தொடர்கள்
விளையாட்டு
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி

20260629173742715.jpeg

பிரிட்டனில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இருக்கிறார் கோவில்பட்டியை சேர்ந்தராஜா முத்துப்பாண்டி.

ராஜா முத்துப்பாண்டியின் தந்தை முத்துப்பாண்டி சுமை தூக்கும் தொழிலாளி.

இவரது மனைவி பேச்சியம்மாள் தீப்பெட்டி கம்பெனியில் கூலி தொழிலாளி.

இவர்களுக்கு சுரேஷ்குமார் மற்றும் ராஜா முத்து பாண்டியன் இரண்டு மகன்கள். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் கபடி வீரர்களாக தான் இருந்தார்கள்.

கபடி விளையாட்டுக்கு உடல் வலிமை வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி செய்ய ராஜா முத்துப்பாண்டியன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார்.

அங்கிருந்த பயிற்சியாளர்கள் தான் அவருக்கு பளு தூக்கும் பயிற்சியை அறிமுகப்படுத்தினார்கள்.

கபடி வீரர் ராஜா முத்துப்பாண்டியின் கவனம் பளு தூக்கும் போட்டியில் சென்றது. சங்கரலிங்கபுரத்தை பொருத்தவரை அந்தப் பகுதியில் பல பளூ தூக்கும் வீரர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தேவையான வசதி மற்றும் பயிற்சி இல்லாததால் அவர்களை இந்த உலகம் இன்னும் அடையாளம் காண முடியவில்லை.

ராஜா முத்துப்பாண்டி ஏற்கனவே 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தைப் பிடித்தார் அதன் பிறகு அவருக்கு சில அறுவை சிகிச்சை நடந்தது ஏதாவது காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அவை எல்லாவற்றையும் சமாளித்து கடந்த ஒன்றை ஆண்டுகள் கடும் பயிற்சிக்குப் பிறகு விடாமுயற்சியுடன் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்று இருக்கிறார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த வெற்றியை பாராட்டி அவருக்கு வாழ்த்து சொல்லி 30 லட்சம் ஊக்கத்தொகை அளிக்க இருப்பதாக அறிவிப்பு செய்து இருக்கிறார்.

ராஜாவுக்கு பயிற்சியாளராக இருந்த சொர்ண முத்து கோவில்பட்டி சுற்றுப்பட்ட இடங்களில் ஏராளமான பளூ தூக்கும் வீரர்கள் உள்ளனர் .தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தப் பகுதியில் ஒரு ஜிம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அவ்வாறு அமைக்கப்பட்டால் ஏராளமான வீரர்கள் பயன்பெறுவார்கள் பதக்கம் வெல்வார்கள் என்கிறார். இதை ஆதவ் அர்ஜுனா காது கொடுத்து கேட்டால் நல்லது.