தொடர்கள்
விகடகவியார்
கேப்டன் ஸ்மித்தை நேரில் பார்த்ததும் பெற்றோர் கண்ணீர்

2026910062228881.jpg

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கி சென்ற விமானத்தில் நடந்த கொடூர தீவிரவாத சதியை, தனது உயிரை பணயம் வைத்து இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் துணிச்சலாக முறியடித்தார். இந்த கோரத் தாக்குதலில் உடலில் பல வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், சவுதி அரேபியாவில் தபூக் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். மகனின் நிலை தெரியாமல் தவித்த மும்பையை சேர்ந்த பெற்றோர் உடனே துபாய்க்கு விமானத்தில் பதற்றத்துடன் புறப்பட்டனர்.

அப்போது விமானத்தில் இருந்த தந்தை உபேந்திராவை கைப்பேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ' நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் இன்றே உங்கள் மகனிடம் பேச வைக்கிறேன் ' என்று சொல்லி ஆறுதல் கூறினார். அதன்பின் துபாய் ஆட்சியாளரின் தனி விமானம் மூலம் ஸ்மித் மச்சார் மீட்கப்பட்டு, அபுதாபியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகனை நேரில் பார்த்த தந்தை உபேந்திரா, ' அவனது காயங்கள் மிகவும் ஆழமானவை. கடுமையான வலியால் துடிக்கிறான். ஆனால் பிற நாட்டுத் தலைவர்கள் அவனிடம் பேசும் போது மன உறுதியுடன் பேசுகிறான். தனக்கு முன் பிறர் நலனை யோசிக்கும் அவனது நற்குணமே இந்தத் துணிச்சலான செயலுக்கு காரணம்' என்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் உபேந்திர மச்சார் என்பவரின் ஒரே மகன் ஸ்மித் மச்சார். இவர் குடும்பத் தொழிலை விடுத்து விமானியாகும் ஆசையோடு நியூசிலாந்தில் 10 மாதங்கள் விமான பயிற்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து 26 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி லண்டனில் போயிங் ரக விமான பயிற்சி முடித்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் வெற்றிகரமாக விமானியாக பணியாற்றினார். பின்னர் 2022-ஆம் ஆண்டில் துபாயை சேர்ந்த ஃபிளை துபாய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். எனவே தனது மனைவி சோனலுடன் அங்கு வந்து குடியேறினார்.

தற்போது நினைவாற்றலுடன் உள்ள மச்சார் எட்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் கூறுகின்றனர் மருத்துவர்கள். அதன் பிறகு மும்பை வந்து சிறிது நாட்கள் தனது தந்தை மற்றும் தாயுடன் அவர் ஓய்வெடுக்க இருக்கிறாராம். அப்போது பிரதமர் அவரை நேரில் சந்திக்க இருக்கிறார் என்று கூறுகின்றனர்.