தொடர்கள்
விகடகவியார்
அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? - லைட் பாய்

20260631090133881.jpeg

சமீபத்தில் ராயன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

திருவள்ளூரில் தனது பிறந்த நாள் விழாவில் பேசிய நடிகர் தனுஷ் "அந்தப் படத்தைவிட பல தகுதியான பல படங்கள் நிச்சயமாக வந்திருக்கு. அந்தப் படங்களுடைய ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினாங்க அதை நான் முழுசா மதிக்கிறேன்.

என்னோட ' அது ஒரு கனாக்காலம்' படம் ரிலீஸ் ஆச்சு. இந்தப் படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னாங்க. அப்ப நான் சின்ன பையன் நானும் ஆர்வமா இருந்தேன்.

கிடைக்கவில்லை

புதுப்பேட்டைக்கு கூட தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னார்கள். கிடைக்கவில்லை.

இப்ப ராயனுக்கு விருது கிடைத்திருக்கு. என்னுடைய உண்மையான உழைப்பு ஒரு தமிழரா எனக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு "என்று பேசிய தனுஷ் இவ்ளோ பேரை ஒரே ஒரு இடத்தில் கூட்ட முடியாது.

அது நடந்திருக்கு. நீங்க இந்த பவரை பாசிட்டிவ்வான வழியில் கொண்டு போங்க என்று அறிவுரை வழங்கினார்.

போயஸ் கார்டனில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் தனுஷ். அவருக்கு வாழ்த்து சொல்ல ஏராளமான ரசிகர்கள் கூடி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.

தனது வீட்டில் பால்கனியில் நின்று ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் தனுஷ் ஒரு கட்டத்தில் கீழே இறங்கி வந்து அவர்கள் பிரம்மாண்ட மாலை அணிவித்து அவரை கொண்டாடிய போது அவர் கைகூப்பி நன்றி தெரிவித்தார்.

சமீப நாட்களாக தனுஷ் ரசிகர்கள் நற்பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

தனுஷ் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது.

நான் எங்க மாமா மாதிரி வருவேன் என்று சொல்லிவிட்டு பிறகு பின் வாங்க மாட்டேன். அவசரப்படாமல் நிதானமாக யோசித்து முடிவு செய்வேன் என்கிறாராம்.

முதல்வர் ஜோசப் விஜய் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட். அவரை சந்திக்க முயற்சி செய்கிறார். தனுஷ்.

தனது ஜாதகம் கைரேகை இரணடையும் காட்டி தனது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதன் பிறகு அவர் முயற்சி தீவிரமாகும் என்கிறார்கள்.