தொடர்கள்
அனுபவம்
நினைவலைகள் : நவீனத் தமிழ் எழுத்தாளர் மற்றும் கவிஞர் சுப்பிரமணிய ராஜூ - அம்பத்தூர் ரங்கராஜன்

2026922164241805.jpg


06/06/1948 பாண்டிச்சேரியில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிபடிப்பு,

நியூகாலேஜில் புகுமுகவகுப்பு, ஜெயின் கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம்

புகழ்பெற்ற டிவிஎஸ் சுந்தரம் கிளைட்டன், டி.டி.கே நிறுவனங்களில் பணிபுரிந்தார்.

06/7/1975 எழுத்தாள தம்பதியரான து.ராமமூர்த்தி,சரோஜா மகளான பாரதியை கரம் பிடித்தார். இருமகள்கள்.

இவரைப்பற்றி பிரபஞ்சன் அவர்கள் கூறியது, “சென்னைக்கு வந்த நாள் தொட்டு அவருடன் நட்பு கூடியது. எங்களுடைய நட்பு வட்டத்தில் நல்ல வேலையும் சம்பளமும் வாய்த்த மனிதர். அக்கால எழுத்தாளர் பலருக்கும் நான்உள்பட கணிசமாக உதவியவர்”.

1970களின் தொடக்கத்தில் கவிதைகள் கசடதபற வில் எழுதி இலக்கிய உலகில் காலடி வைத்தார். சாவி இதழில் விஸ்வாமித்திரன் என்ற பெயரில் சினிமா விமர்சனங்கள் வெளியானது.

தொடர்ந்து குமுதம், திணமணிகதிர், கசடதபற இதழ்களில் முத்திரை பதித்தார்.

இன்று நிஜம் என்ற அவரின் சிறுகதை தொகுப்பு அவர் வாழ்ந்த காலத்தில் வெளியானது.

10/12/1987 சென்னை நந்தனம் சிக்னல் அருகே விபத்தில் காலமானா‌ர்.

24சி வேதபுரம் முதல் வீதி என்ற வெளி வராத படத்திற்கு அவர் எழுதிய பாடல், கங்கை அமரனின்இசையில் சுசிலா அவர்கள் பாடினார்கள்.

சுப்பிரமணிய ராஜூவின் மறைவுக்கு பின் அவரின் நெருங்கிய நண்பர்களான மாலனும் பாலகுமாரனும் இணைந்து 20 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அவரின் நினைவைப்போற்றும் வகையில் "அன்புடன் " என்ற தொகுதியை இந்தியா டுடே வெளியீடாகக் கொண்டுவந்தனர்.

பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜூவை சாயலாகக்கொண்டு இரும்பு குதிரைகள் நாவலை முதல் ஸ்நேகிதனும் முழுஸ்நேகிதனுமான விஸ்வநாதன் என்கிற சுப்பிரமணிய ராஜுவுக்கு என சமர்ப்பித்தார்.

கமலஹாசன் தன் நண்பரின் நினைவாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் தன் ஒரு கதாபாத்திரத்திற்கு சுப்பிரமணிய ராஜூ எனப் பெயரிட்டார்

ஏப்ரல் 1980மாத இலக்கிய சிந்தனைக்கூட்டத்தில் ஆட்டோகிராப் வாங்கினேன்.

2026922164419157.jpeg