
ஆளுநர் விழாவை உயர்கல்வி அமைச்சர் புறக்கணித்தார்
திராவிட மாடல் அரசை பின்பற்றி ....?
டெல்லி தடியடி தொடர்பாக சுதந்திரமான விசாரணை தேவை உச்ச நீதிமன்றம்.
எப்பவும் சிபிஐ விசாரணை தான் கேட்பார்கள் சுதந்திரமான விசாரணை என்றால் எங்கே போவது மை லார்ட் !!
காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படும் - முதல்வர் விஜய் அறிவிப்பு.
திமுகவை கடுப்பேத்தறதே ஒரு வேலையா வச்சிருக்கார் ஜோசப் விஜய் !!
பாஜகவை வாய்க்கு வந்தபடி பேசுவதா ? அமைச்சர் வன்னியரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்.
அதானே அப்புறம் ஜோசப் விஜய் கிட்ட அக்கா உங்களை போட்டுக் கொடுக்கும் பரவாயில்லையா !!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்கிய ஆணை ரத்து உயர் நீதிமன்றம் அதிரடி.
ஜோசப் விஜய்க்கும் கரூருக்கும் ராசியே இல்லை பரிகாரம் பார்க்கணும் !!
தேர்தலில் தோற்றுள்ளோம் கொள்கை கோட்பாட்டில் எங்களை விட வெற்றி கொண்டவர்கள் எவரும் இல்லை நாம் தமிழர் கட்சி சீமான்.
சரி தலைவரே இத வச்சி நம்ப சட்டசபைக்கு போக முடியாது, ஆட்சியில் பங்கு வாங்க முடியாது, புரிஞ்சுக்கோங்க தலைவரே !!
திமுக கூட்டணி வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் தான் காரணம் திருமாவளவன்.
ஆனால், திமுக தோல்விக்கு இவர் காரணம் இல்லை?
தேர்தலுக்கு முன் ஜனநாயகம் படம் வெளியாகி இருந்தால் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வென்றிருக்கும் செங்கோட்டையன்.
இந்த விஷயம் எப்படியோ சென்சார் போர்டுக்கு தெரிந்து போய் இருக்கு ?
இனி, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு.
எல்லாம் ஜோசப் விஜய் பாதிப்பு தான் !!
திமுக ஆட்சியில் நடந்த குளறுபடிகளே மேகதாது பிரச்சனைக்கு காரணம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
இப்படியே சொல்லி அஞ்சு வருஷம் ஓட்டிடுவாங்க போல தெரியுது ?
மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
அப்போ மூணாம் தேதி முதல்வர் போவது சும்மணங்காட்டி தானா !!
அரசின் வருவாயை பொருக்க பாண்டே சிங் அலுவாலயா தலைமையில் ஒரு குழு தமிழக அரசு அறிவிப்பு.
வாக்குறுதிகளை அள்ளிவீசத்தான் தெரியும் போல இருக்கு வருவாயை பெருக்கத்த தெரியாது போல இருக்கு ?
கூவம் ஆறு தூர்வாரும் பணி தொடக்கம் அமைச்சர் ஆனந்த் பார்வையிட்டார்.
நீங்களும் கூவத்தை கிளர ஆரம்பிச்சுட்டீங்களா ?

Leave a comment
Upload