தொடர்கள்
விகடகவியார்
விலைவாசி அச்சுறுத்தல்--ஜாசன்

2026909204450129.jpeg

26 கிலோ கொண்ட அரிசி விலை இப்போது 2100 என்று உயர்ந்திருக்கிறது.

சென்ற மாதம் இதன் விலை 1700. 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட சர்க்கரை இப்போது 70 ரூபாய் என்று உயர்ந்திருக்கிறது.

நல்லெண்ணெய் விலை கிலோவுக்கு 40 முதல் 50 ரூபாய் அதிகரித்துள்ளதாக

மொத்தவிற்பனை வியாபாரிகள் சொல்கிறார்கள். அப்படி என்றால் சில்லறை வெளியில் லிட்டருக்கு 60 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு . இதற்கு அவர்கள் காரணமாக சொல்வது எள் உற்பத்தி குறைந்து விட்டது என்கிறார்கள்.

அரிசி மற்றும் சர்க்கரை விலை உயர்வுக்கு இதே காரணத்தைத்தான் சொல்கிறார்கள் வியாபாரிகள்.

வியாபாரிகள் சங்கத் தலைவர்கள். தமிழ்நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி, வரி வருவாய் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது நடுத்தர குடும்பத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் குடும்ப அட்டைகளில் உபயோகிக்கப்படும் பச்சரிசி, புழுங்கல் அரிசி ,இலவச கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை வாங்கி பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

பொதுவெளியில் உள்ள விலை அவர்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை என்பதுதான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் எல் நினோ (El Niño) விளைவால் சூழ்நிலை மேலும் மோசம் அடையலாம். அதை சமாளிக்க தமிழக அரசு இப்போது இருந்தே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் நடுத்தர குடும்ப இல்லத்தரசிகள்.