
தமிழகத்தைச்சேர்ந்த மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
மணிக்கொடி கால எழுத்தாளர்.
முதலில் திருச்சியில் புடவைக்கடையில் வேலை, பிறகு கடலூரில் சிறுசிறு பணிகள். சென்னைக்கு த் திரும்பி பல இடங்களில் வேலை.
ஆர்யபவன் உணவுச்சாலை பணி.
உப்புசத்யாகிரப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம். சிறையில் வ.ரா, ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் ஆகியோரின் நட்பு கிடைத்தது.
1932ல் மறுபடியும் சென்னை.
இந்த முறை ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு வென்றார்.
தொடர்ந்து மணிக்கொடி இதழில் எழுத ஆரம்பித்தார்.
மணிக்கொடி பற்றி எழுதிய "மணிக்கொடி காலம்"
1982ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது.
திரைப்படத் துறையிலும் கவனம் செலுத்தினார். கிட்டத்தட்ட 15படங்களுக்குமேல் பணியாற்றியவர். அதில் போலீஸ்காரன் மகள், பணத்தோட்டம், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்

முக்கியமானவை. குபேர குசேலா என்ற படத்தை ஆர்.எஸ். மணியுடன் சேர்ந்து இயக்கினார்.
இவரை எப்போது சந்தித்தேன்?
இலக்கிய சிந்தனைக் கூட்டம், மற்றும் அதன் வருடாந்திர நிகழ்ச்சியில் சந்தித்து பேசி ஆட்டோகிராப் வாங்கினேன்.

Leave a comment
Upload