
சட்டசபையில் கடும் அமளி திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்.
இப்ப எல்லாரும் டிவி சீரியல் பார்ப்பதில்லை சட்டசபை நேரலை தான் பார்க்கிறாங்க, ஜனங்களுக்கான என்டர்டைன்மென்ட் அதுதான் !!
திமுக ரியல் ஆட்சிநடத்தியது த.வெ.க ரீல்ஸ் ஆட்சி நடத்துகிறது ஏ.வா. வேலு ஆவேசம்.
அப்புறம், ஏன் ஜனங்கள் உங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
நாளை விஜய் நடத்தும் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம் அறிவிப்பு.
ஆனா, பாருங்க காம்ரேட், உங்க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் முதல்வரை நல்லவர் என்று சொல்றாங்க ?
சர்க்காரியா கமிஷனுக்கு பிறகு மூன்று முறை திமுக ஆட்சிக்கு வந்தது உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
அதாவது ஜனங்களுக்கு ஞாபக மறதி ஜாஸ்தின்னு தலைவர் சொல்றார் !!
சொந்த தொகுதியான ரேபெரேலியில் ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப்பயணம்.
தொகுதி மக்கள் மறந்திட போறாங்கன்னு பயம் இருக்கும் ?
பழைய கதைகளை பேசி நேரத்தை வீணடிப்பதா பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்.
ஆனா பாருங்க சிஸ்டர், ஜனங்களுக்கு பிடிச்சிருக்கு போல தெரியுது ?
சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி சவால்.
அண்ணா வேணாம் தேவையில்லாமல் வம்புல மாட்டாதிங்க !! உங்க தலைவருக்கு இருக்கிற மாதிரி அவருக்கும் ஆறு பேர் கொண்ட குழு இருக்கு !!
இந்தியாவில் செல்வாக்கு மிக்கவர்கள் மீதான வழக்குகள் விசாரிப்பது கடினம், சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.
உயர்நீதிமன்றத்திற்கு யாரோ பயம் காட்டி இருக்காங்க !!
முதல்வர் விஜயின் நண்பர்கள் கட்டுப்பாட்டில் கனிமவளத்துறை உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
சரி விடுங்க, உங்க பிரண்டு ரித்தீஷ் எப்படி இருக்காரு? அதை சொல்லுங்க !!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான படிகள் உயர்வு.
அவசியம் தான் பாவம் ரொம்ப ஏழைங்க ?
பெண்கள் பற்றி தவறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும் சட்டசபையில் விஜய்.
இது உங்க கட்சிக்காரர்களுக்கும், பொருந்தும் தானே ?
ஆட்சியில் இருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட திமுகவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன் ? சட்டசபையில் முதல்வர் விஜய் கேள்வி.
அதான் ஆட்சியில் இருந்த போதும் சொல்லிட்டீங்க.....திமுக காரங்கன்னு சொல்லிட்டீங்க அப்புறம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ?

Leave a comment
Upload