தொடர்கள்
பொது
கேரக்டர் - 4 வேங்கடகிருஷ்ணன்

2026909132558818.jpg

தி.நகர் டன்க்ட்(dunk'd) உணவகத்தில் பணிபுரிபவர் சங்கீதா அக்கா, எப்போதும் சிரித்த முகம். வாடிக்கையாளர் பேசுவதை கவனமாக கேட்பார். பின்னர் அதில் சிறிய ரசனையான மாற்றங்களை சொல்வார். உதாரணமாய் சாம்பார் இட்லிக்கு நெய் வேண்டாம் என்று சொல்பவருக்கு , "ஹெல்தியா நல்லெண்ணெய் இருக்கு சார் " என்பார் . வடை மேல சாம்பார் ஊற்றிய பின் "வெங்காயம் தூவட்டுமா இல்ல மொறு மொறுன்னு காராபூந்தி போட்டு தரட்டுமா?" அவர் கேட்கும்போதே நாம் ஹோட்டலில் இருப்பதை மறந்து வீட்டிலிருப்பதை போல உணர்வோம். இதில் முக்கியமான விஷயம் , ரெகுலராக வரும் வாடிக்கையாளர்கள் என்ன எப்படி சாப்பிடுவார்கள் என்பது அவருக்கு அத்துப்படி . அவர்கள் வந்து நின்ற உடனே " வாங்க சார் , இட்லி கடப்பா மேல நல்லெண்ணெய் தானே சார் " என்று ஒரு ஒப்புதல் வாங்கி கொண்டு கட கட வென்று வேலையில் இறங்கி விடுவார். வடிக்கையாளர் சேவை எப்படி இருக்கவேண்டும் என்பதை தினமும் தனது செயல்பாட்டின்முலம் பாடமாய் சொல்லித்தருகிறார் , சங்கீதா அக்கா. (கொடுத்து வைத்த ஹோட்டல்காரர் ....)