
1971-1975 வரை காஞ்சீபுரத்தில் கல்லூரி படித்தவன்.
அந்த சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேனம்பாக்கத்தில் மகாஸ்வாமிகள் தங்கியிருந்த காலங்களில் அவரைச்சென்று தரிசப்பது என் வழக்கம்.
25/10/1977ல் என் அத்தைமகளுக்குக் காஞ்சீபுரத்தில் கல்யாணம்.
காலை நான் மட்டும் கல்யாண மண்டபத்திலிருந்து கிளம்பி தேனம்பாக்கம் நோக்கி மகாப்பெரியவாளை தரிசனம் செய்ய அங்கு பயணப் பட்டேன்.
ஸ்வாமிகளைப்பார்க்கக் கூட்டம் வரவில்லை.
அந்த சமயத்தில் எனக்கு உபநயனம் ஆகவில்லை, ஏன் என்று பெரியவர்கள் கேட்டதற்கு 1975ல் ஏற்பாடு ஆனது ஆனால் எனக்கு அன்று பரீட்சை இருந்ததால் நடைபெறவில்லை என்ற விவரம் சொன்னேன்.
என் குடும்ப நிலவரம் விசாரித்த பிறகு மடத்திற்கு ஒரு மூட்டை அரிசி வாங்கி தரச்சொன்னார்.
வேலை பற்றிய விவரம் கேட்க தற்காலிகவேலை என தெரிவித்தேன்.
பிறகு என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.
என்னால் அந்த ஒருமூட்டை அரிசியை உடனே வாங்கி தர இயலாத நிலை, அது மறந்தும் போயிற்று .
எனக்கு நல்ல வேலை கிடைத்து மணமாகிவிட்டாலும், ஆனால் மகானின் கட்டளை மட்டும் நிறைவேற்ற வில்லை.
இதனிடையில் நான் சென்னையில் பணிபுரிந்த சமயத்தில் திருவண்ணாமலை மாற்றலாக மனைவி சென்னையிலும் நான் திருவண்ணாமலையிலும் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை.
என்னை வளர்த்த பாட்டி அப்போது காஞ்சீபுரம் வாசம்.
ஒருவாரம் என் பாட்டி வரதரை சேவித்து விட்டு சென்னைக்கு போகச்சொல்ல நானும் சென்னைக்குப் போய், அங்கிருந்து திருவண்ணாமலை சென்றேன்.
மறுநாள் அதிகாலை கனவில் மகாப்பெரியவர் வர அந்த வாரக்கடைசியில் காஞ்சிபுரம் சென்று அங்கே பார்த்தால் பெரிய வரிசை.
என்னுடைய முறை வந்ததும் மகாப்பெரியவரிடம் அவர் கனவில் வந்த விவரம் சொல்ல, துறவிகள் கனவில் வந்தால், ஞாயிற்றுக்கிழமைகளில் சஹஸ்ர காயத்ரி அதாவது 1008 காயத்ரி நீயும் உன் அப்பாவும் ஜெபம் செய்ய உத்தரவிட இன்று வரை ஞாயிறுகளில் தொடர்ந்து ஜெபித்துவருகிறேன்.
மடத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய அரிசி ஒரு மூட்டை 01/02/1999ல் தான் சமர்ப்பிக்க முடிந்தது.

Leave a comment
Upload