தொடர்கள்
அழகு
நோபல் பரிசு பெற்ற தமிழ் வம்சாவளிப் பெண் - மாலா ஶ்ரீ

2026910070253319.jpeg

உலக அமைதி மற்றும் மனித உரிமை: தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வசிக்கும் ஒரு தமிழ் வம்சாவளி குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு, செப்டம்பர் 23-ம் தேதி சட்ட அறிஞரான நவநீதம் என்கிற ‘நவி’ பிள்ளை (Navanethem ‘Navi’ Pillay) பிறந்துள்ளார்‌. தற்போது 85 வயதான நவநீதம் பிள்ளைக்கு, 2026-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேலும் இவர் சர்வதேச சட்டம், உலக அமைதி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஆற்றிய உன்னதமான பணிகளைப் பாராட்டி நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெறும் முதல் தமிழ் வம்சாவளி பெண் என்ற வரலாற்றுப் பெருமையை நவநீதம் பிள்ளை பெற்றிருக்கிறார்.

2026910070327110.jpeg

நவநீதம் பிள்ளையின் தாத்தா, பாட்டி ஆகிய இருவரும் தமிழகத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள கரும்பு தோட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கு வந்துள்ளனர். நவநீதம் பிள்ளையின் தந்தை, ஒரு பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்துள்ளார். எனினும், வறுமையான மற்றும் நிறவெறி (Apartheid) சூழலிலும் சிறப்பாகப் படித்து, நேட்டல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை நவநீதம் பிள்ளை முடித்துள்ளார். பின்னர், உலகின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் முனைவர் (Doctorate) பட்டம் பெற்ற முதல் தென்னாப்பிரிக்கர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக் காலத்தில், அதற்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா உள்ளிட்ட தலைவர்களுக்காக நீதிமன்றத்தில் நவநீதம் பிள்ளை வாதாடினார். கடந்த 1995-ம் ஆண்டில் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க அதிபரான பிறகு, இவர் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தின் வெள்ளையர் அல்லாத முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். போர்க் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் கற்பழிப்புகளை ‘இனப்படுகொலைக் குற்றம்’ (Genocide) என்று சட்டப்பூர்வமாக அங்கீகரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பையும் நவநீதம் பிள்ளை வழங்கியுள்ளார்.

கடந்த 2008 முதல் 2014-ம் ஆண்டு வரை ஐ.நா. சபையில் நவநீதம் பிள்ளை மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதியாகவும், மியான்மர் ராணுவத்தின் மீதான ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கின் சர்வதேச நீதிமன்ற (ICJ) நீதிபதியாகவும் நவநீதம் பிள்ளை பணியாற்றியுள்ளார். இதையடுத்து, “போர்களும் மோதல்களும் உலகை அச்சுறுத்தும் சூழலில், அமைதியைக் காக்க சர்வதேச சட்ட நெறிமுறைகள் இன்றியமையாதவை. விதிவிலக்கற்ற துணிச்சலுடனும் நேர்மையுடனும் உலகளாவிய சட்ட ஒழுங்கை நிலைநாட்டப் போராடியதற்காக நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது" என்று நோபல் பரிசு குழு குறிப்பிட்டுள்ளது.

2026910070358802.jpeg

மருத்துவம்: கார்ல் டெய்சோர்த் (Karl Deisseroth), பீட்டர் ஹெகிமான் (Peter Hegemann) மற்றும் ஜார்ஜ் நகேல் (Georg Nagel) ஆகிய 3 பேருக்கும் கூட்டாக நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள், ஒளியைக் கொண்டு வாழும் மூளை நரம்பு செல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஆப்டோஜெனடிக்ஸ் (Optogenetics) எனும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளனர். இது, மூளையின் மர்மங்களை அறிவதில் பெரும் பங்கை ஏற்படுத்தியுள்ளது.

2026910070440320.jpeg

இயற்பியல்: பெல்ஜியம் நாட்டின் விஞ்ஞானியான பிரான்சிஸ் ஹால்சென் (Francis Halzen) என்பவர், அண்டார்டிகாவில் உள்ள ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கான (IceCube Neutrino Observatory) சிறந்த பங்களிப்பு மற்றும் விண்வெளியில் இருந்து வரும் அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரினோ துகள்களைக் (Ghost Particles) கண்டறிந்ததற்காக நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

வேதியியல்: பிரான்ஸ் நாட்டின் ஹென்றி பி.கஹான் (Henri B.Kagan) மற்றும் ஜப்பான் நாட்டின் கென்சோ சோவாய் (Kenso Soai) ஆகிய 2 விஞ்ஞானிகளுக்கும் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில், வேதியியல் மூலக்கூறுகளின் கண்ணாடி பிம்பங்கள் (Mirror Images) தொடர்பான மர்மத்தை உடைத்து, சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில் (Asymmetric Organic Synthesis) ஆட்டோகேடலிசிஸ் மற்றும் நேரியல் அல்லாத விளைவுகளைக் கண்டுபிடித்து உள்ளனர். இது, நவீன மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

2026910070518200.jpeg

இதேபோல், கனடா நாட்டின் எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஆனி கார்சன் (Anne Carson) என்பவருக்கு, அவரது ‘துணிச்சலான மற்றும் புதுமையான படைப்பு’களுக்காக நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.