தொடர்கள்
வலையங்கம்
இது யோசிக்க வேண்டிய விஷயம்

20260603220531485.jpg

மக்களால் பெரிதும் மதிக்கப்படும் பிரபலங்கள் மறையும் போது அவர்களைப் பற்றிய உருக்கமான செய்திகள் ஊடகங்கள் தர வேண்டும் ,செய்திகளை முந்தி தருகிறோம் என்ற வியாபாரப் போட்டிக் காரணமாக அவர்களின் தனிப்பட்ட குடும்பத்தினர் தங்களது சோகத்தை நிம்மதியாகவும் உரிமையாகவும் பகிர்ந்து கொள்ள முடியாமல் சில செய்தி சேனல்கள் பல யூடியூப் சேனல்கள் அடிக்கும் கூத்துக்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.

பாக்யராஜ் இறந்த பிறகு மருத்துவமனையில் இருந்து அவரது உடலை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை கேமராக்கள் சூழ்ந்து கொண்டன. இன்னும் சொல்லப்போனால் முற்றுகையிட்டார்கள் என்று கூட சொல்லலாம். அந்த சூழ்நிலை சோகம் உணராமல் பத்திரிகையாளர்கள் அங்கு காட்டிய பரபரப்புமுகம் சுளிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் கோபமான நடிகை ராதிகா, நான் கையெடுத்து கும்பிடுறேன், சினிமா எங்கள் தொழில் உங்களுக்கு டிராமா வேணும், டிஆர்பி வேண்டும் என்றால் நாங்கள் சினிமாவில் நடித்துக் கொடுக்குறோம் தயவுசெய்து கொஞ்சம் தயவு செஞ்சு கொஞ்சம் பிரைவசி கொடுங்க " என்று கையெடுத்து கும்பிட்டார். அதன் பிறகும் சிலர் கேமராவுடன் சூழ்ந்து கொள்ள அவர்களைத் தள்ளிவிட்டு ஆம்புலன்ஸில் இருந்து பாக்யராஜ் உடலை இறக்கினார்கள். இதேபோல் அவரது இறுதி ஊர்வலத்திலும் தடையாக இருந்த சில வீடியோ கேமராமேன்களை சுகாசினி தள்ளிவிட்டார். கடுமையாக எச்சரிக்கையும் செய்தார். இதையெல்லாமும் வீடியோவாக எடுத்து வெளியிட்டார்கள்.

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், விஜய் ஆண்டனி மகள் தற்கொலை, பாரதிராஜா இறந்த போதும் அவர்கள் செய்கை களேபரத்தை ஏற்படுத்தின. இவை எல்லாமே மனித மாண்பு இல்லாத ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. இதே நிகழ்வு இவர்கள் வீட்டில் நடந்தால் இவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களா என்பது தான் கேள்வி ?