின் ப்ளே-ஆஃப் நிலைக்கு வரமுடியாது என்று நீக்கப்பட்டுவிட்ட லக்னௌவுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது. சென்னை ஐந்தாம் ரேங்க்கில் இருக்கிறது.

பெங்களூரு, குஜராத், ஹைதராபாத், பஞ்சாப் இப்போது முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன.

லக்னௌவும், மும்பையும் ஏற்கெனவே பெற்ற் குறைந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தொடரின் ப்ளே-ஆஃப் நிலைக்கு வரமுடியாது என்று நீக்கப்பட்டுவிட்டன.

சென்னையும் ராஜஸ்தானும் மேலே செல்ல முடற்சிக்கலாம். டெல்லியும், கொல்கட்டாவும் எப்போது லக்னௌ, மும்பை போன்று நீக்கப்படுமோ?

இந்தியா A அணியில் இளம் புயல் வைபவ் சூர்யவண்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். பாராட்டுக்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் யூரோபியன் T20 லீக் அணியைப் பற்றி எழுதியிருந்தோம். இதில் அண்மை செய்தியாவது, நமது ராஹுல் த்ராவிட் தனக்கென டப்ளின் கார்டியன்ஸ் என்ற ஒரு அணியை வாங்கியுள்ளார்.

20260415230146975.jpg

508 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வாங்கியிருப்பவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹென்ரிச் க்ளாசன்.

22 விக்கெட்டுகள் எடுத்து பர்ப்பிள் கேப் வாங்கியிருப்பவர் பெங்குளூரின் புவனேஷ்வர் குமார்.

130 டாட் பந்துகள் போட்டு அசத்துபவர் குஜராத்தின் முகமத் சிராஜ்.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு இந்த விழா தொடரும்.