கடந்த ஞாயிற்று கிழமை (27 -9 -2026 ) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது . உலக சுற்றுலா தளமான நீலகிரியில் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.

மலைகளின் அரசியான ஊட்டியில் நீலகிரி ஹோட்டல் மற்றும் உணவு சங்கம் (NHRA ) இணைந்து இந்த நாளை கொண்டாடினார்கள் .
இந்த வருட சுற்றுலா தினம் " பொறுப்பான , பாதுகாப்பான, நிலையான மற்றும் உள்ளூர் சமூகங்களை மையமாக க்கொண்ட சுற்றுலாவை மேம்படுத்துவது " என்ற நோக்கத்துடன் இந்த நாளை சிறப்பித்தனர் .
நீலகிரியில் உள்ள 250 ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளின் பணியாளர்கள் கலந்து கொண்ட சுற்றுலா தின பேரணி ஊட்டி நகரில் நடைபெற்றது . இந்த பேரணியில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பிரிவின் ' ஒற்றுமை ,தொழித்துறை அணுகுமுறை மற்றும் நீலகிரியின் கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் பேரணியாக திகழ்ந்தது .

உலக சுற்றுலா தின பேரணியை கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் NHRA தலைவர் சுரேஷ் துவக்கிவைத்தனர் .பேரணி பொட்டானிக்கல் கார்டன் சாலையில் நிறைவு பெற்று உணவு திருவிழாவை மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா துவக்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
நாம் சுற்றுலா உணவு திருவிழாவிற்கு ஒரு விசிட் அடித்தோம் .நீலகிரில் உள்ள பிரபல 16 ஹோட்டல்களில் வெளிநாடு உள்ளூர் உணவுகள் ரெடியாக இருந்தன . சாமானிய மக்கள் கூலாக நுழைய முடியாத ஸ்டார் ஹோடேல்களின் காஸ்டிலியான உணவுகள் கார்டன் சாலை நடைபாதையில் நம் கண்களுக்கு விருந்தாக காத்துக்கொண்டிருந்தது .

சிக்கன்- மட்டன் பிரியாணி , கட்லெட்டுகள் , பாவ்பாஜி ,. சில்லி சிக்கன் ,வழக்கமான பானிபூரி, பேல்பூரி ,அனைத்துவகையான ச்சாட்ஸ் . ஐரோப்பிய பேக்கரி உணவு வகைகளான பன் வகைகள் ,கிரோசம் ,கப் கேக் மற்றும் பேஸ்ட்டரிஸ் .
மேலும் சீனா , ஜப்பான் ,நேப்பால் வகை உணவுகளான நுடுல்ஸ் , Dimsum -மோமோஸ், Bao ,Fried Rice ,ட்ராகன் சிக்கன்,நம் நாவை எச்சில் ஊறவைத்து இழுத்தன. ஒரு பக்கம் சுற்றுலா பயணிகள் மற்றும் லோக்கல் மக்கள் குவிந்திருந்தனர் . படு பிசியாக உணவு பதார்த்தங்களை சுவைத்த வண்ணம் இருந்தனர்.

எல்லினோ வெப்பத்தை தணிக்கும் வகையில் கல்ப் நாட்டின் கூல் வகையான சவுதி கூல் , துபாய் மாக்டெல், சில் டீ, ஐஸ் கிரீம் வகைகள் ஊட்டி குளிரை கூலாக்கியது. ஆலூ போராட்ட ,கபாப் , பிரெஞ்சு பிரை,என்று குவிந்திருந்தது. சுற்றுலா மாணவர்கள் , இளம் ஜோடிகள், லோக்கல் மக்களின் கூட்டம் உணவுகளை சுவைத்து கொண்டிருந்தனர்.

கல்லூரி பேராசிரியர் பிரணவ் மற்றும் அப்சரா புதுமண தம்பதிகள் சிக்கன் பிரியாணியை சுவைத்து கொண்டிருந்தனர் , " உலக சுற்றுலா தினத்தன்று உலக புகழ்பெற்ற ஊட்டி பொட்டானிக்கல் சாலையில் உணவு திருவிழா அன்று பிரியாணி சுவைப்பது ஒரு வித்யாசமான அனுபவம் .
It is very tasty என்றார் அப்சரா ! விலையும் குறைவு தான் என்கின்றனர் இந்த தம்பதியினர் .

ஹெப்ரோன் பள்ளி மாணவன் ஆதவ் தன் முட்டு அறுவை சிகிச்சை செய்த பின் கூலாக வீல் சேரில் அமர்ந்த வண்ணம் இந்த திருவிழா உணவை சுவைத்து கொண்டிருந்தான் " உணவு ரொம்பவே சூப்பர் I am enjoying It " என்று கூறினான்.
லோக்கல் பாடகர் பாலுவின் இன்னிசை கச்சேரி நடந்து கொண்டிருக்க தூத்துக்குடி ,குற்றாலம் மற்றும் கேரளாவில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவர்கள் பாடலுக்கு ஏற்ற நடனம் ஆடிகொண்டிருக்க .ஊட்டி ஏ டி எஸ் நடன குழு சாலை நடுவில் நடனம் ஆடி தூள்கிளப்பி கொண்டிருந்தனர் .
காஸ்டலி ஹோட்டல்களான சவாய், ஜெம் பார்க் , மைண்ட் எஸ்கேப் , பிரியாட்டிக் டேபிள் ,க்ளூனி மேனர், கிளப் மகேந்திரா , ஸ்டெர்லிங், அக்கார்ட் ஐலண்ட் என்று ஹோட்டல்கள் பாதி விலைக்கு தங்களின் தயாரிப்பை உலக சுற்றுலா தினத்திற்காக வழங்கினார்கள் .
நீலகிரி ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் (NHRA )செயலர் சலீம் பாஷா கூறும்போது ,

" கடந்த இரண்டு வருடமாக உலக சுற்றுலா தினத்தன்று இந்த உணவு திருவிழாவை நடத்தி வருகிறோம் .இந்த சிறப்பான நாளில் ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தினோம் இதில் நிறைய தகவல்களை சமுதாயத்திற்கு தெரிவித்தோம் இயற்கை பாதுகாப்பு , குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ,AI தொழில்நுற்பம் அதன் தாக்கம் அதே சமயம் எங்க இண்டஸ்ட்ரியில் மனித ஈடுபாடு மிக முக்கியம் .
நிர்வாக பணிக்கு ஏ ஐ முக்கியமாக தன் பணியை செய்யும் சுற்றுலாக்களை உட்சாக படுத்தவும் கவர்ந்து இழுக்கவும் இந்த உணவு திருவிழா நடத்துகிறோம் " என்று கூறினார்.
நீலகிரி ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரெண்ட் சங்கத்தின் தலைவர் சுரேஷிடம் பேசினோம்,

" கடந்த இரண்டு வருடமாக தொடர்ந்து இந்த உணவு திருவிழா நடைபெறுகிறது .எல்லா ஹோட்டல்களும் நல்ல ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர் .250 ஹோட்டல் பணியாளர்கள் உலக சுற்றுலா தின பேரணியில் கலந்து கொண்டு முக்கிய குறிக்கோளான keep Clean Keep Green and AI tourism வலியுறுத்தி நடந்து வந்தனர் அனைத்து கான்டினன்ட்டல் ,கபாப் ,பேஸ்ட்டரிஸ், ஐஸ் கிரீம் மற்றும் உயர்ந்த ரக டீ காபி இடம்பெற்றுள்ளது .இந்த மாவட்டத்தில் சுற்றுலா மிக முக்கியமான ஒன்று அதனால் எங்கள் ஸ்டார் ஹோட்டல்களில் சுத்தமான தரமான மற்றும் சுவையான உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகிறது .ஸ்டார் ஹோட்டல் உணவுகள் இன்று 30 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை மட்டுமே!
நீலகிரில் சுற்றுலா வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் .வெளிநாட்டு சுற்றுலாக்கள் இன்று காணப்படவில்லை கடந்தவாரம் எங்க ஜெம் பார்க் ஹோட்டலுக்கு வந்து தங்கி சென்றனர்.
அடுத்த வருடத்திற்குள் நீலகிரி சுற்றுலா வளர்ச்சி உயரும் என நம்புகிறோம்" என்றார் .
இந்த சங்கத்தின் முன்னாள் செயலர் சந்திரசேகர் கூறும் போது,

" நீலகிரி ஒரு முக்கியமான சுற்றுலா தளம் உலகத்தில் மிக பிரபலமான சுற்றுலா இடம் என்று சொன்னால் மிகையாகாது.
இந்த சுற்றுலாதளத்தில் ஏகப்பட்ட வளர்ச்சி குறைபாடுகள் இருக்கின்றன .முக்கியமாக குண்டும் குழியுமான சாலைகள்,மிக மோசமான நடைபாதைகள் ,கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தேங்கி கிடக்கும் குப்பைகள் . மறுபக்கம் சரியான பார்க்கிங் வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பதை பார்க்க முடிகிறது.அரசுக்கு ஜி எஸ் டி மூலமாக வியபாரிகள் , டூரிஸ்ட் டாக்ஸி ஏகப்பட்ட வரி செலுத்திவருகிறோம் ஆனால் நகரில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தான் உண்மை .
மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சரியான டாய்லெட் வசதி இல்லை அவர்கள் தவிப்பதை பார்க்கமுடிகிறது . ஊட்டி நகரை விட்டு தள்ளி சென்றால் மிக அழகான இடங்கள் உள்ளன புதிய சுற்றுலா தளங்களை உருவாக்க வேண்டும் .சுவிட்ஸர் லேண்ட் போல பல இடங்கள் உள்ளன அதை கண்டுபிடித்து அறிமுகபடுத்த வேண்டும் ,அப்பொழுது ஊட்டி ,குன்னூர் நகரின் நெருக்கடியை குறைக்கலாம். அதே போல கேரளா மற்றும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கூடலூரில் புதிய சுற்றுலா இயற்கை பூங்காக்கள் , படகு இல்லம் துவக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும் சுற்றுலாபயணிகள் கூட்டம் ஒரே இடத்தில் தேங்கி இல்லாமல் மாவட்டம் முழுவதும் படர்ந்து விரிந்து செல்லும் போது போக்குவரத்து கூட்ட நெரிசல்களை தவிர்க்கலாம் .
சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுத்து இந்த மலைகளின் அரசியை மெருகேற்றி அழகு படுத்தினால் தான் இந்த உலக சுற்றுலா தினம் அர்த்தமுள்ளதாக அமையும்" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் .
வழக்கமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் முதல் வாரம் வரை நீலகிரியில் இரண்டாவது சீசன் களைகட்டும் வெளிநாடு மற்றும் வட இந்திய சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிடுவது சகஜம் . தற்போது அவர்களின் வருகை இருந்தாலும் போதிய வசதி மற்றும் சுகாதாரமின்மை காரணமாக அவர்களின் வருகை குறைந்துள்ளது.

இந்த இரண்டாவது சீசன் சமையத்தில் தேயிலை வார விழா கொண்டாடப்படும் .முன்னாள் கலெக்டர் இன்னசென்ட் திவ்வியா ஊட்டி நகரின் மைய பகுதியான சேரிங்க்ராஸ் பகுதியில் உள்ள ஆடம் பவுண்டைன் அருகில் உணவு திருவிழா , கலை திருவிழா, சுற்றுலாப்பயணிகளின் சந்திப்பு ஆடல் பாடல் நிகழ்வுகள் தேயிலை விழா என்று நடத்தி அசத்தியுள்ளார் .அந்த நிகழ்வுகள் எல்லாம் தற்போது கனவாகிபோனது .
இந்த உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் , சுற்றுலா அதிகாரிகள் என்று எல்லோரும் மிஸ்ஸிங் என்பது மிக பெரிய கேள்வி குறி ?
இந்த வருட நீலகிரி இரண்டாவது சீசன் நீலகிரி ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்கத்தின் முயற்ச்சியால் சற்று களைகட்டியது என்று சொன்னால் மிகையாகாது .

Leave a comment
Upload