
தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் உயர்ந்துள்ளதால் குடும்பத் தலைவிகள் கவலைப்படுகிறார்கள்.
அரிசி வியாபாரிகள் இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என்று குடும்பத் தலைவிகளை பயமுறுத்துகிறார்கள்.
நமது நாட்டில் விலைவாசி என்பது நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு முக்கிய வாழ்வாதார பிரச்சனை.
அரிசி விலை ஏற்றத்துக்கு ஆலை உரிமையாளர்கள் சொல்லும் காரணம் இதுதான் பருவ மழை பொய்த்ததால் டெல்டா மாவட்டங்களிலும், கர்நாடக, ஆந்திராவிலும் நெல் விளைச்சல் குறைந்துள்ளது.
நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டாம் என்று கர்நாடக அரசு அந்த மாநில விவசாயிகளுக்கு யோசனை சொல்லி இருக்கிறது என்கிறார்கள்.
தமிழகத்தில் உற்பத்தியாகும் நெல் ரகங்களில் தயாராகும் அரிசியை பெரும்பாலான தமிழக மக்கள் விரும்புவதில்லை. அவர்கள் சன்னரக அரிசியை விரும்புகிறார்கள்.
இந்த ரக அரிசி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து நமக்கு வரும். இப்போது வரத்துக்குறைந்து விட்டது விலை ஏறிவிட்டது என்கிறார்கள்.
அரிசி ஆலை அதிபர்கள் விலை உயர்வுக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் ஏற்பட்ட வறட்சி, பயிர் சேதம், காரணமாக அரிசி வரத்து குறைவு .
காவிரியில் நீர் திறப்பு இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி குறைந்தது.டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரிப்பு அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என கருதி நெல், அரிசியை சிலர் பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவது என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்கிறார்கள். கர்நாடகாவில் 13 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்கிறார்கள்.
ஆனாலும் அரிசிக்கு கர்நாடகாவை நம்பி இருக்கிறோம். தமிழகத்துக்கு ஆண்டுக்கு 90 லட்சம் டன் அரிசி தேவை.
இதில் 72 முதல் 75 லட்சம் டன் நம் மாநிலத்தில் விளைகிறது. அஞ்சு லட்சம் டன் கேரளாவுக்கு செல்கிறது. பற்றாக்குறை உள்ள 21 லட்சம் டன் அரிசியை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து நாம் வாங்குகிறோம்.
தமிழகத்தில் உற்பத்தியாகும் மோட்டாரக அரிசி விலை அதிகரிக்கவில்லை.
வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வரும் பொன்னி, வெள்ளைப் பொன்னி போன்ற அரிசி ரகங்கள் தான் விலை உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்.
அரிசி உரிமையாளர்களை பொறுத்தவரை அரிசி விலை படிப்படியாக உயரும் கிலோ 100 ரூபாய் கடக்கவும் வாய்ப்புள்ளது என்று பயமுறுத்துகிறார்கள்.
தமிழகத்தில் நெல் உற்பத்தி இருந்தும் முறையாக பாதுகாத்து சந்தைப்படுத்த முடியவில்லை.
விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை வாங்கும் அரசாங்கம் அதை பாதுகாக்க தார்ப்பாய் இல்லாததால் பல லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துப் போகின்றன. இந்த லட்சணத்தில் விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் போடுகிறோம் என்று பெருமை வேறு பேசுகிறது அரசாங்கம்.
சர்க்கரை என்று தாளில் எழுதி நக்கினால் அது இனிக்குமா அதுபோல்தான் இருக்கிறது விவசாயிகள் பட்ஜெட் என்கிறார்கள் விவசாயிகள்.
அரிசி விலை உயர்வு என்றால் அதன் பலன் விவசாயிகளுக்கு தானே கிடைக்க வேண்டும். அப்படி இல்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள் விவசாயிகள்.
நியாய விலைக் கடைகளில் அரசாங்கம் வழங்கும் அரிசி புழு பூச்சி மக்கி போனது என்ற அளவில் தான் இன்றும் விநியோகம் இருக்கிறது.
தரமான அரிசி நியாய விலைக் கடைகளில் என்பது எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மட்டுமே நடந்தது.
இப்போது நியாய விலைக் கடைகளில் இலவசமாக தரப்படும் அரிசியை அப்படியே குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்துபவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான்.
ஒரு முறை ஜோசப் விஜய் மற்றும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நியாய விலைக் கடைக்கு சென்று அந்த அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடட்டும் அப்போது உண்மை புரியும்.

Leave a comment
Upload