தொடர்கள்
அழகு
அழகு : பள்ளிப் பையை அணிவதற்கு முன்பே புடவை அணிந்தாள் - பால்கி

20260425211719915.jpeg

பள்ளிப் பையை அணிவது ஒரு புறமிருக்க, அவள் புடவை கட்டு விருது வாங்குவது கண் கொள்ளா காட்சி.

2026042521243614.jpeg

நான்கு வயதுகூட நிரம்பாத சிறுமி, நேர்த்தியான வெளிர் பழுப்பு நிறப் புடவை அணிந்து, இந்தியாவின் மிக பிரம்மாண்டமான மேடைகளில் ஒன்றில் நம்பிக்கையுடன் நடந்து வருகிறாள். பதற்றமில்லை. தயக்கமில்லை. அமைதியான, அசைக்க முடியாத கம்பீரம் மட்டுமே. அவள் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெறுகிறாள், அந்த ஒரு கணத்தில், வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி எழுதிவிட்டாள்.

20260425212538219.jpeg

த்ரீஷா.

த்ரீஷா விவேக் தோசர்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருந்த ஒரு சாதனையை அவள் முறியடித்திருக்கிறாள்.

அவள் மூன்று வயதில் நடித்ததற்காக, நான்கு வயதில் விருது. 'நால் 2' என்ற மராத்தித் திரைப்படத்தில், ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு அப்பாவி கிராமப்புறக் குழந்தையான சிமி கதாபாத்திரத்தில் த்ரீஷா வாழ்ந்திருப்பாள். பெரும்பாலான குழந்தைகள் எழுத்துக்களைக் கற்கும் வயதில், அவள் தனது இயல்பான, உண்மையான உணர்ச்சிகளால் ஒரு தேசிய நடுவர் குழுவை நெகிழச் செய்து விட்டாள்.

கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளாள் இவள். இது பற்றி கமல், "நீங்கள் என் சாதனையை முறியடித்துவிட்டீர்கள்! எனக்கு ஆறு வயதாக இருந்தபோதே எனது முதல் விருதைப் பெற்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசு தலைவரிடமிருந்து விருது பெறும் வீடியோ இதோ கீழே:

த்ரீஷா விவேக் தோசர் எப்படி நடித்திருக்கிறாள்(ர்) என்று பார்க்க உடனேயே ஆசைப்படுபவர்களுக்காக...

இது.....