
இன்று ரேஷன் கடையில் சந்தித்த தேவதை. "நளினி " என்று அவருடைய அம்மா கூப்பிட்டபோது அவர் முகத்தில் அலையாக வரும் புன்னகை. அவருடைய ரேகையை வைக்க சொன்னார் ரேஷன் கடைக்காரர் . ஒரு விரலை வைக்க அது பொருந்தாமல் போக , மற்றொரு விரல் ..அதுவும் ..மற்றொரு விரல்.. கடைசியில் கட்டை விரல் பொருந்திப் போக ..அவர் முகத்தில் ஏற்பட்ட சந்தோசம்.. என்னையும் தொற்றிக்கொண்டது . அவங்க அம்மா விடம் கேட்டேன்.. என்னம்மா படிக்குது ..இல்லங்க பள்ளிக்கு அனுப்பல ...கொஞ்சம் குறைபாடு உள்ள பெண்ணுப்பா இது என்று கண்ணீரை மறைத்துக்கொண்டு , அவருக்கு தெரியாமல் சொன்னார். நளினி சந்தோஷமாய் ஒவ்வொரு பொருளாய் வாங்கி கொண்டு இருந்தார். அவருக்கு அளவு எப்படி தெரியும் என்று கேட்டேன்.. பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் ஒரு பெண் அவளுக்கு எல்லாவற்றையும் தினமும் சொல்லிக்கொடுப்பதாக சொன்னார். அவருக்கு வேறு சில நிறுவனங்களை பற்றி சொல்லி அதன் தொடர்பு எண்ணையும் கொடுத்தேன்.
இது எதையும் அறியாமல் தன்னுடைய உலகத்தில் சந்தோஷமாய்.. "நளினி "..


Leave a comment
Upload