தொடர்கள்
வலையங்கம்
சட்டசபையா சத்த சபையா

சட்டசபையா ? 'சத்த' சபையா ?

20260728182006794.jpeg

தற்போது சட்டமன்றம் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. பெரும்பாலும் விவாதம் அரசியல் சாடல் ஒருவர் மீது ஒருவர் புகார் திமுக திராவிட ஆட்சி சாதனை பட்டியல் ஆளுங்கட்சி தளபதி புகழ் என்று போய்க்கொண்டிருக்கிறது. தவிர ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை.

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய கருத்துக்கள் எல்லோரும் யோசிக்க வைக்கும். "ஆளாளுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் குறை சொல்லிக்கிட்டு தான் இருக்கிறோமே ஒழிய, இதனாலே தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு என்ன பலன் என்ற கேள்வியை நான் இங்கே கேட்கிறேன். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், இதுவரைக்கும் ஆட்சி செய்தவர்கள், எல்லோரும் சிறப்பா தான் ஆட்சி செஞ்சிருக்காங்க. இதுவரைக்கும் யாருமே இங்கே குறை சொல்ல முடியாது. இன்னைக்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது உங்கள் ஆட்சியை மக்களுக்கு இந்த நாட்டுக்கு நல்லது செய்வதற்கு நீங்கள் எல்லா முயற்சியும் எடுங்கள். அதற்கு மக்களும் சரி எல்லோரும் துணை நிற்போம் என்று தான் சொல்கிறோம். எப்ப பாரு சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை மக்களுக்கு இதனால் என்ன பலன் ? விவாதம் என்பது ஓரளவுக்கு இருந்தால் ரசிக்கலாம் "என்று சொல்லி இருக்கிறார்.

சட்டசபை என்பது ' சத்த ' சபையாக கூடாது சண்டை சபையாக கூடாது என்கிறார் உறுப்பினர். மக்கள் கருத்தும் அதுதான்.