
உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சிற்றூர்களிலும், கிராமங்களிலும் "No 10 Messi " என்ற டி ஷர்ட் அணிந்த சிறுவர்களை, இளைஞர்களை நம்மால் காண முடியும். அவ்வாறு பெருமை கலந்த பேரன்புடன் மக்கள் கொண்டாடும் தலை சிறந்த காற்பந்து விளையாட்டு வீரர் லயோனல் மெஸ்ஸி உலக போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.
' கிரிக்கெட்,கிரிக்கெட் ' என்று பித்து பிடித்தது போல கிரிக்கெட் வீரர்களைப் ஆராதிக்கும் ரசிகர்களைத், தன்னுடைய ஆட்டத் திறமையால் கால் பந்து பந்தயங்களைக் காண ஆர்வத்தைத் தூண்டியவர்களில் முக்கியமானவர் மெஸ்ஸி.
பீலே, மாரடோனா, ரொனால்டோ போன்ற கால்பந்தாட்ட வீரர்கள் வரிசையில் சிங்கம் போல நின்று விளையாடியவர் லயோனல் மெஸ்ஸி .2022 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு அவரை உலகம் GOAT (Greatest Of All Times) என்று வியந்து பாராட்டுகிறது. இப்போது அவர் ஓய்வு பெறும்போது விளையாட்டு உலகமே கண்ணீர் மல்க பிரியாவிடை தருகிறது.
அவரது ஓய்வினை மெஸ்ஸி ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் அறிவித்து இருந்த போதிலும், அவருக்கு சிறப்பான முறையில் விடை தர வேண்டும் என்று நினைத்த அர்ஜென்டினா காற்பந்து கழகம் அவர் மீண்டுமொரு போட்டியில் விளையாட வேண்டும் என விரும்பிக் கேட்டுக் கொண்டது.
அனைவரது விருப்பத்துக்கும் தலை வணங்கிய மெஸ்ஸி புவனஸ் அயரஸ் நகரின் எஸ்டாடியோ விளையாட்டு அரங்கில் இந்த ஆறாம் தேதி நடைபெற்ற அர்ஜென்டினா-பெனின் போட்டியில் விளையாடினார். விளையாட்டு துவங்கிய 71வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இடது காலால் அபார கோலாக மாற்றினார். மேலும் இரண்டு கோல்கள் அடிக்க உதவினார்.
அர்ஜன்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த மைதானத்தில் திரண்டிருந்த 85000 கால்பந்து ரசிகர்களும் ஒன்று கூடி, 'மெஸ்ஸி, மெஸ்ஸி' என்று முழக்கமிட்டனர்.
இந்தத் தலைமுறை இளைஞர்களை கால்பந்து விளையாட்டை ரசிக்க வைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மெஸ்ஸி. மெஸ்ஸியின் மந்திர எண் 10 என்றாலும் அவர் எல்லா நேரங்களிலும் அந்த எண்ணைத் தேர்நதெடுக்கவில்லை. பார்சிலோனா, அர்ஜன்டினா, இன்டர் மியாமிக்காக விளையாடும் போது அதிர்ஷ்ட எண் '10'ஐ தேர்ந்தெடுத்து விளையாடினாலும் பாரிஸ் போட்டியின் போது எண் '30' ஐ தேர்நதெடுத்தார். ஏனெனில் அவரது நண்பர் நெய்மர் அப்போது பத்தாம் நம்பரை எடுத்துக் கொண்டார். எனவே அந்த 10 என்ற எண் பொறித்த ஜெர்ஸியை அவர் மிகவும் நேசித்தார் என்று சொல்லலாம் .

மெஸ்ஸியின் எளிமையும், அன்பும் அவரை இளைஞர்களின் நாயகன் ஆக்கின. மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த அபார விளையாட்டு வீரன் மெஸ்ஸி . 13வது வயதில் இவரது வளர்ச்சி வயதுக்கு ஏற்ற அளவில் இல்லை என்பதால், பார்சிலோனா கிளப் அவரை ஸ்பெயினுக்கு அனுப்பி சிகிச்சை பெற வைத்தது. சிகிச்சைக்குப் பிறகு அவர் உயரமானார் என்ற போதும், கால்பந்தாட்ட ஆட்ட தரப்படி அவர் குள்ளமானவர். 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட அவரது சாதனைகள் விளையாட்டு உலகில் மைல்கற்களாக அமைந்தன.
எனவே, இளையவர்களின் கனவு நாயகனாக மெஸ்ஸி கொண்டாடப் படுகிறார். இனிய குடும்பம், எளிய உருவம், பண்பான செயல்பாடு, அயராத உழைப்பு என தன்னம்பிக்கை மிளிரும் மெஸ்ஸி ஒரு உதாரண மனிதனாக கருதப்படுகிறார். 'மெஸ்ஸியால் முடிகிறது என்றால் என்னாலும் முடியும்' என்று ஒவ்வொரு இளைஞரும் உற்சாகமாக பேச வைத்தது அவரது வெற்றி.
21 ஆண்டுகள் அர்ஜண்டினாவுக்காக விளையாடி இருக்கிறார் மெஸ்ஸி. இவரது சாதனை பயணத்தில் 2022 இல் உலக கோப்பையைக் கைப்பற்றினார். 2 கோபா- அமெரிக்கா பட்டங்கள். 208 போட்டிகளில் 126 கோல்கள் .எட்டுமுறை Ballon D'Or விருதுகள் . 2008 இல் அர்ஜென்டினாவுக்காக ஒலிம்பிக்கில் விளையாடி தங்கப்பதக்கம் என்று இவரது விருதுகளின் பட்டியல் நீள்கிறது.பார்சிலோனா காற்பந்தாட்ட கழகத்தின் வழியாக பத்துமுறை La Liga டைட்டில்களை வென்றவர் மெஸ்ஸி.
இப்போது உலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அமெரிக்காவின் இன்டர் மியாமி (Inter Miami CF) அணியில் இவர் விளையாட்டுப் பயணம் தொடர்கிறது.
ஒரு விளையாட்டு வீரர் என்பதைத் தாண்டி உலக மக்களின் நேசத்தையும், ஆதரவையும் பெற்றுள்ளார் மெஸ்ஸி. அவருக்கு பிரியாவிடை தந்த அந்த தருணத்தில் அர்ஜன்டினாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவர் கண்களில் நீர் ததும்பியது.

"அர்ஜென்டினா அணிக்காக விளையாடுவது ஒருவருக்கு கிடைக்கக் கூடிய மிக அழகான விஷயம். உண்மையிலேயே இதை விட அழகானது எதுவுமில்லை. தவிர்க்க முடியாமல் எனது வாழ்க்கையின் மிகவும் சோகமான நாளை எதிர் கொள்கிறேன்.
All that's left for me to do is say thank you. It's meant so much to me to wear this shirt for 20 years. I never stopped striving, fighting, or wanting to be here. I will miss you all." என்று உருக்கமாக உரையாற்றினார்.
உலக காற்பந்தாட்ட பந்தய அரங்குகளும் அவரது ரசிகர்களும் ஒரு குரலில் சொல்வதெல்லாம் ," We will miss you Messi "
Farewell to the GOAT, Lionel Messi!

Leave a comment
Upload