கரப்பான் பூச்சி

ஜென் ஸி (Gen Z) இந்தியா முழுவதும் பேசும் பொருளாகிவிட்டது.
எல்லா பதவிகளும் தங்களுகசொந்தம் கொண்டாடிய மூத்த அரசியல் தலைவர்கள் கூட ஜென் ஸி பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் .
திமுக அதிமுக போன்ற கட்சிகள் அவர்களைத் தேடத் தொடங்கி இருக்கிறார்கள். இதே கதை தேசியக் கட்சிகளிலும் நடக்கிறது.
இலங்கை, வங்காளதேசம் ,நேபாள் ஆகிய நாடுகளில் அதிகாரம் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் ஜென் ஸி தலை முறை தான்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்திய அரசியலிலும் இது விவாதத்துக்குரிய ஒரு பொருளாக மாறியது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து இந்தியாவில் ஜென் ஸி இளைஞர்கள் கொண்ட அமைப்பான கரப்பான் ஜனதா கட்சி அது ஒரு மிகப்பெரியபிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்க வைத்தனர்.அதன் விளைவு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதாப் ராஜினாமா.
பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு என்ற பிரச்சினைக்கு கடும் தண்டனை என்று மசோதா கொண்டு வரும் அளவுக்கு இந்த பிரச்சனையை தீவிரமாக்கியது இந்த ஜென் ஸி தலைமுறை.
இவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த சோனம்வாங்சுக் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்திய அமைச்சர்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்கள்.
வாங்சுக் ஜென் ஸிதலைமுறை கிடையாது 60 வயதானவர் ஒரு போராளி என்பதால் அவரது ஆதரவை ஏற்றுக் கொண்டார் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேரில் சந்தித்த ராகுல் காந்தி ,அகிலேஷ் யாதவ், கனிமொழி ஆகியோருக்கு பெரிய அளவு அங்கீகாரம் தரவில்லை.
ஜென் ஸி தலை முறை .அதனால்தான் போராட்டம் முடிவுக்கு வந்து அமைச்சர் ராஜினாமாவுக்கு பிறகு இது ஜென் ஸி தலைமுறைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள் எதிர்க்கட்சி தலைவர்கள்.
இந்த அரசுக்கு சங்கடம் தர வேண்டாம் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததுடன் மாணவர்கள் மீது அவர் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார் என்று ஒரு கடிதம் எழுதினார்.
நானும் மாணவர் பருவத்தில் உங்களை மாதிரி போராட்டம் நடத்தி இருக்கிறேன் என்பதையும் அதில் குறிப்பிட்டார்.
அமைச்சர் பதவி விலகலுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஆனால் ஜென் ஸிஇயக்கத்தின் இந்த வெற்றி அரசியலை வேறு பாதைக்கு திருப்பி விட்டது .
இதில் ஜென் ஸி தலைமுறையின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்று எல்லா க்கட்சிகளும் யோசிக்க துவங்கி விட்டன.
இளைய தலைமுறை தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்பதை இந்த போராட்டம் அவர்களுக்கு உணர்த்திவிட்டது.

Leave a comment
Upload