
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கான காலாண்டு தேர்வு என்று சொல்லலாம்.
அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குதிரைபேரம் ஆளுங்கட்சி அவர்களை விலைக்கு வாங்கியது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்தது.
ஒரு பொதுநல வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
தேர்தல் ஆணையம் எனவே இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவித்தது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து ராஜினாமா செய்தவர்களுக்கு ஆளுங்கட்சி மீண்டும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து இந்த வேட்பாளர்கள் இப்போது விசில் சின்னத்துக்கு வாக்கு போட வாக்கு கேட்டு வருகிறார்கள்.
இரண்டு தொகுதிகளிலும் இந்த வேட்பாளர்களுக்கு பல இடங்களில் எதிர்ப்பு,' துரோகி' என்று சொல்லி தங்கள் பகுதிக்கு வந்து ஓட்டு கேட்க ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதால் பலத்த காவல்துறைப் பாதுகாப்புடன் தான் அவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை.
ஆட்சியில் பங்கு பெறாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
அவர்கள் பிரச்சாரமே ஆளுங்கட்சி குதிரை பேரம் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர்களைப் புறக்கணியுங்கள் என்று தான் மக்களிடம் கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்கிறார்கள். .
ஒரு பக்கம் தொகுதி மக்கள் எதிர்ப்பு இது போதாது என்று ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சியே வேட்பாளரை நிறுத்தி ஆளுங்கட்சிக்கு எதிராக பிரச்சாரம் என்ற சூழ்நிலையில் தான் ஆளுங்கட்சி இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்கு வங்கி அரசியலுக்காக முதல்வர் ஜோசப் விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினார்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் செய்த பிரச்சாரம் இது தான்.
அதிமுக, திமுக இரண்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் எதிரெதிர் அணியில் இருந்தது. எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் திமுகவை தீய சக்தி என்று கடுமையாக விமர்சனம் செய்தவர்கள். அப்படிப்பட்ட திமுகவுடன் எடப்பாடி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க விரும்பியதை பிடிக்காமல் தான் இவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு எங்கள் கட்சியில் இணைந்தார்கள் என்று அவர்கள் ராஜினாமாவுக்கு வக்காலத்து வாங்கி பேசினார்.
அவர் கத்தி பேசிய தொனி செய்கைகள் இவை எல்லாம் இப்போதைக்கு கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகியும் தனது ஆட்சி சாதனையை சொல்லாமல் இரண்டு கட்சிகளும் இது பொய் என்று மறுத்த ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி அதன் மூலம் வாக்குகளைப் பெற விரும்புகிறார் ஜோசப் விஜய். இது எந்த அளவுக்கு அவருக்கு கைகொடுக்கும் ஆகும் என்று தெரியவில்லை.
அதிமுகவை பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக இந்த முறை யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்திருக்கிறது.
மதுராந்தரத்தைப் பொறுத்தவரை வன்னியர்கள் கணிசமாக உள்ள பகுதி அது. பாமக ஆதரவு இல்லை என்பது அதிமுகவுக்கு சற்று பின்னடைவு தான் என்றாலும். பெரும்பான்மை வன்னியர்கள் 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது எடப்பாடி தான் என்பதால் அதிமுகவுக்கு வாக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறது. தவிர பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமல்லாமல் திமுக அதிமுகவும் வன்னியர்கள் ஆதரவு பெற்ற கட்சிகள் தான்.
.வன்னியர்கள் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் என்று சொல்ல முடியாது. தவிர பாட்டாளி மக்கள் கட்சி நடுநிலைமைக்கு காரணம் ஆளுங்கட்சி தந்த அழுத்தம் மற்றும் பேரம்தான் என்ற பேச்சு பரவலாக அந்த தொகுதிகளில் இருக்கிறது. அதிமுக உதவியுடன் ராஜ்யசபா உறுப்பினரான அன்புமணி அதிமுகவுக்கு செய்யும் இந்த துரோகத்தை உள்ளூர் பாமகவினர் ரசிக்கவில்லை. அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தேர்தல் பணி செய்கிறார்கள். அதேபோல் பாமகவில் உள்ள ஒரு பிரிவு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வருகிறது.
விஜய் தனது பிரசாரத்தில் டெல்லியில் பாஜக தான் திமுக .....
தமிழ்நாட்டில் திமுக தான் பாஜக என்று பாஜக பற்றி பேசி பாஜகவுக்கு முக்கியத்துவம் தருவதை காங்கிரஸ் கட்சி ரசிக்கவில்லை.
இது தவிர விஜய் கலந்து கொண்ட கூட்டங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு இல்லை.
வேறொரு நாளில் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையெல்லாம் கூட்டணிக் கட்சிகள் கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளை பொறுத்தவரை தமிழக வெற்றி கழகத்திற்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி. அந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மூன்றாம் இடத்தில் இருந்தது. திமுக முதலில் போட்டியிட வேண்டாம் புறக்கணிக்கலாம் என்று இருந்தது.
திமுக மறைமுகமாக அதிமுக ஆதரவு என்ற விமர்சனம் வரும் என்ற கட்டாயத்தின் காரணமாக திமுக போட்டி போடுகிறது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல முன்னாள் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆளுங்கட்சி அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என்று உறுதிப்பட சொன்னாலும் உளவுத்துறை வேட்பாளர்களுக்கு மக்கள் எதிர்ப்பு அதிமுகவின் செல்வாக்கு இவையெல்லாம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை என்ற உண்மையை முதல்வருக்கு தெளிவுபட சொல்லி இருக்கிறது.
இதனால் ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்றக் கொள்கையை இந்த தேர்தலில் தளர்த்தி இருக்கிறது ஆளுங்கட்சி.
மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் இருந்த பெருவாரியான ஆதரவு இப்போது ஜோசப் விஜய்க்கு இல்லை என்பதும் இந்த இரண்டு தொகுதிகளிலும் கொஞ்சம் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.
டெயில்பீஸ் :தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய்க்கு இரட்டை இலை ஜுரம் வந்துவிட்டது. ஏற்கனவே இரண்டு தொகுதிகளில் பிரச்சாரம் செய்தவர் மீண்டும் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பெ.சண்முகம் "பாவம் முதல்வருக்குதோல்வி பயம் வந்துவிட்டது.எனவே தெருத்தெருவாக சுற்றுகிறார் "என்று கிண்டல் செய்து இருக்கிறார்.

Leave a comment
Upload