கேரளம் பூரம் திருவிழாவின் ஹீரோ பல்லட்டு பிரம்மதத்தன் யானை கடந்த ஞாயிற்று கிழமை மாலை கோட்டயம் ஏறட்டுபேட்டா என்ற இடத்தில் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்து போனது என்ற அதிர்ச்சி தகவல் கேரளம் கோயில்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளம் கோயில்களின் கூட்டு கமிட்டி தலைவர் ராஜேஷ் பல்லட் மேளம்ப்ரா இல்லத்தில் மதம் பிடித்து ஓய்வில் கட்டப்பட்டு இருந்த பொழுது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர மின்னல் இந்த 65 வயது வீர கொம்பன் மேல் தாக்க அந்த மலை பிளிறிட்டு தரையில் சாய்ந்து உயிரை விட்டது.
பிரம்மதத்தன் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கேரளத்திற்கு
கொண்டுவரப்பட்ட அழகிய யானை!.

பத்து அடி உயரம் கொண்ட கம்பீர யானையின்
அழகே திருச்சூரில் வருடந்தோறும் நடைபெறும் பூரம் விழாவில் இவர் மேல் தான் பூரம் ஸ்வாமியின் திடம்பு பரமக்காவு தேவியின் சிலையை வைத்து நள்ளிரவு பரமக்காவு தேவஸ்வம் பூரம் பவனி நடைபெறும் போது இவர் கம்பீரமாக வருவதை லட்ச கண்கள் பார்த்து தரிசிப்பார்கள்.
கம்பிரமான, அழகான, அமைதியான யானையான இவரை கஜ கஸ்தூபாமா பல்லட் பிரமதத்தன் என்று அன்பாக அழைத்துவந்தார்கள்.

30 வருடங்களுக்கு முன் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கொம்பன் இவர்.
ஆரம்பத்தில் இருந்து லக்கட்டூர் குன்னகட் தாமோதரன் நாயர் என்ற ஓமனசேட்டனின் செல்ல பிள்ளை இந்த பிரம்மதத்தன்
ஓமனசேட்டான் தான் இவரின் 25 வருட பாகன்.
2021 ஆம் வருடம் ஓமனசேட்டான் இறந்து விட அவரின் இல்லத்திற்கு பிரம்மதத்தனை அழைத்து செல்ல தன் பாகனின் உயிரற்ற உடலை தந்ததால் தடவி கொடுத்து கண்கலங்கி நின்றுள்ளது இந்த கம்பீர யானை !.
கடந்த 30 வருடமாக மத்திய கேரளம் பகுதியில் கோயில் திருவிழாக்களில் இவரின் கம்பிர விசிட்டால் புனித திடம்பு சிலையை தாங்கி வருவது தவறாமல் இருந்து வந்தது.
முப்பது வருடத்திற்குமுன் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புதுப்பாளைய பாப்பள்ளபறம்பில் போத்தன் வர்கீஸ் வளர்த்துவர புதுப்பாளை பிரம்மதத்தன் என்று அழைக்கப்பட்ட யானை, பல்லட்டு குடும்பத்துடன் இணைத்தவுடன் இவரின் பெயர் பல்லட்டு பிரம்மதத்தன் என்று மாற்றப்பட்டுள்ளது.

யானையின் சொந்தக்காரர் ராஜேஷ் கண்ணீருடன் கூறும் போது,
" இந்த கம்பீர யானை எங்கள் குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினர்.
நானும் என் சகோதரர்களும் இவரை அன்பாக வளர்த்து வந்தோம்.
ஒவ்வொரு முறையும் கோயில் திருவிழாவுக்கு செல்லும் போது எங்க அம்மாவிடம் ஆசீர் பெற்று தான் செல்லுவார் இவர்.
அக்டோபர் 4 ஆம் தேதி உலக வனவிலங்கு நாளன்று இவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார்.
இந்த கம்பீர யானையின் இறப்பு அந்த பகுதி மக்களின் கண்களை குளமாக்கின. ஏராளமான மக்கள் பூ மாலை மற்றும் மலர் வளையத்துடன் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
யானையின் இறப்பு செய்தியை கேட்டு ராஜேஷ் இல்லத்திற்கு நேரில் வந்த
கிறிஸ்தவ பாதிரியர்கள் சிறப்பு பிராத்தனை செய்து யானை உடலில் புனித நீரை தெளித்தனர்.
யானையை கட்டிபோடாமல் இருந்திருந்தால் மின்னல் தாக்கும்போது அங்கிருந்து ஓடி தப்பித்திருப்பார் பாவம் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.
2021 ஆம் ஆண்டு மே மாதம் அசாம் பாமுனி மலை பகுதியில் குண்டொலி காட்டில் மின்னல் இடி மின்னல் தாக்கி 18 யானைகள் இறந்த சோகம் ஏற்பட்டுள்ளது .

வனத்துறையின் பரிசோதனை மற்றும் கால்நடை மருத்துவரின் உடல்கூறாய்வுக்கு பின் ராஜேஷ் பல்லுட்டு இல்ல வளாகத்தில் பிரம்மதத்தனின் உடல் எரியூட்டப்பட்டது.
இந்த கம்பீர பூரம் திருவிழா புகழ் யானையின் இறப்பு கேரளத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

Leave a comment
Upload