
ராமேஸ்வரம் - சென்னை விரைவு வண்டி மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தபோது மக்கள் பெருங்கூட்டம் அந்த வண்டியில் ஏற தயாராக இருந்தது.
முன்பதிவு பெட்டியான S6 கோச்சில் ஏறியவர்களில் கர்பிணிப் பெண்ணும் ஒருவர், ஆனால் அவருக்கு ஒதுக்கி இருந்தது மேல் இருக்கை,சன்னலோரமாக ஒரு முதியவர்மேல்சட்டை போடாமல், நாலு முழ வேட்டி, கருத்தில் உருத்திராட்சம் அணிந்து, தோற்றத்தில் நாவுக்கரசர் படத்தில் வரும் சிவாஜிபோல அந்த இடத்திற்கு சம்பந்தமில்லாததுபோலே அமர்ந்திருந்தது அவர்களுக்கு எரிச்ச்சலைக் கூட்டியது,
யோவ் எழுந்திரு,என்றவர்களைப் பார்த்ததும் புரிந்துக்கொண்டவர்,
சிரித்தபடி எழுந்து அவர்களுக்கு இடம்கொடுத்து ஓரச் சீட்டிற்குச்சென்று அமர்ந்துக்கொண்டார் .
பரமக்குடியில் ஏறிய இளைஞன் ஒருவன் தான் காலை நேர்முகத் தேர்விற்கு சென்னைசெல்வதாகவும், உறங்க வேண்டும் என கேட்டு தனது நடு இருக்கையை பிரித்துப் போட்டுக்கொண்டு படுத்து உறங்கினான், அமரக்கூட முடியாது போனாலும் அவரிடத்தில் எந்தவித சலனமோ முகத்தில் இல்லை, மேலே உள்ள இருக்கைக்கு தன்னால் ஏறமுடியாது, தூக்கம் வராமல் பக்கவாட்டில் அமர்ந்தபடி பயணம் தொடர்ந்தது. வண்டியானது காரைக்குடி வந்த போது, பக்கவாட்டில் இருந்த சீட்டிற்கும் ஆட்கள் வர இவர், அவர்களிடம் மேல் இருக்கைக்கு மாற்றாக அந்த இருக்கையை கேட்டபோது அதெல்லாம் முடியாது, என மறுத்து விட்டனர். ரயில் கதவை சார்த்திக்கொண்டு கை கழுவும் இடத்தில்அமர்ந்தபடி பயணம் தொடர்ந்தது அந்தப் பெரியவர்க்கு.
திருச்சி நிலையம் வந்ததும், கர்ப்பிணிப் பெண் கழிவறைக்கு செல்ல முற்பட்ட போது, கொஞ்சம் நேரம் காத்திருங்கள் எனச் சொல்லி இவர் கழிவறையின் உள்ளேபுகுந்தார், அவசரமாக அவர் உள்ளே புகுந்ததைப் பார்த்த பெண்னுடன் துணைக்கு வந்தவர் , பிச்சைக்காரனை எல்லாம் யார் வண்டியில் ஏற்றினது ? என சப்தம்எழுப்பிட,அனைவரும் அந்தப் பெண்மணியின் கருத்திற்கு வலு சேர்த்தனர்.
கழிவறை சுத்தமாக இல்லை, நீயோ நிறைமாதம், ஏதாவது தொற்று வர வாய்ப்பு உள்ளதுஅதனால்தான் சுத்தம் செய்தேன் இப்போது செல்லுங்கள் என சொல்லிவிட்டுசிரித்தபடியே வெளியே வந்தார்
மேல் இருக்கை இளைஞனும் கீழே இறங்கி வருவதைப் பார்த்ததும், சிறிது நேரம் இருப்பா இதோ முடித்து விடுகிறேன் என்று கூறி அடுத்த கழிவறை மற்றும், கையலம்பும் இடம் என அனைத்தையும் கழுவி சுத்தம் செய்துவிட்டு கீழேஅமர்ந்த போது, அங்கு வந்த பயணச்சீட்டு பரிசோதகர் “ரொம்ப நன்றிங்க ஐயா உங்கள்சேவைக்கு, என்கிட்டே சொன்னால் நான் செயச் சொல்லிருப்பேன் உங்களுக்கு ஏன் சிரமம் , நீங்கள் ஏன் உங்கள் இருக்கையில் அமராமல் இங்கே உட்கார்ந்துஇருக்கிறீர்கள் என்று கேட்டு வாங்க நான் அவர்களை எழுப்பிவிடுகிறேன் என்றபோது, கேட்டார்கள்,கொடுத்தேன் இதிலென்ன இருக்கு? எங்க உட்கார்ந்தாலும் வண்டிசென்னைக்குத்தானே போகப்போகுது என சிரித்தபடி எளிமையாக பதில் கூறினார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு மட்டும் இவர் நிச்சயமாக சாதரணமானஆளாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்து, ஐயா, நீங்களும் சக பயணிதானே ஏன் அதை அவர்களிடம் கூறலாமே,
ஏன் மறைத்துக்கொண்டு இப்படி அவதிப்படுகிறீர்கள், என்று கேட்டபடிபேச்சுக்கொடுத்தான்.
அவர்கள் கேட்கா விட்டாலும் என்னுடைய அந்த கீழ் இருக்கைதான் அவர்களுக்கு வசதி, உனக்கு நேர்முகத் தேர்வு இருப்பதால் தூங்குவதற்கு அந்த இருக்கைதான் வசதி, அதுபோல்தான் அவரவர் வசதி, அவரவர்களுக்கு விட்டுக்கொடுப்பதால் கேடு ஏதும்இல்லை.
அதற்காக கழிவறையைச் சுத்தம் செய்வதெல்லாம் கொஞ்சம் அதிகப்படிதான் என்றான்.
சிரித்தவர்,அது என் பொண்ணு, நீ என் பெயரன் உங்கள் ஆரோக்கியம் எனகுத்தானே முக்கியம் என்றவர் என் பார்வையில் நீங்கள் எல்லோரும் ஒன்றுதான், அன்புதானப்பா வாழ்க்கை, அந்த அன்புதான் நம்மை மனிதனாக்குகிறது, அதுதான் இயற்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பெரிய பாடம், அன்பாய் இரு,அதுவே உனக்கு இன்பமானவாழ்வைத் தரும் என அவனை ஆசிர்வதித்தவர்
ஆமாம் நீ உனக்கு நாளை நேர்முகத் தேர்வு என்றாயே, எங்கே ? என கேட்டார்,
Happy Stay – Five Star Hotel என்றான்,
என்ன ? என திரும்பக்கேட்டார். உங்களுக்கு புரியாது தத்தா என்றான்
புரிய வேண்டாமப்பா என்று அமைதியானார்.
பொழுது விடிந்து,வண்டி சென்னை எக்மோரில் நிற்கவும், சக பயணிகள் இறங்கிய பின் மெதுவாக இறங்கினார் அந்த பெரியவர்,
கீழே இறங்கி நின்ற இளைஞனைப் பார்த்து போய் வருவதாக கண்களால் அவனுக்கு சாடைக் காட்டியபோது , அங்கு வந்து நின்ற Rolls Royce காரில் இருந்து இறங்கிய ஓட்டுனர் ஓடி வந்து அவருக்கு வணக்கம் வைத்து அழைத்துச் சென்றதைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
Hotel - Happy Stay என எழுதியிருந்தது காரின் பின்புறம் .

Leave a comment
Upload