
குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலென
பெற்றவள் சொன்னதும் நினைவிலே!
தெய்வங்களே குழந்தைகளானால்
தெவிட்டாத கொண்டாட்டம் அன்றோ
தெளிந்த பக்திகொண்ட மனத்திலே!
நலந்தரும் சக்கரத்தான் விழுங்கியதும்
உலகமென பெற்றோரைச் சுற்றியதும்
குலங்காக்கும் வள்ளல் கணபதியே!
எந்தையிடம் பழம்வேண்டி கோபித்தும்
விந்தைபல வேலோடு புரிந்த வெற்பன்
சிந்தையில் செல்வ முத்துக் குமரனே!
மண்ணுண்ட வாய்தனில் எண்ணிலா
அண்டங்கள் காட்டிய எழிலார் மகவும்
கண்ணனெனும் லீலா வினோதனே!
அம்புலி விழுங்க ககனவெளியில்
அச்சமின்றிப் பாய்ந்த பிள்ளை
அஞ்சனை பெற்ற ஆருயிர் அனுமனே!
ஐயமின்றி தொழுதக்கால் நாமும்
உய்ந்தே வாழ்வினில் உயர்ந்திட
தெய்வக் குழந்தைகள் காப்பரே!
AI சித்திரம் :
ஜி. சீனுவாசன், பெங்களூர்

Leave a comment
Upload