தொடர்கள்
வலையங்கம்
வங்கிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது

20260714172952229.jpg

ஜென் Z தலைமுறை தங்களது 25 வயதிலேயே கிரெடிட் கார்டு தனிநபர் கடன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து இருக்கிறது ."முதலில் சேமி ,பிறகு செலவு செய்" என்ற பழக்கத்திற்கு பதிலாக 'இப்போது செலவு செய் பின்னால் செலுத்து' என்ற மனநிலை இளம் தலைமுறையிடம் அதிகரிப்பு இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் நிலுவையில் உள்ள கடன் கடந்த நிதி ஆண்டில் 3 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி வேதனை தெரிவித்து இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் கருத்து ஏற்கப்பட வேண்டியது தான். அதே சமயம் இலக்கு நிர்ணயித்து தகுதி இல்லாதவர்கள் தலையில் கடன் அட்டைகளை கட்டிவிட்டு அதன் பிறகு வட்டி அதற்கு மேல் வட்டி என்று அவர்களிடம் ஆட்களை வைத்து மிரட்டி வசூலிக்கும் வேலைகளையும் வங்கிகள்தான் செய்கிறது. அதேசமயம் உண்மையான தேவையுள்ளவர்கள் வங்கியை அணுகினால் அவர்களை அலைக்கழிக்கும் வேலையும் வங்கிகள் தான் செய்கிறது. இதையும் ரிசர்வ் வங்கி நினைவில் கொள்ள வேண்டும்.

20260715101721725.jpeg