தொடர்கள்
அனுபவம்
திருமயிலை டு திருமலை பாதயாத்திரை – பால்கி


2026902163404384.jpeg

செப்டம்பர் 19, 2026. புரட்டாசி முதல் சனிக்கிழமை.

மந்தவெளி மாரிசெட்டி தெரு வெங்கடேச பெருமாள் கோயில் வாசலில் ஐந்து மணிக்கு ஆஜர்.

எங்கள் குழுவில் 25 பேர் இருந்தனர். பாத யாத்திரை கையேடு அனைவரிடமும் பகிரப்பட்டிருந்தது.

2026902163516526.jpeg

யாத்திரை கிளம்பியது.

மயிலை கபாலீஸ்வரம் வழியாக கடந்து முதல் நாள் வில்லிவாக்கத்தில் மஹாராஜா மினி ஹாலில் தங்கல். கடந்த தூரம் சுமார் 16 கி.மீ.

நுங்கம்பாக்கம் சங்கீதா அருகே எங்களை ஓவர்டேக் செய்தபடி ஒரு பைக் ஸ்பீடாக சர்ரென நின்றது. அவரது மகனுக்கு இந்த மாதிரி திருப்பதிக்கு பாத யாத்திரை போக வேண்டுமாம். எங்க குழு தொடர்பாளர் பெயரை வாங்கிக்கொண்டு கோவிந்தா கோவிந்தா என்றபடி அகன்றார்.

வில்லிவாக்கத்தை நெருங்கும் ஒரு ரெட் சிக்னலில் நாங்களும் நின்றோம். அருகே நின்ற இரு வீலர்கள் திருப்பதிக்கு என்று பேசிக்கொண்டனர்.

2026902163723321.jpeg

மதிய உணவு சோழவரம் லக்ஷ்மி மஹால் திருமண மண்டபத்தில் சாப்பிட்டுவிட்டு, சூரியனின் பார்வை மங்கக் காத்திருந்தோம். 3.30 மணிக்கு மீண்டும் பாத யாத்திரை தொடங்கி, பெரியபாளயம் பவானி அம்மனின் கோயிலை அடைந்தது. இரவு எட்டு மணிக்குள் அம்மனை தரிசனம் பெற வேண்டி எங்களது கால் கியரை முடுக்கினோம். அம்மனின் நல்ல தரிசனமும் கிடைத்தது.

202690216383391.jpeg

மூன்றாம் நாள் அதிகாலையில் தயாராகிவிட்டு நடக்கத் தொடங்கினோம்.

பாலவாக்கம் பிள்ளையார் கோயிலில் சிற்றுண்டியை முடித்த கையோடு சுருட்டப்பள்ளியை நோக்கி நகர்ந்தது எமது ஊர்வலம்.

அடுத்த இலக்கு அங்கிருந்து 11 கி மீ தூரத்தில் இருக்கும் நாகலாபுரம் மத்ஸ்ய அவதார திருத்தலம் உள்ள ஊர்.

2026902164316488.jpeg

வேதநாராயணப்பெருமாளைத் தரிசித்துவிட்டு அங்கேயே அருகில் இருந்த வியாபாரிகள் சக திருமண மண்டபத்தில் தங்கி விட்டோம்.

16ஆவது நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட கோயில் அது. இன்றைய நாளில் நடந்த தூரம் சுமார் 32 கி.மீ.

நான்காம் நாள் நாகலாபுரத்திலிருந்து பிச்சாட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் டிஃபன் அருந்திவிட்டு பாலமங்கலத்தில் மதிய உணவு கொண்டோம்.

2026902164437880.jpeg

மாலை 3.30 மணியளவில் வெப்பம் தணிந்த நேரத்தில் கிளம்பி நாராயனவனத்தை அடைந்தோம்.

2026902164638149.jpeg

அங்கு சுரைக்காய் சித்தர் 1700 ஆம் ஆண்டு பிறந்து 1902 ஆம் ஆண்டில் ஜீவ சமாதி பெற்றவர். அவர் எப்போதும் தன் கையில் இரண்டு சுரைக்காய்களை (நீர் மற்றும் உணவுக்காக) வைத்திருப்பதும், கம்பீரமான தலைப்பாகை அணிவதும் இரண்டு நாய்களுடன் செல்வதும் இவரது தனித்துவமான தோற்றமாகும். இங்கு அவருக்கு சுரைக்காய் வாங்கி நிவேத்தியமாக வைக்கிறார்கள்.

அதன் பின் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலை அடைந்து தரிசனம் செய்து கொண்டோம். ஸ்ரீநிவாசர் பத்மாவதி தாயாரைத் திருமண்ம் செய்துகொண்ட வரலாற்று சிறப்புமிக்க தலம் இந்த கோயில். நின்ற நிலையில் இருக்கும் இந்த பெருமாளின் திருக்கண்கள் திறந்த நிலையில் இருக்கும்.

2026902164821110.jpeg

202690216490809.jpeg

(நாராயண வனம் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில்)

2026902165001571.jpeg

(கோயிலில் இருக்கும் நாக கணபதி)

நான்காம் நாள் கடந்த தூரம் சுமார் 31 கிமீ.

ஐந்தாம் நாள் அதிகாலையில் நாராயண வனத்தில் அதிகாலையிலேயே தயாராகி புத்தூரை அடைந்தோம்.

2026902165139622.jpeg

2026902165216106.jpeg

(இடமிருந்து – வாய்ப்பாட்டில் முரளி மற்றும் மிருதங்க வித்வான் நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன்)

2026902165303960.jpeg

(இந்த யாத்திரையில் பங்குகொண்ட பாதசாரிகள் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ)

மதிய உணவுக்குப்பின் திருச்சானூர் சென்றடைந்தோம்.

ஆறாம் நாள் (24.09.2026). அங்கிருந்து தரிசன டிக்கட் முன்பதிவு செய்யாமலிருந்த என் போன்றோர் அதிகாலையிலேயே அலிப்பிரி படிகளில் ஏற ஆரம்பித்துவிட்டனர். 3550 படிகள் 11 கி.மீ தூரம் கொண்டது இந்த ரூட்.

202690216543583.jpeg

(படிகளில் ஏறுமுன்பு தேங்காய் உடைத்துவிட்டு கற்பூரம் காண்பிக்கின்றனர்)

2026902165554818.jpeg

(வழியில் இடைப்பட்ட காட்டு விலங்கினர் – காட்டு அணில்)

202690216563634.jpeg

(வழியில் இடைப்பட்ட காட்டு விலங்கினர் – காட்டு அணில்)

2026902165716373.jpeg

(வழியில் இடைப்பட்ட காட்டு விலங்கினர் – காட்டு அணில்)

2026902165745421.jpeg

(வழியில் இடைப்பட்ட காட்டு விலங்கினர் – குரங்கு)

2026902165857194.jpeg

(வழியில் இடைப்பட்ட காட்டு விலங்கினர் – மான்கள்)

2026902165938366.jpeg

(வழியில் இடைப்பட்ட காட்டு விலங்கினர் – நீல மான்)

2026902170058258.jpeg

2026902170036998.jpeg

(முழங்காலில் தவழ்ந்தேறும் படிகள் முன்பு)

2026903083159827.jpeg

இந்த தவழ்ந்து வரும் கோவிந்தனின் பக்தையின் பெயர் ஜோதி. வயது 20. கோலாரில் இருந்து தந்தையுடன் வந்து தனது மனதில் இருந்த நேர்த்திக்கடனின் உந்துதலால் அலிப்பிரி படிகளின் முதல் படியிலிருந்தே தவழ்ந்தே வருகிறார்.

படிகளில் கால் வைத்து ஏறி வரவே கஷ்டப்படும் நம்மிடையே இவர் படிகளில் தவழ்ந்து வருவதும், படிகளில்லா தரையில் இரண்டு காலின் முட்டிகளும் கைகளும் தரையில் ஊன்றி வைத்தே வருவதும் ஏழுமலையானின் அருள் தான்.


இவருடன் பிறந்தவர்கள் ஒரு இளைய தம்பியும் தங்கையும் உண்டு. அவரது ஊரில் உள்ள கோவிலில் பணி புணிபுரிகிறாராம். என்ன நேர்த்திக்கடனம்மா என்று வினவிவியதும் வந்த பதில், புன்சிரிப்பு மட்டுமே. திருமணத்தில் நாட்டமில்லையாம். தந்தை பொறுப்பாக கூடவே போய்க் கொண்டிருக்கிறார்.
த்ருட பக்தி இது தான்.

202690217014743.jpeg

(3550 ஆவது படி. திருமலையை 4 மணி நேரத்தில் அடைந்தாயிற்று)

தர்ம தரிசன வரிசையில் 10.45 க்கு சேர்ந்துகொண்டோம். அவ்வப்போது சிறிது நேர வரிசை நகர்வுகள். உணவு நேரங்களில் பெரிய தாழ்வாரத்தில் சிறப்பான உணவு. மாலை நேரத்தில் பால் என வயிற்றுக்கு குறை வைக்காமல் கோயில் நிர்வாகத்தினர் கவனிப்பு. ஆங்காங்கே தூய்மையான நிலையில் இருந்த கழிவறைகள் எங்களது தேவைகளை பூர்த்தி செய்தன. குளிக்கும் வசதியும் இருந்தன.

சுமார் 13 மணி நேர காத்திருப்புக்குப் பின் சரியாக இரவு 11.57 மணிக்கு தரிசனம் கிடைத்தது.

மறுநாள், அதாவது அடுத்த நான்கு மணி நேரத்தில் கீழ் திருப்பதிக்கு பஸ்ஸில் வந்தடைந்தோம். அங்கிருந்து சென்னைக்கு பஸ்ஸில் திரும்பினோம்.

நெஞ்சமெல்லாம் வேங்கடவன் நிறைந்திருந்தான்.