திரிஷா

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் திரிஷா. அங்கிருந்த இந்தியர்களிடம் பேசியவர் " எனக்கு ஆஸ்திரேலியா ரொம்ப பிடிக்கும் அதிலும் சிட்னி நகரம் ஸ்பெஷல் என்றார். அப்போது சிலர், "விஜய் சாரை கேட்டதாக சொல்லுங்கள்" என்று குரல் கொடுத்தனர். அதைக் கண்டு கொள்ளாதது போல் இருந்து விட்டார் நடிகை.
சாய் பல்லவி

சாய் பல்லவி தற்சமயம் ஹிந்தியில் ராமாயண படத்தில் சீதையாக தமிழில் ஓம்ப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர கதையின் நாயகியாக ஒரு இதிகாசப் படத்தில் சாய்பல்லவி நடிக்க இருக்கிறார்.
பூஜா ஹெக்டே

ஒரு நிகழ்ச்சியில் "உங்களுக்கு பிரச்சனை வந்தால் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு "சிறிது தூரம் நடப்பேன். அது வீடாக இருந்தாலும் சரி படப்பிடிப்பு தளமாக இருந்தாலும் சரி அதன் பிறகு என் மனது லேசாகிவிடும் "என்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
ரம்யா ரங்கநாதன்

அன்பே டயானா படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் "இந்த படத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் கைதட்டல் தான் எங்களுக்கு மிகப்பெரிய விருது. இது என் வாழ்க்கையில் நடந்த மேஜிக் "என்கிறார்.
தமன்னா

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'புருஷன்' படத்தில் அவருக்கு ஜோடி தமன்னா .
சினேகா

நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சினேகா
காயடு லோஹர்

இதயம் முரளி படத்துக்கு பிறகு இம்மார்ட்டல் மஞ்சணத்தி ஆகிய தமிழ் படங்களில் நடிக்கிறார் காயடு லோஹர்.
தனுஷ்

இனி தான் நடிக்கும் எல்லா படங்களும் தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு என்று நான்கு மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகர் தனுஷ்.
ஐஸ்வர்யா லட்சுமி

ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஜோடியாக நடிக்க இளவட்ட நடிகர்கள் போட்டி போடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார் நடிகை.
நயன்தாரா

தொடர்ந்து அம்மன் வேடங்களில் நடிப்பதால் ஆடி வெள்ளி அன்று கணவர் விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் சென்னை காளிகாம்பாள் அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
ஸ்ரீ லீலா

ஏற்கனவே எம் பி பி எஸ் படித்த நடிகை ஸ்ரீலீலா அடுத்து எம் டி படிப்பிற்கான நீட் தேர்வுக்கு தயாராகிறார் நடிகை.
நிதி அகர்வால்

ஏற்கனவே தமிழில் பூமி, ஈஸ்வரன் ,ஆகிய படங்களில் நடித்திருக்கும் நிதி அகர்வால் தற்சமயம் தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமாவில் நடிக்க விரும்புகிறார் அதற்கு அவர் சொல்லும் காரணம் நல்ல கதாபாத்திரங்களுக்கான களம் தமிழ் சினிமா என்கிறார்.
ஜான்வி கபூர்

சமீபத்தில் ஜான்வி கபூர் தனது சகோதரி குஷி கபூருடன் காப்பி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கரன்ஜோகர் உங்களுக்கு வந்த ப்ளடி மெசேஜ் எது என்று கேட்டார். அதற்கு ஒரு பிரபல நடிகர் என் உடம்பில் உள்ள மச்சங்களை பார்க்கலாமா என மெசேஜ் அனுப்பி இருந்தார் என்று பதில் அளித்தார். கரன் ஜோகர் " அப்படியா உங்களுக்கு எத்தனை மச்சங்கள் இருக்கின்றன "? என்று சிரித்தபடியே கேட்க ஜான்வி கபூர் சிரித்தபடியே "அது நிறையவே இருக்கின்றன " என்று பதில் அளித்தார்.

Leave a comment
Upload