
மும்பையில் 2026 கணேஷோத்சவத்திற்கு ரூ. 703.27 கோடி காப்பீடு – பால்கி
மும்பையின் கிங்ஸ் சர்க்கிளில் (King's Circle) அமைந்துள்ள GSB சேவாமண்டலின் 'மகா கணபதி' சிலை, இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்தவிநாயகர் சிலை.
இதே மண்டலி 2024ல் ரூ. 400.58 கோடிக்கும், 2025ல் ரூ. 474.46 கோடிக்கும்காப்பீடு செய்திருந்தனர்.
இந்த சிலையை 66 கிலோ தங்க ஆபரணங்கள், 335 கிலோ வெள்ளி மற்றும்பிற மதிப்புமிக்க பொருட்களால் அலங்கரிக்கப்படுகிறது. இவை அனைத்தும்பொதுவாக பக்தர்கள் மற்றும் சேவகர்களால் காணிக்கையாகவழங்கப்பட்டவை. இந்த வருடமும் இன்னும் வரும்.
வராதா பின்ன? காரணம் இது தான்.
உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு இவர் செய்யும் எண்ணற்ற அற்புதங்கள்மற்றும் அளவற்ற தெய்வீக அருளாசி காரணமாக, இவர் ' நவ்ஸாலா பாவ்ணாராவிஷ்வாச்சா ராஜா' (வேண்டியது நிறைவேற்றும் அகிலத்தின் அரசன் - NAVSALA PAVNARA VISHWACHA RAJA | नवसाला पावणारा विश्वाचा राजा) என்றும் அன்புடன்அழைக்கப்படுகிறார்.
இந்த ஆண்டு, தனது 72-வது ஆண்டைக் கொண்டாடுகிறது இந்த மண்டலி.
'விராட் தர்ஷன்' (சிலை தரிசனத் தொடக்க நிகழ்வு) செப்டம்பர் 12, 2026 அன்று நடைபெறவுள்ளது.
கணேஷோத்சவ விழா செப்டம்பர் 14, 2026 முதல் செப்டம்பர் 18, 2026 வரைநடைபெறும்.
சிறப்பம்சங்கள்:
நாள் முழுவதும் (24 மணி நேரமும்) ரிக் வேதம் மற்றும் எங்கள் பாரம்பரியமுறைப்படி, வழிபாட்டுச் சடங்குகள் (பூஜைகள், அர்ச்சனைகள், சேவைகள், அன்னதானம்) நடைபெறும் நகரின் ஒரே மண்டல் (அமைப்பு) இவர்களுடையது தான். இந்த பந்தலில் பக்தர்கள் மற்றும் சேவகர்களால் மகாகணபதிக்கு சராசரியாக 60,000-க்கும் மேற்பட்ட பூஜைகள் மற்றும் சேவைகள்செய்யப்படுகின்றன.
தினமும் தோராயமாக 20,000-க்கும் மேற்பட்டோரும் என 5 நாட்களில்1,00,000-க்கும் மேற்பட்டோருக்கு வாழை இலையில் அன்னதான சேவைநடக்கும்.
சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதைக் கருத்தில் கொண்டு இந்த மகாகணபதி சிலை குறிப்பிட்ட வகை இயற்கைக் களிமண் (ஷாடு மாட்டி), புல்மற்றும் இயற்கையான முறையில் பெறப்பட்ட நீர் வண்ணங்களைக் (water colors) கொண்டு உருவாக்கப்படிகிறது
எங்கள் மகா கணபதி Eco-friendly தானே என்கிறார்கள் இந்த மண்டலி
இது மட்டுமா காகித ரசீதுகளுக்கு டாட்டா செய்து காகித விரயம் மற்றும்பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில், டிஜிட்டல் முறையில் ரசீதுவழங்குகிறார்கள். ஆக, எங்க கண்பதி Go Green செயல்பாட்டுத் திட்டத்தைநோக்கிச் செயல்படுகிறது எங்கிறார்கள் மண்டலியின் அதிகாரி.
இது 'தி நியூ இந்தியா இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்' (The New India Insurance Co. Ltd.) மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி
'ஆல் ரிஸ்க்' (All Risk) காப்பீட்டுத் திட்டம் - தங்கம், வெள்ளி மற்றும் நகைகள்உள்ளிட்ட பல்வேறு வகையான இடர்பாடுகளுக்கான பாதுகாப்பு: நிலநடுக்கஅபாயத்தையும் உள்ளடக்கிய நிலையான தீ விபத்து மற்றும் சிறப்புஇடர்பாடுகளுக்கான காப்பீடு: தளபாடங்கள், பொருத்துதல்கள், கணினிகள், சிசிடிவி கேமராக்கள், கியூஆர் (QR) ஸ்கேனர்கள், சமையல் பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றுக்கானபாதுகாப்பு: பொதுப் பொறுப்புக் காப்பீடு (Public Liability) - பந்தல்கள், அரங்குகள் மற்றும் பக்தர்கள் போன்றோருக்கான பாதுகாப்பு: தனிநபர்விபத்துக் காப்பீடு - தன்னார்வலர்கள், அர்ச்சகர்கள், சமையல்காரர்கள், 'காடி' (Gadi) பணியாளர்கள், காலணி வைப்பறை ஊழியர்கள், வாகன நிறுத்துமிடப்பணியாளர்கள் (Valet Parking), பாதுகாவலர்கள் போன்றோருக்கானபாதுகாப்பு: விழா நடைபெறும் இடத்திற்கான நிலையான தீ விபத்து மற்றும்சிறப்பு இடர்பாடுகளுக்கான காப்பீடு என்பவை இதில் அடங்கும்.

Leave a comment
Upload