தொடர்கள்
அழகு
வந்தே பாரத் ரயில் !! முதல் பழங்குடியினப் பெண் ! - மாலா ஶ்ரீ

2026910070722287.jpg

குஜராத் மாநிலம், டாட்டாநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கடந்தாண்டு காணொலி காட்சி மூலமாக வடகிழக்கு ரயில்வேயின் டாடா நகர்-பாட்னா உள்பட 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். டாடா நகரிலிருந்து பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு செல்லும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை லோகோ பைலட் எஸ்.எஸ்.முண்டாவும், உதவி லோகோ பைலட் ரித்திகா திர்கி (27) என்ற பெண்ணும் இயக்கி வருகின்றனர்.

யார் இந்த கோ-பைலட் ரித்திகா திர்கி? ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா (Gumla) பகுதியைச் சேர்ந்த எளிய பின்னணியைக் கொண்ட பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னர், பிஐடி மிஸ்ராவில் (BIT Mesra) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். இதைத் தொடர்ந்து, பொறியியல் பட்டத்தை பெற்ற பிறகு, இந்திய ரயில்வேயில் தனது தொழில் வாழ்க்கையை பழங்குடியின பெண்

ரித்திகா திர்கி தொடர விரும்பினார்.

2026910070745989.jpg

இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டில் தென்கிழக்கு ரயில்வேயின் (SER) சக்ரதர்பூர் கோட்டத்தில் 'ஷண்டர்' (Shunter) ஆகப் பணியில் சேர்ந்தார். பின்னர், சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை இயக்கிய ரித்திகா திர்கி, சீனியர் உதவி லோகோ பைலட்டாகப் பதவி உயர்வு பெற்று, அவருக்கு டாடா நகர்-பாட்னா இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதில்

லோகோ பைலட் எஸ்.எஸ்.முண்டாவுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

டாடா நகரிலிருந்து பாட்னா நகருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைப்பதை பார்த்த பிறகு, ஊடகங்களிடம் பேசிய பிஐடி மெஸ்ராவின் இயந்திர பொறியாளரும் மூத்த உதவி லோகோ பைலட்டுமான ரித்திகா திர்கி, “இந்தியாவில் உள்ள பெண்கள் போதுமான அளவு கடினமாக முயற்சித்தால், தங்களின் அனைத்து இலக்குகளையும் அடைய முடியும் என்று நம்புகிறேன். ஆம், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதில் எனது சிறந்த பங்களிப்பை உறுதியாக வழங்குவேன்.

இந்திய பெண்களுக்குள் அந்த ஆர்வம் இருக்கும் வரை, அவர்களால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்! வேறெங்கும் ஒரு வழக்கமான வேலையைத் தேடுவதற்குப் பதிலாக ரயில்வேயில் சேர நான் முடிவு செய்தபோதே, அதில் எப்போதும் ஒரு சாகச உணர்வு இருந்தது. மேலும் பல பெண்கள் இதை ஒரு தொழிலாக ஏற்றுக்கொண்டால் நான் விரும்புவேன். பெண்களால் எப்போதும் மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும்!” என்ற ரித்திகா திர்கி, தற்போது தன் கணவருடன் ஜாம்ஷெட்பூரில் வசித்து வருகிறார்.

“இது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பிற சமூக இனப் பெண்களையும் இந்திய ரயில்வே துறையில் தொழில் வாழ்க்கையைத் தொடர நிச்சயமாக ஊக்குவிக்கும்!” என்று தென்கிழக்கு ரயில்வேயின் முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் (SER) தீபக் ஜா உறுதியுடன் தெரிவித்தார்.