தொடர்கள்
விளையாட்டு
ஐ பி எல் சீசன் 19 (2026): வாரம் 9 – பால்கி

20260430085730142.jpg

ஒருவாறு, வெளியேறிய அணிகள் வெளியேறிய பின்னர் ஆடிய ஆட்டங்கள் ஆச்சர்ய மூட்டுபவையாக இருந்தன.

தனது கடைசி மேட்ச்சில் பஞ்சாப் ஜெயித்தும், பிரயோஜனமில்லாமல் போயிற்று.

டெல்லி ஏதோ அப்போது தான் ஞாபகம் வந்தது போலே கடைசி 3 மேட்ச்சுகள் ஜெயித்தும் லாபமில்லாமல் போனது.

கொல்கட்டாவும் அதெ போன்று தான். தனது கடைசி 4 மேட்சுகளில் இரண்டு ஜெயித்தாலும் இரண்டில் தோற்றனர்.

மேற்கூறியவை இப்படியிருக்க, ராஜஸ்தான் மும்பையை தனது கடைசி லீக் மேட்ச்சில் எதிர்கொண்டு 30 ரன்களின்வென்று ப்ளே அஃப் சுற்றில் நாலாவது அணியாக உருவெடுத்தது. இதில் ஒரு முக்கியாமான அம்சம் என்னவெனின், ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஆல் ரௌவுண்ட் ஆட்டங்கள் அவருக்கு ஆட்ட நாயகன் விருதைத் தந்தது. முதலில் பேட்டிங்க்செய்த ராஜஸ்தான் அணிக்கு இரண்டாவது பெரிய ஸ்கோராக வெறும் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தது, அடுத்துமும்பையின் அணி பேட் செய்கையில் 4 ஓவரில் வெறும் 17 ரன்கள் கொடுத்து ரோஹித் ஷர்மா, நமன் திர், கேப்டன்ஹார்திக் பண்டையா என 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது அதி முக்கியம்.

புது சண்டிகர் நகரில் ஆடப்பட்ட எலிமினேட்டர் ஆட்டத்தில் ஹைதராபாத்தை ராஜஸ்தான் அணி 49 ரன்கள்வித்தியாசத்தில் வென்றது. இதற்கு இரண்டு பேர் முக்கிய காரணம். மட்டையைப் பிடித்த 15 வயது சிறுவன்ஆஸ்திரேலியாவின் கேப்டன் கம்மின்ஸ்ஸின் முதல் ஓவரிலேயே ஒரு பௌண்டரியும் அடுத்தடுத்த மூன்றுசிக்சர்களையும் அடித்து தனது அன்பான அராஜக ஆட்டத்தை காண்பித்தான். வயது 15, பெயர் வைபவ் சூரியவாண்ஷி.

29 பந்துகளில் 97 ரன்கள். 16 பந்துகளில் அம்பது கடந்து விட்டான். அப்பப்பா அவன் விக்கெட் விழுந்ததும் தான்ஹைதராபாத் அணியின் பௌலர்களுக்கு மூச்சே வந்தது.

அதே சமயத்தில், ஹைதராபாத்தின் பேட்ஸ்மன் ஒன்றும் சளைத்தவரில்லை. ஆனால், எடுத்து 243 ரன்கள் போதுமாஎன்றால் ஏனோ அன்று 150 கி.மீ வேகத்தில் பந்தெறிந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் அபார பௌலிங்க் கை கொடுத்ததைக்கண்டு கொள்ளாமல் இருக்கவே முடியாது. முதல் பந்திலேயே அதிரடிக்கு பெயர் போன அபிஷேக் ஷர்மாஅவுட்டக்கியது முதல் அடி. 50 % பலம் போச்சு. அடுத்து வந்த அதிரடிகள் ட்ராவிஸ் ஹெட், இஷான் கிஷானைத்தூக்கியது கிட்டத்தட்ட மேட்ச்சை ராஜஸ்தான் பக்கம் வந்து விட்டது எனலாம்.

இதற்கு முன் ஆடப்பட்ட முதல் ப்ளே ஆஃப் மேட்ச் பெங்களூருக்கும் குஜராத்துக்கும் தர்மசாலாவில் நடந்தது. அதுமுதல் செமி ஃபைனல் தான். முதலில் களமிறங்கிய பெங்களூரு 254 ரன்களைக் குவிக்க, அடுத்திறங்கிய குஜராத் 162 ரன்களுக்குள் சுருண்டது.

இந்த தொடரின் விதிமுறையாக, முதல் ப்ளே ஆஃப்பில் ஜெயிப்பவர் ஃபைனலுக்கு நேராக சென்று விடுவார். ஆனால்இதில் தோற்றவர் இரண்டாவதாக ஆடப்படும் எலிமினேட்டரில் கெயிக்கும் அணியோடு ஆடுவார், அது தான் இந்ததொடரின் இரண்டாவது செமி ஃபைனலாகும்.

எலிமினேட்டரில் ஜெயித்த ராஜஸ்தான் இப்போது வரும் வெள்ளியன்று குஜராத்தோடு நியூ சண்டிகரில் மோதுகிறது. இதில் ஜெய்ப்பவர் வரும் ஞாயிறன்று அஹமதாபாத்தில் பெங்களூருவுடன் ஃபைனல் ஆடும்.

இந்த தொடரில் ராஜஸ்தான் Vs குஜராத் அணிகளின் இதற்கு முந்தைய இரு மேட்ச்சுகளில் 1 -1 என்ற சமன் நிலையில்இருக்கின்றன.

இன்ன பிற …..

ஐ பி எல் வரலாற்றில் ஒரு இன்னிங்க்ஸின் முதல் பந்திலேயே 6 முறை விக்கெட் வீழ்த்திய முதல் பௌலர் என்றசாதனையைப் படைத்துள்ளார் 35 வயதாகும் லக்னௌ அணியின் முகமது ஷமி பெற்றுள்ளார்.

20260430085828343.jpg

​தற்போது லக்னௌ அணிக்காக ஆடி வரும் சச்சின் டெண்டூல்கரின் மகன் அர்ஜுன் டெண்டூல்கர் இந்த சீசனின் முதல்மேட்ச் விளையாடியிருக்கிறார். இந்த மேட்ச் தான் இந்த் தொடருக்கான லக்னௌவின் கடைசி மேட்ச்.

20260430085848472.jpg

இதை சச்சின், “ கிரிக்கெட் விளையாட்டு திறமையை எந்த அளவுக்கு சோதிக்குமோ அந்த அளவு பொறுமையைசோதிக்கும்” என்று பாராட்டி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

20260430085950170.jpg

இந்த ஐபி எல் சீசன் 19 ல் 'வருவார் வருவார்' என எதிர்பார்த்திருந்தும் கடைசி வரை வராது போனார் கேப்டன் கூல்தோணி. இருப்பினும் சென்னை அணியின் தலைமை அதிகாரி தோணியை நிரந்தரமாகவே எங்களுடன்வைத்திருக்கவே விரும்புகிறோம் என்கிறார். ஆடணுமா, கோச்சாக இருக்கணுமா, இல்லை வழிகாட்டியாகஇருக்கணுமா? எதை வேண்டுமானாலும் அவரே தீர்மானிக்கலாமாம்.

680 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வாங்கியிருப்பவர் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த குட்டி ராட்சஸன் வைபவ்சூரியவாண்ஷி

26 விக்கெட்டுகள் எடுத்து பர்ப்பிள் கேப் வாங்கியிருப்பவர் பெங்குளூவின் புவனேஷ்வர் குமார்.

பௌலிங்க் செய்த 346 பந்துகளில் 155 டாட் பந்துகள் போட்டு அசத்துபவர் குஜராத் அணியின் காகிஸோ ரபாடா .

96 ரன்கள் அடித்தும் செஞ்சுரி அடிக்க முடியலையே என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் அந்த பெரிய ஸ்கோர்கூட தனது அணியை ஃபைனல்ஸ்க்கு கொண்டு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் வேறு கூடிவிட்டது வைபவுக்கு.


எவ்வளவு அழுத்தமிருந்தால் அவன் 17.2 ஓவர் வரை பார்த்து பார்த்து ஆட வேண்டியிருந்தது. அவனுடைய அதிரடி ஆட்டத்தை ஒப்பிடுகையில் நேற்றைய ஆட்டம் ஒரு தொய்வான ஆட்டம் தான்.