
நான் பட்டபடிப்பு முடித்த பின் வேலைக்காக வங்கித் தேர்வு, தமிழக அரசுத்தேர்வு தொடர்ந்து படைஎடுப்பு .
தற்காலிக வேலைமட்டுமே கிடைத்தது. என்ன செய்வது, தமிழக அரசில் 10ஏ1 பணிகூட கிடைக்கவில்லை அவ்வளவு ஏன்? எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது 996 அரசாணை மூலமாக நிறைய பணியாளர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். அதில் கூடஎனக்கு கிடைத்த பாடில்லை.
இந்த சமயத்தில் சின்மயா மிஷன் பற்றிக் கேள்விப்பட்டு அந்த மிஷனில் சேர்ந்தேன். அந்த சமயத்தில் ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் பகவத் கீதை பற்றிய உபன்யாசம் தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி மைதானத்தில் தினந்தோறும் உபன்யாசம் நடைபெற்றது. கேட்க ஆரம்பித்து மெதுவாக சின்மயா மிஷனில் நண்பர்களாக பிலிப்ஸ் கம்பெனி இஞ்சினியர் கிஷோர், அசைட் என்ற ஆங்கில பத்திரிகையில் பணிபுரிந்து வந்த கேசவன் தவிர டிடிகே குடும்பத்தைச் சேர்ந்த திருமதி. பத்மா நரசிம்மன் என நல்ல நண்பர்கள் கிடைத்தனர். வேலைக்காக ஒருபுறம் முயற்சி, சைட் பை சைட், இந்த சின்மயா மிஷன் மூலமாக ஆன்மிக பயிற்சி.
சின்மயானந்தா அவர்கள் பிரபல எழுத்தாளரான மணியனை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
சுவாமிகளுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்த போது

அவருக்கு எழுதிய கடிதத்திற்கு வந்தது பதில்


அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். என் திருமணத்திற்கு அவரை அழைத்திருந்தேன்.
ஆனால் அவரால் வர இயலவில்லை. என் திருமணம் முடிந்ததும் அவர் தங்கியிருந்த நுங்கம்பாக்கத்தில் நானும் என் மனைவியும் நேரில் சென்று அவரிடம் ஆசீர்வாதம் பெற்று வந்தோம். அப்போது அவர் துறவிகள் கல்யாணத்திற்கு வரக்கூடாது இந்த விவரம் சொன்னால் இவன் வருந்துவான், ஆனால் இப்போது நீங்கள் வந்தது சரி என்றார்.

Leave a comment
Upload